How To Start A Blog in Tamil | பிளாக்கை எவ்வாறு தொடங்குவது ?

ஒரு பிளாக்கை தொடங்க மற்றும் பிளாக்கின் மூலம் பணம் பெற விரும்புகிறீர்களா?

ஆம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்!

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது Passion  ஐ பின்பற்றி, அதன்மூலம் Passive income ஈட்டுவதை விட சிறந்ததாக என்ன இருக்க முடியும். இது உங்கள் ஆன்லைன் வாழ்க்கையை உருவாக்கத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். இது புதிய உயரங்களை அடைய உதவும்.




நீங்கள் பிளாக் எழுத தொடங்குவதற்கான காரணமாக பின்வரும் சில விஷயங்கள் இருக்கலாம். அவை,

  • பணம் 
  • புகழ் 
  • உங்களின் அறிவைப் பகிர்தல் 
  • சமூகத் தாக்கம் 
  • உங்கள் எண்ணங்களை ஆவணப்படுத்துதல் 
  • செயலற்ற(passive)  வருமானம் 
  • இலவச Gadjets மற்றும் review-க்கான விஷயங்கள் 
  • Conferences  மற்றும் bloggers meet -ற்க்காக அழைக்கப்படுவது 

அல்லது வேறு எதாவது.


பிளாக் எழுத புதியவர் எனில், பிளாக்கை தொடங்க நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் இங்கே!


  • பிளாக்கை எங்கு தொடங்க வேண்டும்?(platform to blogging)
  • நீங்கள் எந்த Niche ஐ எடுக்க வேண்டும்? (Blog topic)
  • உங்கள் Domain name என்னவாக இருக்கவேண்டும்?
  • Domain name -ஐ  வாங்குவதுஎப்படி?
  • உங்கள் பிளாக்கை எங்கே host செய்ய வேண்டும்?
  • உங்கள் domain பெயருக்கு hosting வாங்குவது எப்படி?
  • Domain பெயரில் உங்கள் பிளாக்கை எவ்வாறு நிறுவுவது?
  • உங்கள் பிளாக்கின் வடிவமைப்பு(design)  எவ்வாறு இருக்க வேண்டும்?
  • உங்கள் பிளாக்கை பிரகாசிக்க அத்தியாவசியமான கூறுகள் என்ன?
  • முதல் blog post ஐ  எழுதுவது எப்படி?

 இந்த பதிவில், நீங்கள் இந்த கேள்விகளுக்கான பதிலை பார்ப்பீர்கள். அது நீங்கள் பிளாக்கை தொடங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பிளாக்கை தொடங்குவதற்கான படிகள் இங்கே :-

STEP  1  : முதலில் blog topic  ஐ (niche)  தேர்ந்தெடுக்க வேண்டும்.
STEP  2  : எந்த பிளாட்பாரத்தில் எழுதப் போகிறீர்கள் என்பதை தேர்வு                     செய்ய வேண்டும்.
STEP  3  : உங்களின் பிளாக்கிற்க்கான Domain name ஐ வாங்க வேண்டும்.
STEP  4  : அதன் பின்பு Web hosting account ஐ வாங்க வேண்டும்.

STEP  5  : பிளாக்கை WordPress ல் தொடங்க வேண்டும்.
STEP  6  : பிளாக்கை design செய்ய வேண்டும்.
STEP  7  : உங்களின் முதலாவது  blog post ஐ எழுத வேண்டும்.
STEP  8  : நீங்கள் எழுதியதை உலகிற்கு பகிர வேண்டும்.
STEP  9  : உங்களின் பிளாக்கை Monetize செய்ய வேண்டும்.
STEP 10  : Traffic ஐ பெற்று அதிக வெளிப்பாட்டை பெற வேண்டும்.



1. Select a perfect niche for your blog :-


   நீங்கள் பிளாக் எழுத வேண்டும் என முடிவெடுத்த பின்னர், மிக முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, உங்களுடைய பிளாக்கின் "Niche". அதாவது நீங்கள் பிளாக்கில் எதைப் பற்றி எழுதப்போகிறீர்கள் என்பதே. அதாவது ஆங்கிலத்தில் blog topic.

