பிளாக்கரில் பிளாக்கை தொடங்குவது எப்படி? | How to Start a Blog Using Blogger in Tamil?

பிளாக் எழுதுவது என்பது மிகச் சிறப்பான விஷயம். ஏனெனில் நீங்கள் விரும்பியதை மற்றவர்களுடன் பகிர முடியும். அதுமட்டுமில்லாமல் உங்கள் பிளாக்கில் இருந்து ஒரு நியாயமான வருமானத்தையும் பெற முடியும்.

இங்கே Tamilbold -ல், உங்களுக்காக ஒரு வலைப்பதிவை(blog) உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல பிளாக்கிங் தளங்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன். உங்கள் சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங்கைப் பயன்படுத்தி ஒரு பிளாக்கை உருவாக்கவும், உங்கள் பிளாக்கை WordPress.org வழியாக உருவாக்கவும் நான் வழக்கமாக பரிந்துரைப்பேன்.

நான் ஏற்கனவே Self hosted Wordpress blog பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். Blogspot.com மற்றும் Wordpress.com போன்ற இலவச பிளாக்கிங் தளங்களுடன் ஒப்பிடும்போது Wordpress.org சிறந்த பிளாக்கிங் தளத்தை வழங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இருப்பினும், பிளாக்கை தொடங்க விரும்பும் பல புதியவர்கள், பிளாக்கை உருவாக்க எவ்வித முதலீடும் செய்ய விரும்பமாட்டார்கள். இது முற்றிலும் நியாயமானதாகும்.



இலவசமாக பிளாக்கினை உருவாக்குவதற்கு ஏராளமான பிளாக்கிங் பிளாட்பாரங்கள் உள்ளன. நீங்கள் எளிமையான முறையில் இலவசமாக பிளாக்கை உருவாக்க விரும்பினால், எனது பரிந்துரை WordPress.com அல்லது Blogspot.com ஆகத்தான் இருக்கும்.

உங்களுக்கு சில பிளாக்கிங் அனுபவம் கிடைத்ததும், நீங்கள் WordPress.org -க்கு பிளாக்கை மாற்றி, தொழில்முறை பிளாக்கராக  மாறலாம்.

இலவசமாக பிளாக்கை உருவாக்குவதற்கு Blogspot உங்களை அனுமதிக்கிறது. ஆனால் அதற்கு வரம்புகள்(limitations)  உள்ளன. 

இருப்பினும், நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு புதியவருக்கு ஒரு பிளாக்கை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பிளாக்கிங் செயல்முறையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிய இது ஒரு சிறந்த வழியாகும். 



புதியதாக பிளாக்கிங்கை  தொடங்கும் 'beginners' க்காகவும், அதில் உள்ள அடிப்படைகளை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காகவும் இந்த பதிவு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நான் முழுமையான டுடோரியலைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.

  • முதலாவதாக, Blogspot ஆனது கூகுள் இயக்கும் பிளாக்கிங் தளமாகும். இது ஒரு பிளாக்கை தொடங்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் உங்கள் எல்லா படங்களும் பிகாசாவால்(Picasa) வழங்கப்படும்(கூகுளின் ஒரு பகுதி).

  • இரண்டாவதாக, உங்கள் பிளாக்கின் குறிக்கோள் பணம் சம்பாதிப்பதும், தொழில்முறை தோற்றமுள்ள ஒரு பிளாக்கை கொண்டிருப்பதும் என்றால், உங்கள் பிளாக்கை WordPress.org பயன்படுத்தி உருவாக்க பரிந்துரைக்கிறேன். இந்த Exclusive free wordpress guide இன் உதவியுடன் நீங்கள் அடுத்த 60 நிமிடங்களில் ஒரு பிளாக்கை உருவாக்கிட முடியும்.

Blogspot லிருந்து இலவசமாக ஒரு பிளாக்கை உருவாக்குவது எப்படி?

Blogspot.com லிருந்து இலவசமாக ஒரு பிளாக்கை உருவாக்குவதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய Google account ஐ Blogspot.com சென்று Log in செய்து கொள்ள வேண்டும். உங்களிடம் Google (Gmail ) Account  இல்லையெனில் புதியதாக ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



உங்களுடைய அக்கவுண்டில் Log in  செய்த பிறகு  "Create blog"  என்பதை கிளிக் செய்து ஃப்ரீ பிளாக்கினை உருவாக்கிக் கொள்ளலாம். 

படிப்படியாக பிளாக்கினை உருவாக்கும் வழிமுறையைப் பற்றி பின்வரும் இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். Create a free blog

Name your blog :-


முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பெயரை "Title" இல் கொடுத்து,  "Address" என்பதில் domain name ஐ தேர்வு செய்து உள்ளிட வேண்டும். கூடுதல் தகவலுக்கு "ஒரு டொமைன் பெயரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது" என்பதை படிக்க பரிந்துரைக்கிறேன்.

