Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

உலகிலேயே ஆன்லைனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சந்தை அமேசான் தான். இந்த உலகத்தில் ஏகப்பட்ட Affiliate Marketplaces  இருந்தாலும் அமேசான் தான...

Amazon Affiliate marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? முழுமையான விளக்கம்.


உலகிலேயே ஆன்லைனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சந்தை அமேசான் தான். இந்த உலகத்தில் ஏகப்பட்ட Affiliate Marketplaces  இருந்தாலும் அமேசான் தான் ஒவ்வொருவரின் பொருட்களை விற்பனை செய்ய முதல் தேர்வாக இருக்கிறது. அதற்கு காரணம் நம்பகத்தன்மையே. இதனால் தான் மக்கள் பொருட்களை அதில் திரும்ப திரும்ப வாங்குகிறார்கள்.



Amazon affiliate program ஆனது Amazon Associates எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் அமேசான் தளத்தின் பயனாளராக இருந்து உங்களின் Affiliate link மூலமாக ஒருவர் பொருள் வாங்கினால் அந்த பொருளுக்கான கமிஷன் உங்களுக்கு கிடைக்கும்.

எனக்கு தெரிந்த நபர் ஒருவர்,  அவருடைய  blog post - ல்  amazon affiliate link மூலமாக கேமராவை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவர் தன்னுடைய Amazon affiliate dashboard - ஐ  பார்க்கவே இல்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய Affiliate dashboard - ஐ  பார்க்கும் பொழுது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் குறிப்பிட்டிருந்த கேமரா  Post - ற்க்கு 100 கிளிக்குகள் வந்திருந்தது. அவருடைய லிங்கை பயன்படுத்தி கேமரா மட்டும் வாங்காமல் Levi's jeans ,  போட்டோகிராபி பற்றிய புத்தகம், Acer Aspire one Netbook ,Camera case மற்றும் Flash memory card போன்ற பொருட்களும் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டிருந்தன. அதன் மூலம் அவருக்கு பத்து டாலர்  முதல் அதற்கு மேலாகவும் கமிஷனாக பணம் கிடைத்தது. அதற்கான Screenshot  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இந்த கமிஷன் அதிகமாக கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் amazon affiliate மூலமாக அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த affiliate program நீங்கள் விற்பனை செய்கிற பொருளின் விலையில் 10 சதவிகிதத்தை உங்களுக்கு கமிசனாக தரும். அது எந்த பொருளை விற்பனை செய்கிறீர்கள் என்பதை பொருத்து அமையும்.

அமேசான் தளம் விற்பனை செய்கின்ற பொருள்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை உங்கள் பிளாக்கிற்கு ஏற்றார் போல தேர்வுசெய்துகொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள Amazon commission chart மூலம் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.



 நீங்கள் Gadget அல்லது மொபைல் பற்றி blog எழுதினால்,  ஏதாவது ஒரு போனை பற்றி முழுவதுமாக Review எழுதி அந்த போனுக்கான amazon affiliate link - னை கொடுக்கலாம். 15 நிமிடங்களை செலவழித்து மொபைலுக்கான சிறந்த ஆஃபர்களை எடுத்து, சேர்ப்பதன் மூலம் கூடுதலான பணம் சம்பாதிக்கலாம்.

Amazon  affiliate  program வழியாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் மிக அதிகமாக பயன்படுத்த கூடிய வழி முறையைக் காண்போம்.


Amazon affiliate program - ல் Sign Up செய்வது எப்படி?



        உங்களுடைய  Geographical location அல்லது நீங்கள் எங்கு பொருளை விற்கப்போகிறீர்கள் என்பதைப் பொருத்து amazon affiliate program - ல் Sign up செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் எனில் Amazon.com - லும்  இந்தியாவில் விற்பனை செய்ய விரும்பினால் Amazon.in -  லும் Sign Up செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உலகம் முழுவதும் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய விரும்பினால், ஜப்பான் ஆக இருந்தால் Amazon.jp யிலும்  ஆஸ்திரேலியாவாக இருந்தால் Amazon.au யிலும்  வேறு நாடுகளாக இருந்தால் அங்குள்ள அமேசான் தளத்தில் Sign up செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் Wordpress  பயன்படுத்துகிறீர்கள் எனில் EasyAzon  என்ற Plug in - னை பயன்படுத்தலாம்.