   நீங்கள் சினிமா செய்திகள், சமையல் குறிப்புகள், அழகு
குறிப்புகள், மருத்துவம் என பல தலைப்புகளில் எழுதி, அதை ஒரே பிளாக்கில் பதிவிடலாம் என இருப்பீர்கள். அது இக்காலகட்டத்தில் வேலை செய்யாது. நீங்கள் ஒரே தலைப்பில் பிளாக்கை எழுதுங்கள். சமையல் குறிப்பு பற்றி எழுதலாம் என நினைத்தீர்கள் எனில் அதைப்பற்றி மட்டுமே பிளாக் எழுதுங்கள். மற்ற தலைப்புகளையும் அந்த பிளாக்கில் சேர்க்காதீர்கள். அப்பொழுதுதான் உங்களின் வெற்றிக்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய பிளாக்கிற்க்கான தலைப்பை (topic) ஐ கண்டுபிடிப்பது எப்படி?


கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • மற்ற எதையும் விட உங்களுக்கு நன்றாகத் தெரிந்த தலைப்பை கண்டறியுங்கள். இது நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அதிகம் பேச விரும்பும் தலைப்பைப் பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அதைப்பற்றி நீங்கள் பல மணி நேரம் வசதியாக பேசலாம்.
  • நீங்கள் வழக்கமாகப் படிக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் எப்போதுமே படித்த தலைப்பு உங்களுக்கு விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.
  • மேலும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் சொந்த நுண்ணறிவால் மதிப்புகளைச் சேர்க்கலாம்.
  • புதியவர்களுக்கு,  பேனா பேப்பரின்   உதவியோடு உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளை கண்டுபிடிக்க நான் பரிந்துரைப்பேன். அது எப்படியெனில் நீங்கள் விரும்பும் தலைப்புகளை நெடுவரிசையாக (column) எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக பேஷன், தொழில்நுட்பம், நிதி, புகைப்படம் எடுத்தல், அறிவியல் ஆராய்ச்சி, குழந்தை பராமரிப்பு, சுகாதார பாதுகாப்பு மற்றும் பல. இப்போது அந்த வெவ்வேறு நெடுவரிசையாக உள்ள தலைப்புகளுக்கு 5 பதிவுகளுக்கான(post) யோசனைகளை எழுத முயற்சி செய்யுங்கள். நீங்கள் பதிவிற்கான தலைப்பை எழுதும்போது, குறிப்பு எடுக்காமல் நீங்கள் என்ன எழுதலாம் என்று சிந்தியுங்கள். ஐந்தாவது கட்டுரையின் முடிவில், நீங்கள் மிகவும் விரும்பும் தலைப்பை(niche) கண்டு பிடிக்க இது உதவும்.

வலைப்பதிவை தொடங்குவதற்கு முன் இது ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில் நீங்கள் மிகவும் விரும்பும் ஒரு தலைப்பை தேர்வு செய்ய இது உதவும். நீங்கள் பேச விரும்பும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு  கடினமான காலம் ஒருபோதும் வராது என்பதை உறுதிசெய்யும். எனவே உங்கள் வலைப்பதிவிற்கான முக்கிய தலைப்பை(Niche)  தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். இது உங்களுக்காக  கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்.

இது பொருத்தமான niche -ஐ தேர்ந்தெடுப்பதில் ஒரு புதிய வலைப்பதிவை தொடங்குவதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும்.


2. Choose a blogging platform :-


  பிளாக் எழுதலாம் என உங்களுக்கு தோன்றிய உடனே எழுந்த கேள்வி, எங்கு பிளாக் எழுதுவது என்பதாகத்தான் இருக்கும். சரிதானே?