உங்களின் பெயரை டொமைன் பெயராக வைப்பதை தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பொதுவான அல்லது வித்தியாசமான வார்த்தையை டொமைன் பெயராக வையுங்கள். பின்னாளில் நீங்கள் Custom domain name வாங்கி, அந்த பெயரை உங்களின் brand ஆக மாற்றிக்கொள்ளலாம்.

Domain name ஐ  உள்ளிட்ட பிறகு, உங்களின் Domain name ஆனது available  ஆக  இருந்தால்,  "This blog address is available" என வரும். அப்படி இல்லையெனில்  "This blog address is not available" என வரும். உங்களின் domain name ஆனது available  என வந்த பிறகு "Save"  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.




இப்பொழுது உங்களின் பிளாக் உருவாகிவிடும். ஆனால் இதுமட்டும் போதாது.

நீங்கள் புதியதாக உருவாக்கப்பட்ட Blogspot blog ஐ  எளிமையானதாக பயன்படுத்த சில settings ஐ மாற்றம் செய்ய வேண்டும்.

நீங்கள் தற்பொழுது Blogspot dashboard ல் இருப்பீர்கள். அங்கு உங்கள் பிளாக்கின் பின்தளத்தை (backend) காண்பீர்கள். நீங்கள் அங்கு "settings" என்பதை கிளிக் செய்து, உங்கள் பிளாக்கின் Visibility ஐ மேம்படுத்துவதற்கான மாற்றங்களை செய்யலாம்.



இங்கே "New post" என்பதை கிளிக் செய்து, உங்களின் முதலாவது பிளாக் post ஐ எழுத தொடங்கலாம். 





உங்களின் முதலாவது பிளாக் post ஐ எழுதுவதற்கு முன்பு,  நீங்கள் "pages" என்பதற்கு சென்று, நீங்கள் யார், உங்களின் பிளாக் எதைப் பற்றி விவரிக்கும் என்பதைப்பற்றி குறைந்தது ஒரு "About page" ஐ உருவாக்க நான் பரிந்துரைப்பேன்.


மிக முக்கியமாக, உங்களின் blog template ஐ மாற்றுமாறு நான் கூறுவேன். ஏனெனில் default  ஆக இருக்கும் template  ஆனது பொதுவானதாக இருக்கும். மேலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும்.

இங்கே இலவசமாக கிடைக்கக்கூடிய Blogspot template -களை வரிசைப்படுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். அங்கிருந்து நீங்கள் download செய்து, உங்களின் பிளாக்கில் install செய்து பாருங்கள்.

  • List of free BlogSpot Templates 

மாற்றாக,  நீங்கள் "Theme" என்பதை கிளிக் செய்து, அங்கிருக்கும் template -களை  கூட மாற்றிக்கொள்ளலாம்.



இந்த Layout பக்கத்தில், உங்கள் blogspot blog இன் logo வை Header பகுதியில் இணைக்கலாம். மேலும் மற்ற அம்சங்களையும் அங்கு இணைக்கலாம் அல்லது நீக்கலாம். 



உங்களின் பிளாக்கில் சில post -களை போட்ட பின்பு, ஓரளவிற்கு பார்வைகள் வந்தபிறகு, "Earnings" என்பதை கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக்கிற்காக AdSense ஐ enable செய்து கொள்ளலாம். இதனால் உங்களின் BlogSpot blog இன் மூலம் பணம் சம்பாதிக்க வழிவகை செய்ய முடியும்.


இறுதியாக, உங்களின் blog கிட்டத்தட்ட தயாராக உள்ளது. நீங்கள் தற்பொழுது பதிவுகளை(post) எழுத தொடங்கலாம். நான் பரிந்துரைக்கக் கூடிய சில விஷயங்கள் இன்னும் உள்ளன. 

இந்த விஷயங்கள்  கீழே உள்ள வீடியோவில்  விளக்கப்பட்டுள்ளது.

Video Tutorial to create a free blogspot blog :-



குறிப்பு : இந்த பதிவானது ஏற்கெனவே ஒரு பிளாக் இல்லாத மற்றும் இலவசமாக பிளாக்கை உருவாக்க எளிதான வழியைத் தேடும் ஒவ்வொரு வாசகருக்கும் பொருந்தும்.

நான் என்னுடைய பிளாக்கிங் பயணத்தை Blogspot இல் தான் ஆரம்பித்தேன். 

  • மேலும் தெரிந்துகொள்ள :- Blogspot SEO Tips

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். மேலும் உங்களின் மேலான கருத்துகளை comment செய்யுங்கள்.


1 Comments

Previous Post Next Post