Affiliate Marketing ஆனது ஆன்லைனில் மிகவும் அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய வழிகளில் ஒன்று. Affiliate marketing பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவின் மூலம் அதிக வருமானம் தரக்கூடிய பிரபலமான முறையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
Affiliate Marketing என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?
Affiliate marketing ஆனது மிகப் பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகளில் ஒன்று. ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் பொழுது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான ஒரு பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும். இந்த பங்கானது 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும் படியாக இருக்கும். அது நீங்கள் விற்பனை செய்து கொடுக்கும் பொருளை பொருத்தது. ஒரு பொருளை விற்றால் அதன் பங்காக பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதே பொருளை 10 பேருக்கு விற்றால் 100 ரூபாய் வரைக்கும் உங்களுக்கு கிடைக்கும்.
Affiliate marketing ஆனது கீழ்க்கண்ட நான்கு வழிகளின் மூலமாக எப்படி நடக்கிறது என்பதை அறியலாம்.
2. பிறகு ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அதனை விளம்பரம் (promote) செய்ய வேண்டும். அதற்க்கென அந்தப் பொருளின் லிங்க்கினை கொடுப்பார்கள்.
3. அந்த லிங்கினை நீங்கள் சமூக வலைதளங்கள், பிளாக் , யுடியூப் வீடியோஸ், பேஸ்புக் அல்லது வேறு எந்த வழிகளின் மூலமாகவும் ஷேர் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.
4. அந்த link -னை பயன்படுத்தி யாராவது பொருளை வாங்கினால் அதற்கான பங்கு(கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும்.
Affiliate marketing செய்வதற்கு புதியவரா நீங்கள்?
Affiliate marketing செய்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிகள் உங்களுக்காக...
- ஒரு பிளாக்கை தொடங்குங்கள். அதில் விளம்பரங்களைக் கொடுத்து பொருளை விற்கலாம்.
- ஃபேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று, அவர்களிடம் விற்பனை செய்யலாம்
- உங்களுக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் விளம்பரப்படுத்தலாம்.
பிளாக் மூலமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் எப்படி செய்வது எனக் காண்போம்.
- பிளாக்கை தொடங்குங்கள்.
- எந்த பொருளுக்கு அதிக கமிஷன் கிடைக்கும் என தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி பிளாக்கில் எழுதுங்கள்.
- எந்தப் பொருளை விளம்பரப்படுத்த போகிறீர்களோ அதனை தேர்வு செய்யுங்கள்.
- அந்தப் பொருளைப் பற்றி Content எழுதுங்கள்.
- உங்களுடைய பிளாக்கிற்கு வாடிக்கையாளர்களை வர வையுங்கள்.
- Email marketing services - ஐ பயன்படுத்தி வாடிக்கையாளர்களை வர வையுங்கள்.
- வாடிக்கையாளர்களை அதிகம் உங்களுடைய பிளாக்கிற்கு வர வையுங்கள். இந்த முறைகளை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.
Affiliate Marketing செய்வதற்கு மிகவும் சக்தி வாய்ந்த தளமாக இருப்பது இந்த பிளாக்கிங் (blogging) தான். ஏனென்றால் இதற்கு அதிகமாக பணம் தேவைப்படாது மற்றும் அதை சுற்றி ஏராளமான விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு ஆர்வமாகவும் எவ்வளவு நேரம் மற்றும் எப்படி உழைக்கிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களின் Affiliate பிசினஸ் வளரும்.
Affiliate marketing FAQ :
இப்பொழுது அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது என உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் அது தொடர்பான சந்தேகங்களும் உங்களுக்கு இருக்கும். ஒரு சிலரின் சந்தேகங்களும் அதற்கான பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உங்களுடைய சந்தேகம் தீரும் என நினைக்கிறேன்.
Affiliate marketing மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
அளவே இல்லை. எவ்வளவு வேண்டும் என்றாலும் பணம் சம்பாதிக்கலாம். அது உங்களின் மூலம் எவ்வளவு பொருள் விற்பனையாகிறது என்பதைப் பொருத்தே அமையும்.
பிளாக் வைத்திருப்பது affiliate புரமோஷனுக்கு மிக முக்கியமா?
இல்லை. ஆனால் பிளாக் ஆனது விளம்பரம் செய்வதற்கு மிக முக்கியமான தளம். வேறு சில வழிகளின் மூலமாகவும் நீங்கள் பொருளை விளம்பரப்படுத்தலாம்.
Affiliate program -ல் சேருவதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?
எந்தவித பணமும் தேவைப்படாது. ஆனால் பொருளை விளம்பரப்படுத்துவதற்கு மட்டும் பணம் தேவைப்படும். உதாரணத்திற்கு blog post எழுதுவதற்கு பணம் தேவைப்படாது ஆனால் பிபிசி மார்க்கெட்டிங், ஈமெயில் மார்க்கெட்டிங் மற்றும் வேறு சில வழிகளின் மூலம் விளம்பரப்படுத்த பணம் தேவைப்படும்.
Affiliate marketer ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
எந்த தகுதியும் தேவையில்லை. ஆனால் Copy writing skill -ம் Marketing skill -ம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
நான் எப்படி பொருள்களுக்கான Affiliate link -னை கண்டுபிடிப்பது?
அனைத்து நிறுவனங்களும் Affiliate program -ஐ வழங்குவதில்லை. ஆனால் சில நிறுவனங்கள் வழங்குகின்றன. நீங்கள் ஒரு நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று FAQ Page - ற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கூகுள் சர்ச்சில் நீங்கள் எந்த பொருளை விற்க விரும்புகிறீர்களோ அதனையும் affiliate program என்பதனையும் சேர்த்து (product name + affiliate program) search செய்ய வேண்டும்.அப்படியும் இல்லையென்றால் குரோமில் Affilitizer என்ற add on பயன்படுத்தியும் தெரிந்து கொள்ளலாம்.
Affiliate marketing மற்றும் AdSense ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம். Affiliate marketing ஆனது AdSense - ன் TOS ஐ violate செய்யாது.
Usefull
ReplyDeletexcdfv
ReplyDeleteGood & Useful One !!!!
ReplyDeleteஇந்த வலை தளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த தளத்தை எவ்வாறு நீங்கள் உருவாக்கினீர்கள்?
ReplyDeleteஇந்த வலை தளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது . இந்த தளத்தை எவ்வாறு நீங்கள் உருவாக்கினீர்கள்?
ReplyDeletenaa blogger moolama start pannen.
ReplyDeleteVery useful message for me
ReplyDeletePlease help me ennku tamil la konjam solli tharungal fulla na deplomo student ipom oru kadaila work pannuran yaravathu periya manasu panni help pannuga my number 9003590297 Chennai la than pallawaram la irukan
ReplyDeleteGood explanation ☺
ReplyDeleteIt's very useful
ReplyDeleteVery useful info in tamil
ReplyDeletethankyou
ReplyDeletethank you
ReplyDeleteVera level 💐
ReplyDeleteThank you so much
ReplyDeleteதாய்மொழி தமிழில்... ஒரு அருமையான பதிவு..... 🙂👌🏻
ReplyDelete