- நீங்கள் புதியதாக பிளாக் எழுதுபவர்களா?
- உங்களது பிளாக்கில் புதியதாக Ad networks மூலம் Monetize செய்யப்போகிறீர்களா?
- உங்கள் பிளாக்கில் பார்வையாளர்கள் குறைவாக உள்ளனர்களா?
அப்படி என்றால் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தான்.
இன்று நீங்கள் புதிய பிளாக் தொடங்குபவர்களுக்கு ஏற்றதாக, அதே நேரத்தில் Adsense -ற்கு மாற்றாக உள்ள மூன்று அட்வர்டைசிங் நெட்வொர்க் (Advertising networks) பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
Adsense ஆனது மிகச்சிறந்த Ad network ஆக உள்ளதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களின் தரமே. ஆனால் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது adsense approval வாங்குவதே.நீங்கள் approval வாங்குவதற்கு பிளாக் தொடங்கி ஆறு மாதங்கள் கூட ஆகலாம். இன்றைய தேதியில் தமிழில் பிளாக் எழுதினால் மிக விரைவாக Adsense இல் approval வாங்கலாம். Adsense approval வாங்குவதற்கு அவர்கள் ஏகப்பட்ட விதிமுறைகள் வைத்துள்ளனர். அதையெல்லாம் தாண்டி approval வாங்குவது கொஞ்சம் கடினமாக உள்ளது.
மிகச்சிறிய பிளாக்கர்கள் approval வாங்குவது என்பது இயலாத காரியம்.அவர்களுக்கு என்று வேறு சில நல்ல Ad networks களும் உள்ளன. அதே நேரத்தில் ஏகப்பட்ட விளம்பர நெட்வொர்க்குகளும் (Ad networks) இந்த உலகத்தில் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் நம்பகத்தன்மையோடு இருக்கும் என்றால் அது கிடையாது. அதிகமாக உள்ளவர்கள் பிளாக்கர்களை ஏமாற்றுபவர்களாகவும் Minimum payout -க்கான பணத்தை அடைந்தவுடன் அதை தராமலும் இருக்கின்றனர். ஆனால் நான் உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த மூன்று விளம்பர நெட்வொர்க்குகளைப் (Ad networks) பற்றி சொல்லப் போகிறேன். நீங்கள் மிகச் சிறிய பிளாக்கர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
3 Ad Networks for small publishers for fast approval:
1. Pop ads :
கோப்புக்காட்சி |
இது மிகச்சிறிய பிளாக்கர்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் இதில் approval பெற உங்கள் பிளாக்கிற்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற கணக்கு தேவையில்லை. இவர்கள் அனைத்து விதமான பிளாக்குகளுக்கும் Approval தருவார்கள். உதாரணத்திற்கு உங்களது பிளாக் ஆனது முழுவதும் adult content ஆக இருந்தாலும் Approval தருவார்கள். நீங்கள் அவர்களது தளத்தில் Sign up செய்த பிறகு Auto withdrawal option -ஐ Setup செய்துவிட்டால் உங்களது கணக்கில் Minimum payout வந்த உடனேயே தானாகவே பணத்தை உங்களுக்கு அனுப்பி விடும்.
Advantages :
- உடனடியாக approval வாங்கி கொள்ள முடியும்
- மற்ற Ad networks களை காட்டிலும் அதிகப்படியான CPM rates -ஐ தருகிறது
- ஐந்து டாலர் வந்தவுடனேயே பணத்தை எடுத்துக்கொள்ளலாம் (Minimum payout 5 dollar)
- தானாகவே வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் வசதியை கொண்டுள்ளது (Auto money withdrawal)
Disadvantages :
- PayPal , Payoneer வாயிலாக மட்டுமே பணத்தை பெற முடியும்
2. Propeller Ads :
இந்த Ad network ஆனது CPM நெட்வொர்க் வகையைச் சார்ந்ததே. CPM என்பதன் பொருள் Cost per 1000 impression. தமிழில் சொல்ல வேண்டுமானால், உதாரணத்திற்கு ஆயிரம் பார்வையாளர்களுக்கு ஒரு டாலர் என்ற விகிதம். இது ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மாறுபடும்.
நீங்கள் Propeller Ads தளத்தில் Sign up செய்த பிறகு பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
- உங்கள் பிளாக்கிற்கு ஏற்றபடி விளம்பரங்களை உருவாக்க வேண்டும்.
- பின்னர் அதனை ப்ளாக்கில் இடவேண்டும்.
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆயிரம் பார்வையாளர்களுக்கு 1 முதல் 4 டாலர் வரை சம்பாதிக்க முடியும். உங்களது கணக்கில் 25 டாலர் வந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதுவும் Payoneer , Webmoneyz மற்றும் சில வழிகளை பயன்படுத்தியே பணத்தை எடுக்க முடியும்.
3. Revenue hits:
Revenue hits ஆனது மற்ற Ad networks களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். உங்கள் பிளாக்கில் Revenue hits மூலமாக கொடுக்கப்பட்ட விளம்பரங்களை கிளிக் செய்தாலோ(CPC) அல்லது ஆயிரம் பார்வையாளர்கள் (CPM) வந்தாலோ பணம் தர மாட்டார்கள். ஒரு கிளிக் ஆனது ஒரு Action ஆக மாறினால் மட்டுமே பணம் கிடைக்கும்.
புரியும்படி சொல்ல வேண்டுமானால் விளம்பரதாரர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் வேண்டும் என்றால் அவர்கள் Revenue hits மூலமாக விளம்பரங்களை கொடுப்பார்கள். அந்த விளம்பரங்களை பிளாக் எழுதுபவர்கள் Revenue hits மூலமாகப் பெற்று தங்களது பிளாக்கில் கொடுப்பார்கள். பிளாக்கிற்க்கு வரும் பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்து அதில் அவர்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் (Email) ஆகியவற்றை விளம்பரதாரர்களுக்கு கொடுப்பார்கள். இது நடந்தால் மட்டுமே பிளாக் எழுதுபவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒவ்வொரு Action - க்கும் 10 முதல் 50 டாலர் வரை பணம் கிடைக்கும். 50 டாலர் வந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். PayPal , Payoneer மற்றும் bank transfer மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
Advantages :
- மிக அதிகமான CPA (Clicks Per Action) Rates- ஐ கொண்டுள்ளது.
- Adsense உடன் ஒப்பிடும்போது குறைந்த Payout -ஐக் கொண்டுள்ளது.
- உடனடியாக Approval வாங்கி விடலாம்.
Disadvantages :
- இதில் CPC மற்றும் CPM போன்ற வழிமுறைகள் இல்லை மாறாக CPA மட்டுமே கொண்டுள்ளது.
புதிதாக பிளாக் எழுதுபவர்களுக்கும் குறைந்த அளவிலான பார்வையாளர்களை கொண்டவர்களுக்கும் இந்த மூன்று முறைகளும் பயனுள்ளதாக இருக்கும். Adsense , Media.net போன்ற தளங்களைக் காட்டிலும் பிரபலமடையாததாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட தளங்கள் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த பதிவினை படித்து நீங்கள் மேற்குறிப்பிட்ட Ad networks மூலமாக பணம் சம்பாதித்தீர்கள் என்றால் Comment செய்யுங்கள்.
இந்தப் பதிவினை படித்து மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் ஷேர் செய்யுங்கள்.