என்னிடம் கேட்டால், நீங்கள் Self hosted platforms - ல் பிளாக் எழுதுங்கள் எனக் கூறுவேன். நான் ஏன் free platform -இல் பிளாக் எழுதக்கூடாது என உங்களுக்கு கேள்வி எழும்.

 இந்த கேள்விக்கு பதில் வேண்டுமல்லவா? சரி வாருங்கள்...

பிளாக் எழுதலாம் என நினைப்போருக்கு இரண்டு வகையான Platforms உள்ளன. அவை Free platforms மற்றும் self hosted platforms. இந்த இரண்டைப் பற்றியும் தெரிந்தால்,  நீங்கள் ஒரு தெளிவான முடிவை எடுப்பீர்கள்.

Free Platforms :-

புதியதாக பிளாக்  எழுத ஆரம்பிக்கும் நிறைய பேருக்கு WordPress.com, blogger போன்ற Free platforms உள்ளன. 

அவற்றில் உங்கள் பிளாக்கை எழுதினால் அவர்களின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். அவர்களால் எந்தவித காரணமின்றியும் உங்களுடைய பிளாக்கை அழிக்க(terminate) செய்ய முடியும். அது மட்டுமில்லாமல் அவர்களுடைய domain name ஆனது உங்களுடைய blog URL -லின் பின்னே வரும்.

உதாரணத்திற்கு, நீங்கள் blogger இல் பிளாக் தொடங்கினால், உங்களின் blog name ஆனது Yourblogname.blogspot.com என்பது போல் வரும். இப்படி பெயர் வந்தாலும் பரவாயில்லை என நீங்கள் கருதினாலும் சில சமயங்களில் மக்கள் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளது. (நீங்கள் famous ஆக இல்லாமல் இருக்கும்போது).

Free Platform ஐ  பயன்படுத்துவதில் ஒரு சிறப்பு என்னவெனில் நீங்கள் எவ்வித கட்டணமும் செலவிட தேவையில்லை.

உங்களின் பிளாக்கில் விளம்பரங்களை கொடுக்கும்போது, அவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில சமயங்களில் அவர்களுடைய விளம்பரத்தையே கொடுத்துவிடுவார்கள்.

நீங்கள் உண்மையாகவே, பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் Self hosted platforms -க்கு செல்வது நல்லது.

Self hosted platforms :-

    Self hosted platforms ஆனது  உங்களின் சொந்த blog name -ஐ பயன்படுத்த அனுமதிக்கின்றன.

மிகப் பிரபலமாக உள்ள self hosted platform எதுவெனில் WordPress.org ஆகும். இந்த உலகில் உள்ள 30% பிளாக்கர்கள் இதையே பயன்படுத்துகின்றனர்.

இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான Plugin ஐ எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு Coding அறிவும் தெரியாமல், உங்களால் பிளாக்கை கட்டமைக்க முடியும்.

Free platform ஆன blogger இல் பிளாக் தொடங்கலாமா அல்லது Self hosted platform ஆன WordPress.org இல் பிளாக் தொடங்கலாமா என உங்களுக்கு கேள்வி எழுந்தால் பின்வரும் இணைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.


3. Pick a Domain name:-


  • எளிதில் நினைவில் இருக்கக் கூடியதாக இருக்கவண்டும்.
  • Type செய்வதற்கு எளிதாக இருக்கவேண்டும்.
  • உச்சரிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும்.

உங்களின் domain name ஐ தேர்ந்தெடுப்பதற்கு இந்த மூன்று விஷயங்களையும் நினைவில் கொள்ளவேண்டும்.

உங்களின் வெற்றிக்கு உங்கள் பிளாக்கின் பெயர் முக்கியமான பகுதியாக இருக்கும். Domain name ஆனது உங்கள் பிளாக்கின் URL ஆகும். எந்த பார்வையாளராக இருந்தாலும் உங்களின் பிளாக்கை  Open செய்து பார்க்க URL ஐ தான் பயன்படுத்த முடியும்.