Amazon Affiliate ஐ Monetize  செய்வது எப்படி?


       தற்பொழுது நீங்கள் Amazon affiliate account உருவாக்கிவிட்டீர்கள் எனக் கொள்வோம். அப்படி இல்லையெனில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

     அடுத்ததாக நீங்கள் உங்களுடைய பிளாக்கிற்கு Links, Banner அல்லது Widgets- ஐ பெற வேண்டும். அதற்காக உங்கள் பிளாக்கிற்கு தகுந்தது போல் நீங்கள் affiliate link னை  தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ,

  • நீங்கள் Gadget பற்றி பிளாக்கில் எழுதினால், "Recommended Gadgets"  என  ஒரு Page ஐ  உருவாக்கி கொள்ள வேண்டும்.
  • நீங்கள் Movie அல்லது Music பற்றிய பிளாக் வைத்திருந்தால் உங்கள் பிளாக்கில் Sidebar - ல் ஒரு Widget ஐ  உருவாக்கி அதில் படத்தின் டிவிடி affiliate லிங்கினை கொடுக்கலாம்.

இதே மாதிரியாக உங்கள் பிளாக்கின் முக்கியத்துவத்திற்கு (Niche) ஏற்றார்போல லிங்கினைக் கொடுத்து அமேசான் மூலமாக Monetize செய்து கொள்ளலாம்.

நீங்கள் அமேசான் தளத்தில் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய விரும்பினால் இந்த link இனை பயன்படுத்தி Sign Up செய்து கொள்ளுங்கள். 

Amazon associates ஆனது Adsense - ஐ விட  சிறந்ததா?

        உத்தேசமாக உங்களது பிளாக்கிற்கு தினமும் ஆயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். உங்களின் Google Adsense ல்  eCPM  ஆனது மூன்று டாலர் வருகிறது என வைத்துக் கொண்டால் நீங்கள் மாதத்திற்கு 100 டாலர் வரை சம்பாதிக்க முடியும்.

அதே பிளாக்கில் Google Adsense க்கு  பதிலாக Amazon affiliate மூலம் Monetize செய்வதாகக் கொள்வோம். தினமும் உங்கள் பிளாக்கிற்கு 50 பார்வையாளர்கள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் Conversion rate 5% எனவும் வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று விற்பனைகள்  நடக்கிறது எனவும் வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு 60 முதல் 90 விற்பனைகள் நடக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு கமிஷனாக 200 முதல் 2000 டாலர் வரை  நீங்கள் விளம்பரப்படுத்தும் பொருளுக்கு ஏற்ப கிடைக்கும். இது Adsense மூலம் கிடைக்கும் பணத்தை விட அதிகமாகவே இருக்கும்.

       அமேசான் அசோசியேட்ஸ் மூலம் வெற்றிகரமாக பணம் சம்பாதித்தவர்களின்  கதையை இணையதளத்தில் ஏராளமாக பார்க்கலாம். ஆனால் உங்கள் பிளாக்கில் இருந்து Adsense - ஐ நீக்காமலேயே அமேசான் அசோசியேட்ஸ் மூலமாகவும் பணம் சம்பாதியுங்கள் என நான் உங்களுக்கு பரிந்துரைப்பேன். Adsense ஒரு நிறைவான பணம் தருகிறது எனில் அதை இன்னும் கூடுதலான பணமாக தருவதற்கு அமேசான் அசோசியேட்ஸ் உதவும்.

Amazon Products links - களை உங்களது blog post - ன்  கீழே கொடுக்கலாம் அல்லது ஒரு Widget - ல் கொடுக்கலாம் . அந்த Product பற்றி உங்களது பிளாக்கில் முழுவதும் Review எழுதி Affiliate link னை  கொடுக்கலாம். ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் பொருட்களைப் பற்றி Review செய்து , Description ல் Affiliate link - னை  கொடுப்பது இன்னும் கூடுதலாக பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள :





இந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்ததா ??? 
கமெண்ட் செய்யுங்கள்...


0 comments: