Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

1. நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - சுவாமி விவேகானந்தர். 2. அடிமைகளி...

Top 100 Tamil Status for Whatsapp Quotes in Tamil Language (தமிழ் ஸ்டேட்டஸ்)

1. நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ
அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- சுவாமி விவேகானந்தர்.

2. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
- சுவாமி விவேகானந்தர்

3. பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்.
- தேசிக விநாயகம் பிள்ளை.

4. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.
- விக்டர் ஹியூகோ.

5. வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை -- இம்மூன்றும் இருந்தால் போதும்
-- தாமஸ் ஆல்வா எடிசன்

6. எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
- சுவாமி விவேகானந்தர்.

7. ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏன் என்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. எந்த ஒரு வேலை ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். -சுவாமி விவேகானந்தர்.

8. சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.

9. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

10. அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

11. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

12. எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்
- மகாபாரதம்

13. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது

14. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
– காந்திஜி

15. ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
- அம்பேத்கர்

16. எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- ஐன்ஸ்டைன்

17. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

18. உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்!
- Father பெரியார்

19. உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! -
சுவாமி விவேகானந்தர்

20. ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம்

21. ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.
- இங்கர்சால்

22. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
- Sir Winston Churchill .

23. அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson

24. கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்
-சார்லஸ் டூபி பிளேக்

25. பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.

- George Bernard Shaw.

100+ Tamil Status for Whatsapp Quotes in Tamil Language (தமிழ் ஸ்டேட்டஸ்)


26. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்

27. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

28. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

29. கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. - அப்ரஹாம் லிங்கன்

30. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி 

31. நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. - அன்னை தெரசா

32. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

33. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

34. பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

35. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

36. தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

37. எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்

38. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா

39. முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

40. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.


41. நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. - அன்னை தெரசா

42. நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா

43. நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்

44. மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி

45. கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. - அப்ரஹாம் லிங்கன்

46. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி

47. மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் - செஸ்டர் பீல்டு

48. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி

49. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்

50. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

100+ Tamil Status for Whatsapp Quotes in Tamil Language (தமிழ் ஸ்டேட்டஸ்)


52. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில்.

53. பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.

54. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

55. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.

56. எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்

57. பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.

58. பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.

59. அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்

60. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

61. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்

62. பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

63. உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

64. உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

65. வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

66. உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

67. பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

68. எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

69. நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்

70. நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. - வைரமுத்து.


72. நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.

73. அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

74. ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! - அம்பேத்கர்

75. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

100+ Tamil Status for Whatsapp Quotes in Tamil Language (தமிழ் ஸ்டேட்டஸ்)

76. காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி

77. இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே! -ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!' - நேதாஜி

78. மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது. -வ.ஸ.காண்டேகர்.

79. வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

80. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி


81. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

82. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

83. தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

84. என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.

85. நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.

86. கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்

87. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ.

88. எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

89. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

90. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா

91. முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள். -வின்ஸ்டன் சர்ச்சில்

92. பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்

93. செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

94. நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?

95. ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

96. உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

97. -ஸ்காட் பிட்ஜெரால்டு நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

99. முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!

100. கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு;இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும் -ஹோரேஸ்

100+ Tamil Status for Whatsapp Quotes in Tamil Language (தமிழ் ஸ்டேட்டஸ்)

101. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்

102. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி

103. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

104. கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்

105. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்

106. எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும். – முஹம்மது நபி (ஸல்)

107. வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

108. நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

109. இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

110. இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:
தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

Read more : Whatsapp status