உதாரணத்திற்கு:-  www.tamilbold.com 

இந்த மாதிரி, உங்களுக்கு விருப்பமான domain name வாங்க கிட்டத்தட்ட 600-800 ரூபாய் செலவாகும். அந்த பணத்தையும் மிச்சப்படுத்தி domain name வாங்க உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்.

இப்பொழுது உங்களின் புதிய பிளாக்கிற்கு, சிறந்த name ஐ தேர்வு செய்ய ஒரு சில விதிகள் உள்ளன. என்னுடைய அனுபவத்திலிருந்து அதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

  • .com என்ற domain name -ஐ வாங்க விரும்புங்கள்.
  • உங்களுடைய domain name  கண்டிப்பாக உச்சரிப்பதற்கும் Type செய்வதற்கும் எளிமையாக இருக்கவேண்டும்.
  • உங்களின் domain name -ஐ கேட்பவர்களுக்கு, அது குழப்பும் விதமாக கண்டிப்பாக இருக்கக் கூடாது.

நீங்கள் Bluehost domain suggestion feature -ல் உங்களுடைய domain name வாங்குவதற்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை check செய்துகொள்ளலாம். உங்களின் பிளாக் name ஐ அதில் உள்ளிட்டு, தற்போது கிடைக்கக்கூடியதாக இருக்கும் domain name -களை
 நாம் அதில் பார்த்துக்கொள்ளலாம்.


மேலும் இதன் மூலம் நீங்கள் domain name வாங்கும்போது இலவசமாக ஒரு வருடத்திற்கு domain name -னை வாங்கிக்கொள்ளலாம்.  இதனால் நீங்கள் 600-800 வரை மிச்சப்படுத்த முடியும் .



    நான் மேலே சொன்ன அந்த மூன்று விதிகளை மறந்துவிடாதீர்கள். மேலும் உங்கள் பிளாக்கிற்கு  domain name ஐ தேர்வு செய்யும் போது பின்வரும் விஷயங்களையும் பின்பற்றுங்கள்.

  • பெரிய domain name ஐ பயன்படுத்தாதீர்கள். 12 எழுத்துகளுக்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Tamilbold.
  • .info, .net மற்றும் இதுமாதிரியான domain name வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் Search engine -ல் உங்களின் rank ஐ குறைத்துவிடும். என்னுடைய பரிந்துரை என்னவென்றால் .com, .in, .org  போன்ற domain name வாங்கவே முற்படுங்கள்.


4. Get a web hosting account :-


    Domain name ஐ தேர்வு செய்த பின்பு, மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த Hosting சேவையை வழங்கக்கூடியவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் உங்கள் பிளாக்கின் செயல்பாடு மற்றும் செயல்திறன் ஆனது hosting ஐ பொருத்தே அமையும். அதுமட்டுமில்லாமல் உங்களின் கோப்புகள் சேமிக்கப்படும் இடமும் அதுதான். உங்களின் வாசகர்களுக்கு 24/7 முழுவதும் உங்களின் பிளாக் இயங்க வேண்டும்.

நிறைய hosting நிறுவனங்கள் domain registration சேவையையும் தருகின்றன. சில நபர்கள் domain name -ஐ ஒரு நிறுவனத்திலும் hosting account -ஐ வேறொரு நிறுவனத்திலும்  வாங்குகின்றனர். நான் பரிந்துரைப்பது என்னவென்றால் எல்லாவற்றையும் hosting account -இல்  வாங்கிவிடுவது நல்லது. ஏனென்றால் எவ்வித தொந்தரவு இல்லாமல் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் முடியும்.

தவறான web hosting -ஐ தேர்ந்தெடுப்பது உங்களின் பிளாக்கிற்கு நிறைய பிரச்சனையை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு மொபைல் போனை வாங்கப் போகிறீர்கள். வரவேற்பு இல்லாத ஒரு மொபைல் நிறுவனத்திலா போனை வாங்குவீர்கள். அதுமாதிரிதான் hosting வாங்கும்போதும்  நீங்கள் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்தே வாங்குங்கள்.

