Blog என்றால் என்ன? | Blog meaning in Tamil?

நீங்கள் "blog" என்ற வார்த்தையை அடிக்கடி எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே மாதிரி " Blog மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி" என்பதனையும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். என்றாவது "blog" என்றால் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து உள்ளீர்களா?

இந்தப் பதிவில், "Blog என்றால் என்ன" என்பதைப் பற்றியும் அதைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றையும் காண்போம்.

பிளாக் என்றால் என்ன?


   Blog  ஆனது ஒரு வெப்சைட் மாதிரியேதான் இருக்கும். பிளாக்கை நான் நாட்குறிப்பு அல்லது பத்திரிகை என்று தான் கூறுவேன். இது பெரும்பாலும் ஒரு நபரால் பராமரிக்கப்படுகிறது. அவரை blogger என்று அழைப்பர். வழக்கமாக, பிளாக்குகள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒருமுறை, வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை கூட இருக்கலாம். Blogs தனிப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களுக்கு இணையத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.

Blog definition :-

இணையத்தில் கிடைக்கும் ஒரு ஆன்லைன் பத்திரிக்கை அல்லது நாட்குறிப்பு.

Wikipedia -ன் அகராதிபடி, Blog  என்பதன் பொருள்



 History of Blog :-

   அதிகாரப்பூர்வமற்ற முறையில், முதல் வலைப்பதிவு(blog)  Justin Hall என்பவரால் (link.net) உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் "blog" அல்லது "weblog" என்ற வார்த்தையை உண்மையில் யாருக்கும் தெரியாது. உண்மையில் ஜஸ்டினின் web property ஆனது ஒரு எளிய வலைதளத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. ஆனால் அது ஒரு வலைப்பதிவு போலவே இருந்தது. அவர் இணையத்தில் கண்ட "பொருள்" பற்றி தவறாமல் (இன்னும் செய்துகொண்டிருக்கிறார்!) பதிவிட்டார். அது ஒரு "தனிப்பட்ட நாட்குறிப்பு".

"Weblog" என்ற சொல் முதன் முதலில் (அதிகாரப்பூர்வமாக) 1997 இல் 
Jorn Barger ஆல் அறிவிக்கப்பட்டது. 1999 இல் weblog ஆனது blog என சுருக்கப்பட்டது. இந்த கட்டத்தில், சில நபர்கள் (கணினி மற்றும் இணைய வசதி கொண்டவர்கள்) வலைப்பதிவை தொடங்கினார். இருப்பினும், இது பிரபலமாக இல்லை.

பின்னர் 2003 இல் வேர்ட்பிரஸ் வந்தது. அதன் வரவால் நிறைய மாறியது. வேர்ட்பிரஸ் இலவச பிளாக்கிங் தளத்தை வழங்கத்தொடங்கியது. Install செய்வது, பராமரிப்பு மற்றும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதால் நிறைய பேர் பயன்படுத்த தொடங்கினர். தற்போது 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் வேர்ட்பிரஸ் பிளாக்கிங் தளத்தைப் பயன்படுத்துகின்றன.

தற்போது 2020 இல், 500 மில்லியனுக்கும் மேலான பிளாக்குகள் இணையத்தில் இருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் blog இன் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.



2 Comments

  1. 'Blog' என்பது பற்றி நல்ல விளக்கம் குடுத்தீர்கள் ...
    ஆனால், இதை நம் போன்ற 'Blogger' பிரபல படுத்த வேண்டும் ...

    ReplyDelete
Previous Post Next Post