சரியான ஒரு Affiliate Program - ஐ தேர்வு செய்வது எப்படி?

How to choose a correct affiliate program?

நீங்கள் வெற்றிகரமான Affiliate  Marketer  ஆக வேண்டுமெனில் சரியான தயாரிப்புகளை உங்களது பிளாக்கில் விளம்பரப்படுத்துவது  மிக முக்கியம். 76 சதவிகித புதிய Affiliate marketer - கள் Affiliate marketing  செய்வதில் தோல்வியடைகின்றனர். காரணம் அவர்கள் சரியான ஒரு பொருளை தேர்வு செய்து அதனை விளம்பரப்படுத்தாததே.  

இங்கு Tamilbold.com - ல் நான் ஏற்கனவே Affiliate marketing  மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என எழுதி இருக்கிறேன். அதனை படித்து தெரிந்து கொண்டு இந்த பதிவை படியுங்கள். ஏற்கனவே படித்துவிட்டீர்கள் எனில் இதனைத் தொடருங்கள்.

வெற்றிகரமாக  Affiliate marketing  செய்வது மிக எளிது அல்ல. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு மிக கடினமானதும்  அல்ல.  நீங்கள் நிலையான மற்றும் சரியான விளம்பரத்திற்கான திட்டத்தினை வகுத்திருந்தால் , நீங்கள் தான் வெற்றிகரமான Affiliate marketer.
உதாரணமாக, நீங்கள் எந்த Affiliate  பொருளை  விற்பனை  செய்ய தேர்வு செய்யப்போகிறீர்கள் மற்றும் எந்த தளத்தினை, பொருட்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை பொருத்தே வெற்றி அமையும்.

எந்த Affiliate marketplace  இல் தொடங்குவது?


Affiliate Products ஐ தேர்வு செய்ய சிறந்த சந்தைகளாக(Marketplace) இருப்பது Clickbank , ShareAsale மற்றும் Commission junction. உங்களின் பிளாக்கின் முக்கியத்துவத்தைப்(Niche)  பொருத்து, சிறந்த Affiliate Products - ஐ  விளம்பரப்படுத்த தேர்வு செய்ய வேண்டும். Niche Marketers - களுக்கு  Commission junction மற்றும் Click bank ஆகியவை சிறப்பாக இருக்கும்.

Niche Affiliate Products என்றால் என்ன?


Niche Affiliate products என்பது ஏதாவது ஒரு பொருள் (product)  உங்களின் Blog topic -ற்க்கு  தொடர்புடையதாகவும்  blog post - ஐ படிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருப்பது. உதாரணத்திற்கு  உங்கள் பிளாக்கில் நீங்கள்  Health  சம்பந்தப்பட்டவை  பற்றி எழுதுகிறீர்கள் என்றால், அது சம்பந்தமான பொருள்களையே உங்களின் பிளாக்கில் விளம்பரப்படுத்த வேண்டும்.


என்னுடைய அறிவுரை என்னவென்றால் , உங்களுடைய பிளாக்கில் Health  சம்பந்தப்பட்டவை பற்றியே எழுதி இருக்கிறீர்கள் என்றால் அது சம்பந்தமாக அதிகம் விற்பனை ஆகக்கூடிய பொருளைப் பற்றி எழுதலாம். அது உங்களின் Conversion rate - ஐ  அதிகப்படுத்த உதவும். வெற்றிகரமான Affiliate விளம்பரத்திற்கும் தோல்வியடைந்த affiliate  விளம்பரத்திற்கும் முதன்மையான காரணமாக இருப்பது conversion rate.

உங்களின் Affiliate விளம்பரத்திற்கு  100 கிளிக்  வந்திருந்து  நீங்கள் Low  conversion rate பெற்று இருந்தால் உங்களுக்கு வேறு ஒரு விளம்பர உத்தி கண்டிப்பாக தேவை.

ஒரு பொருளை மற்றவர்களுக்கு உங்களின் பிளாக் வழியாக பரிந்துரைக்கும்போது அதை நீங்கள் உபயோகித்து அது எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு பிறகு அதைப்பற்றி எழுத வேண்டும். பல பிளாக்கர்கள் செய்கிற மிகப் பொதுவான தவறு அவர்கள் பரிந்துரைக்கும் பொருளை உபயோகித்து பார்க்காமல் அதைப்பற்றி இஷ்டத்திற்கு எழுதுவது தான். உங்களின் வேலை Reviewer ஆக இருந்து எழுதுவது. நீங்கள் ஒரு பொருளை பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்து நேர்மையாக  review  எழுதினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மை உண்டாகும். அதுவே அந்த பொருளை வாங்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
நீங்கள் சில நிறுவனங்களிடமிருந்து இலவசமாக Sign up  செய்து பொருளை வாங்கி review  செய்யலாம் அல்லது அந்தப் பொருளை வைத்திருப்பவர்களிடம்  வாங்கி review  செய்துவிட்டு கொடுத்து விடலாம். அப்படியும்  இல்லாத பட்சத்தில் நீங்கள் சொந்தமாகவே வாங்கி அந்த பொருளை உபயோகித்து review  செய்யலாம்.

நீங்கள் Affiliate Program - ல் Sign up  செய்த பிறகு கவனிக்க வேண்டிய சில காரணிகள் :


  • Available banners
  • Promotional matters
  • Affiliate control panel
  • Minimum payout
  • Payment methods
  • Tax form required or not


இந்த காரணிகள் உங்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை தேர்வு செய்ய பயன்படும்.

மிகவும் பிரபலமான ஒரு பொருளை உங்களின் Affiliate market - ல் விற்பனை செய்வது உங்களுக்கு ஒரு கூடுதலான சிறப்பாக இருக்கும்.

2 Comments

Previous Post Next Post