நான் தெரிந்துகொண்ட வரை, நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு hosting நிறுவனம் Bluehost. 99 சதவிகித பிளாக்கிங் வல்லுனர்கள்  இதை WordPress.org உடன் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

5. Starting a blog on WordPress :-


இந்தப்பகுதியில் web hosting account இல் எப்படி Sign up பண்ணுவது மற்றும் WordPress blog ஐ எப்படி Set up செய்வது என்பது பற்றி காண்போம்.

            1. Visit  Bluehost

        நிறைய Hosting  நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு Bluehost ஐ தேர்வு செய்ய காரணம், பின்வரும் வசதிகளை தருவதால்தான். அவை,

    • Free SSL
    • Unlimited bandwidth
    • Unlimited storage
    • Free domain name
    • Easy to use cPanel 
    • Live chat support
    • 30 day money back guarantee
    • One click wordpress install

    சிறந்த பகுதியாக, இது மாதத்திற்கு 499 ரூபாயில் இருந்து மேலும் குறைக்கப்பட்டு  199  ரூபாய் மட்டுமே செலவாகும்.


    சரி ...இதனை எப்படி வாங்கலாம்.

    • கீழே உள்ள link ஐ பயன்படுத்தி Bluehost  தளத்திற்கு செல்லுங்கள்.
               Go to Bluehost
    • பின்பு "Get Started " என்பதை கிளிக் செய்யுங்கள்.





             2.Select your blog's hosting plan 

       உங்களுக்கு விருப்பமான Plan ஐ தேர்வு செய்து தொடங்கலாம். நீங்கள் புதியதாகத்தான் தொடங்குகிறீர்கள் எனில் Basic plan ஐ தேர்வு செய்யலாம். எல்லாவிதமான தேவைகளுக்கும் Plus ஐ தேர்வு செய்யலாம். பொதுவாக இது பிரபலமாக உள்ள பிளாக்கர்களுக்கு தேவைப்படும்.

    Choose plan




            3. Input your blog's domain name

        நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள domain name ஐ "new domain" என உள்ள box இல் உள்ளிட்டு "Next" என்பதை கிளிக் செய்ய வேண்டும். Bluehost ஆனது அந்த domain name உங்களுக்கு கிடைக்கக் கூடிய வகையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைக் காட்டும். கிடைக்கக்கூடிய வகையில் இல்லை என்றால் சில பரிந்துரைகளை உங்களுக்கு காட்டும். நீங்கள் விருப்பப்பட்டால் அந்த பெயர்களைக் கூட தேர்வு செய்துகொள்ளலாம்.




                4. Register for Bluehost

        Domain name ஐ எடுத்தபிறகு, Bluehost  ஆனது உங்களை registration page -ற்கு அழைத்துச் செல்லும். பின்பு அங்கு உங்களுடைய விவரங்களை கொடுக்க வேண்டும்.

    Account information



               5. Select your hosting option

          Package information என்பதில் உங்களுக்கு தேவையான கால அளவை கொடுக்க வேண்டும். 12 மாதமா, 24 மாதமா இல்லை 36 மாதமா என தேர்வு செய்து கொள்ளலாம். Package extras  என்பதில் கொடுக்கப்பட்டுள்ளவை உங்களுக்கு தேவை என்றால் tick  செய்து கொள்ளலாம். தேவையில்லை என்றால் untick செய்து கொள்ளலாம்.


    Package information

    Package extra




    Domain privacy  protect என்பதை நீங்கள் tick செய்து வாங்கிக் கொள்வது நல்லது. ஏனென்றால் உங்களுடைய சுயவிவரங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக இருக்கச் செய்யலாம்.

    Payment information

    Payment methods




    Payment information  இல் உள்ள Pay with PayU என்பதில் கிளிக் செய்துவிட்டு, பின்பு படத்தில் காட்டியுள்ளபடி கீழே உள்ள சிறிய box இல் Tick செய்து கொள்ளுங்கள். பின்பு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். 

    அதன் பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் உங்களுடைய Credit/Debit card வைத்து பணத்தை செலுத்தலாம். Net banking மூலமாக பணம் செலுத்த விரும்பினால் அதன் மூலமாகவும் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

                 6. Launch your WordPress blog with Bluehost

       வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் செய்து விட்டோம். உங்கள் Domain name மற்றும் Web hosting இணைக்கப்பட்டு விட்டது. தற்பொழுது WordPress ஐ Set up செய்யவேண்டும்.

    Bluehost cPanel account -ற்கு செல்லுங்கள். "My sites" பகுதிக்குள் சென்று, Install WordPress  என்பதை கிளிக் செய்யுங்கள். Bluehost இல் மிகப்பிரபலமான One click setup இருப்பதனால் பிளாக் உருவாகுதல் மிக எளிதாகிவிடும்.



    இப்பொழுது உங்கள் தளத்தின் URL இல் சென்றால், நீங்கள் 'Coming soon' என்ற Page ஐ  பார்ப்பீர்கள்‌. ஏனென்றால் நீங்கள் இன்னும் உங்கள் தளத்தை live செய்யவில்லை.

    இதற்காக, நீங்கள் ஒரு WordPress தளத்தை தொடங்குவதற்கு முன்பு அதை Set up செய்து design செய்ய வேண்டும். இது முடிந்தவுடன் மீண்டும் 'cPanel' க்கு சென்று 'Launch' என்பதை கிளிக் செய்து உங்களின் தளத்தை live செய்ய வேண்டும்.

    6. Select a WordPress theme to design your blog :-


    Blogging platform? தேர்வு செய்தாயிற்று...
    Blog niche ? தேர்வு செய்தாயிற்று...
    Domain name ? தேர்வு செய்தாயிற்று...

    ஆங்கிலத்தில் "The first impression is the last impression" என்ற பழமொழி உண்டு. அதாவது தமிழில் "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்பார்கள். இந்த பழமொழியை நினைவில் கொண்டு பிளாக்கை நீங்கள் எழுதவேண்டும்.

    Blog design ஆனது உங்களின் பிளாக்கிற்கு தேவையான மிக முக்கியமான அம்சமாகும். ஏனெனில் உங்கள் பார்வையாளர்கள் உங்களின் பிளாக்கை நேசிப்பதை  ஒரு நல்ல வடிவமைப்பு (design) உறுதி செய்யும். உண்மையை சொல்லப்போனால், அது உங்களின் பார்வையாளர்களை உங்களின் பிளாக்கிற்கு திரும்ப திரும்ப வரவழைக்கும். உங்களின் பிளாக் டிசைனை நீங்கள் ஒரு நல்ல அலங்காரத்துடன் கற்பனை செய்து பாருங்கள்.

    WordPress இல் "WordPress themes" என்ற அமைப்பு உள்ளது. அதில் அனைத்து விதமான பிளாக்குகளுக்கும் தேவையான டிசைன்கள் ரெடிமேடாகவே (ready-made) இருக்கும்.

    பல இலவச மற்றும் பிரீமியம் WordPress themes உள்ளன. பிரீமியம் themes -க்கு செல்ல நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அனைத்து விதமான ஆதரவையும்(support),  தொடக்கநிலை வழிகாட்டியையும் (starter guide) பெறுவீர்கள். மேலும், உங்கள் பிளாக்கிற்கு தரமான வடிவமைப்பு உங்களிடம் இருக்கும். 


     
    இங்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய நவீன theme கிளப்புகளை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

    Genesis :- 
    இது அங்குள்ள சிறந்த தீம் கட்டமைப்புகளில் ஒன்றாகும். Shoutmeloud என்ற வலைதளத்தில் இந்த தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இந்த Theme மற்றும் Skin ஐ வாங்கி உங்களுக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளலாம்.

    Astra theme :-
    இது ஒரு இலகுரக தீம். இது எல்லா வகையான வலைப்பதிவுகளுக்கும் template ஐ வழங்குகிறது. நீங்கள் இந்த theme ஐ install செய்ததும், ரெடிமேடாக உள்ள template ஐ தேர்வு செய்யலாம். மேலும் உங்களின் blog design ஆனது  30-45 நிமிடங்களுக்குள் தயாராக இருக்கும்.  எந்த புதிய வேர்ட்பிரஸ் வலைப்பதிவிற்கும் இது சரியான துணை.

    •  WordPress theme - ஐ install செய்வது எப்படி?

    இன்னும் பல பிரீமியம் வேர்ட்பிரஸ் தீம் கிளப்புகள் உள்ளன. ஆனால் மேலே உள்ள இரண்டில் ஏதேனும் ஒன்றை தொழில்முறை தொடக்கத்திற்கு(Professional start) பரிந்துரைக்கிறேன்.

    7. Writing your first blog post :-


       நீங்கள் புதியதாக பிளாக் எழுதும்போது சில தவறுகளை கண்டிப்பாக செய்வீர்கள். அதனை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. நான் கீழே சொல்லக் கூடிய சில விஷயங்கள், நீங்கள் பிளாக்கில் போஸ்ட் போடும்போது பயனுள்ளதாக இருக்கும்.

    • நீங்கள் content எழுதும்போது, உங்களுக்கு எதிரில் ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார் என கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் தான் பேசப் போகிறீர்கள். அவருடன் எப்படி பேசப்போகிறீர்களோ அப்படியே எழுதுங்கள். ஏனெனில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் உங்களின் பிளாக் போஸ்ட்டை படிப்பார். உதாரணத்திற்கு, இந்த போஸ்ட்டை நீங்கள் தனியாகத்தான் படித்துக் கொண்டிருப்பீர்கள். இதில் நான் உங்களுடன் பேசுவது போலத்தான் எழுதியிருப்பேன். 'நான்' 'நீங்கள்' என்று தான், என்னுடைய எழுத்து இருக்கும்.
    • நீங்கள் ஒரு content ஐ எழுதும்போது, எந்த தலைப்பில் எழுதுகிறீர்களோ, அதைப் பற்றி அனைத்து விஷயங்களையும் புரியும்படியாக எழுதுங்கள். குறைந்தபட்சம் 1000 எழுத்துக்களுக்கு குறையாமல் எழுதுங்கள்.
    • Google இல் இருந்து படங்களை(images) எடுத்து போடாதீர்கள். அதற்கென இலவசமாக படங்களை தருகின்ற தளங்களைப் பயன்படுத்துங்கள். 
    • உங்களின் post இல் யூடியுப்பில் இருந்து வீடியோக்களை embed ஆக எடுத்து பயன்படுத்தலாம்.

    8. Add important pages on your blog:-


        நீங்கள் பிளாக் எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்தே பின்வரும் பக்கங்கள்(pages)  உங்களின் பிளாக்கில் அவசியமாக இருக்கவேண்டும்.

     i.  About page :-

       உங்களைப் பற்றியும் உங்கள் பிளாக்கை பற்றியும் தகவல்கள் இந்த page -ல் இருக்க வேண்டும். நீங்கள் யார், என்ன படித்தீர்கள், எதனால் பிளாக் எழுதுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை கொடுக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் என்னுடைய "About me" page ஐ பார்க்கலாம்.

      ii. Contact page :-

        உங்கள் பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க மற்றும் அவர்களின் சந்தேகங்களை உங்களிடம் கேட்டறிய இந்த page ஐ பயன்படுத்தலாம். அதில் நீங்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதள பக்கத்தின் முகவரி அல்லது contact form ஐ கொடுக்கலாம்.

       iii.  Media kit page :-

       தற்பொழுது இந்த page உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த page இல் நீங்கள், உங்களின் blog traffic மற்றும் விளம்பரதாரர்கள் உங்களிடம் விளம்பரங்களை கொடுக்க தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
    • Media kit page என்றால் என்ன? முழு விளக்கம்.

     iv.  Privacy policy page :-

     v.  Disclaimer page :-

     vi.  Disclosure page :-

      vii. Terms and Conditions :-


    9.  Driving traffic to your blog :-


       எல்லாவற்றையும் பற்றி தெரிந்துகொண்டு, பிளாக் தொடங்கி, முதல் போஸ்டையும்  போட்டாயிற்று. தற்போது உங்களின் பிளாக் live இல் இருக்கும்.

     அடுத்து, அதிகப்படியான traffic  ஐ நீங்கள் பெறவேண்டும். கீழே உள்ள பதிவை படியுங்கள்.

    • How to drive huge traffic to your blog in a few weeks?

     உங்களின் பிளாக் Google search இல்  எல்லாருக்கும் தெரியும்படியாக வருவதற்கு பின்வரும் பதிவை படியுங்கள்.

    • How to index a website in Google search in 24 hours (case study)

     தற்பொழுது, நீங்கள் புதியதாக ஆரம்பித்த பிளாக்கிற்கு traffic ஐ பெறுவதற்கு சில பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    • How to promote your blog (12+ Actionable blog promotion techniques).

    10. Getting Social :-


        உங்களுடைய பிளாக்கை தொடங்கியதும் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களின் பார்வையாளர்கள் எப்பொழுதும் உங்களுடன் தொடர்பில்  இருக்க முடியும்.

    அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க, உங்களுக்கு Facebook page, Instagram account, Twitter account போன்றவை தேவைப்படும். 
    இவற்றை எப்படி தொடங்கலாம் என கீழே உள்ள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    • How to create a Twitter account
    • How to form a community out of your blog

    11. Make money with blogging in easy steps :-


        நீங்கள் Passive income ஆக பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் மிகப்பிரபலமான வழிகள் இங்கே :

    நான் இவற்றைப் பற்றி ஏற்கனவே,  Blog மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவின் மூலம் தெளிவாக எழுதி உள்ளேன்.

    FAQ about starting a blog :-

    • புதியதாக பிளாக் எழுதுபவர் எப்படி பணம் சம்பாதிப்பார்?

                    புதியதாக பிளாக் தொடங்குபவர் AdSense மூலமாகவும் Affiliate Marketing மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்.

    •  ஒரு நாளைக்கு எத்தனை post பதிவிடலாம்?

                    நீங்கள் தொடர்ச்சியாக பதிவிட விரும்பினால், ஒரு நாளைக்கு ஒரு post போடுவதை இலக்காக கொள்ளலாம். நீங்கள் 2000+ சொற்களுக்கு மேல் எழுதுகிறீர்கள் எனில் வாரத்திற்கு 2 அல்லது 3 பதிவுகளை எழுதலாம்.

    •  பிளாக் மூலமாக எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்?

    பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் சிறப்பான வழிகளைப் பற்றி Blog மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

       

              இந்தப் பதிவில் உங்களுக்கு, ஒரு பிளாக்கை தொடங்குவது எப்படி என்ற கேள்விக்கான பதில் போதுமான அளவுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஏதேனும் உங்களுக்கு கேள்வி இருந்தால் comment செய்யுங்கள். அதற்கான பதிலை இந்த பதிவின் இறுதியில்  உள்ள FAQ பகுதியில் இணைக்கிறேன்.

            இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

    4 Comments

    1. Blog traffic epti increase pantrathu

      ReplyDelete
    2. How to create custom permalink in tamil

      ReplyDelete
    3. புரியும் படியான நல்ல தகவல்களை கொடுத்தீர்கள், நன்றி சார்.
      மேலும் பணம் சம்பாதிக்க யூ டியூப் சிறந்ததா? அல்லது பிளாக் சிறந்ததா? எதில் அதிகமான வருவாய் ஈட்ட முடியுமென விளக்கம் தர முடியுமா சார்?

      ReplyDelete
    Previous Post Next Post