Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

Must know things before joining any affiliate program Affiliate program இல் சேருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. நீங்கள் ShareAsale, Amazon ...

Affiliate Marketing - ல் சேருவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

Must know things before joining any affiliate program

Affiliate program இல் சேருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. நீங்கள் ShareAsale, Amazon Associates, CJ, Impact Radius  மேலும் இது மாதிரியான ஏராளமான தளங்களில் Affiliate marketing செய்யலாம்.

ஆனால் நீங்களாகட்டும் இல்லை நானாகட்டும் affiliate program ல் சேருவதற்கு முன்பு இந்த விஷயம் சரியான முறையில் கிடைக்குமா என யோசிப்போம்‌. அதாவது குறித்த நேரத்தில் பணம் கிடைக்குமா என்று யோசிப்போம்.

Affiliate program ல் இலவசமாக சேர்ந்து கொள்ளலாம். ஆனால் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய அதிகப்படியான உழைப்பையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டிவரும்.

உங்களின் உழைப்பிற்கு ஏற்ப பணம் வருமா என யோசித்து யோசித்து உங்களுக்கு தலைவலியே வந்துவிடும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துவதற்கு   முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.


Checklist :- Affiliate பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன்பு ஆராய வேண்டிய சில விஷயங்கள்


1.Payout Method :-


நீங்கள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தி அதிலிருந்து ஆயிரம் டாலர் சம்பாதித்து விட்டீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்களால் அந்த பணத்தை பெற முடியவில்லை. ஏனென்றால் உங்களுடைய நாட்டிற்கு ஏற்றவாறு Payout முறை அதில் இல்லை. இது ஒன்றும் புதிதல்ல.ஏராளமான நபர்களுக்கும் இது நடந்துள்ளது.



கண்டிப்பாக உங்களுடைய நாட்டிற்கு உகந்ததாக உள்ள Payout methods இருக்கிற affiliate program ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு ஏற்றவாறு payout முறை இல்லை எனில் அவர்களின் affiliate manager உடன் பேசுங்கள் அல்லது அவர்களின் contact form ஐ பயன்படுத்தி கேட்டுப்பாருங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்தி தரவும் வாய்ப்பு இருக்கிறது.
Affiliate marketing மூலம் பணம் பெறுவதற்கு மிக பிரபலமான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.அவை,
  • PayPal
  • Payoneer 
  • Direct Bank deposit
  • Cheque


2. Minimum payout :-


புதியதாக affiliate marketing செல்பவர்கள் உடனே அதை விட்டு வெளியேற இந்த Minimum payout ம்  ஒரு காரணம்.

அதிகப்படியான affiliate programs குறைந்தபட்சம் 50 டாலர்கள் வந்தால் மட்டுமே பணத்தைக் கொடுப்பார்கள். இது விதிவிலக்காக உள்ளது. ஆனால் இது அதிகமோ இல்லை குறைவோ 50 டாலர்கள் தான் அவர்களுக்கு Minimum payout.
நீங்கள் அந்த Minimum payout ஐ அடைந்திருந்தாலும் உங்களால் பணத்தை பெற முடியாது. உதாரணத்திற்கு ஒரு சந்தைபடுத்துபவர் (Marketer) கடுமையாக உழைக்கிறார். ஆனால் அவரால் Minimum payout ஐ அடைய முடியவில்லை. அவர் செய்த விளம்பரங்களுக்கு பணம் கிடைக்காததால் அவர் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்.

இது அந்த Marketer செய்த தவறு. காரணம், அவர் affiliate program ல்  சேர்வதற்கு முன்பு Minimum payout என்ன என்பதை check செய்யாமல் விட்டதே ஆகும்.
ஆகவே எந்த ஒரு affiliate program லும் சேர்வதற்கு முன்பு அவர்களின் Minimum payout என்ன  என்பதை தெரிந்து கொண்டு சேருங்கள்.

3. Reputation of product / network :-


Affiliate marketing பற்றி மக்களிடம் கேட்டால், ஏராளமாக கலவையான கருத்துகளையே தருவார்கள். அதற்கு காரணம் சிலர் affiliate marketing மூலம் நிறைய பணம் சம்பாதித்து இருப்பார்கள் சிலர் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். நல்லது, அது அவர்களுடைய தவறு. காரணம் அவர்கள் affiliate program/network ல்  சேருவதற்கு முன்பு அந்த நிறுவனம் எந்த அளவுக்கு பிரபலமானது ஆராய்ந்து இருக்கமாட்டார்கள்.

அதிகமாக புதிய affiliate programs உங்களுக்கு அதிகப்படியான கமிஷன் தருவதாக சொல்லி இருப்பார்கள். அதையும் நம்பி நீங்கள் சேர்ந்து இருப்பீர்கள். ஆனால் இறுதியாக minimum payout ஐ நீங்கள் அடைந்திருந்தாலும் அவர்கள் உங்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றி எவ்வளவு தான் மற்றவர்களுக்கு கூறினாலும் அந்த நிறுவனம் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் மிகவும் பிரபலமான affiliate program -ல் சேருவது நல்லது.

இந்த உலகத்தில் உள்ள சில பிரபலமான affiliate marketplaces ஐ கீழே கொடுத்திருக்கிறேன். அதில் நீங்கள் apply செய்து பணம் சம்பாதிக்கலாம்.

  • ShareAsale
  • Commission junction
  • Clickbank
  • JvZoo
  • Impact radius
  • Refersion
  • Amazon Associates
  • Growsumo
  • Rakuten
  • Avangate
  • Affiliate window (Europe)
  • TradeDoubler (Europe)
  • Vcommission (India)
  • Flipkart affiliate (India)
  • Alibaba affiliates
  • Aliexpress affiliates
  • iTunes affiliates
  • eBay partner network

4.Cookie length :-


நான் Affiliate marketing ஐ விரும்ப காரணம், நாம் சுதந்திரமாக வேலை செய்யலாம் என்பதால் தான்.

நீங்கள் உங்களுடைய பிளாக்கில் Affiliate link ஐ கொடுத்து பிறகு அதன் மூலம் மற்றவர்கள் பொருள் வாங்கலாம். அதற்கு சில நாட்கள் கூட ஆகலாம். அப்படி சில நாட்கள் கழித்தும் பொருள் விற்பனை ஆனாலும் உங்களுக்கு கமிசன் கிடைக்கும்.

இதற்கு காரணம், Long cookie length. ஆனால் அனைத்து affiliates ம் இதிலிருந்து மாறுபடும். நீங்கள் எங்கிருந்தாலும் 30 - 90 நாட்களுக்குப் பிறகும் உங்களுடைய affiliate link மூலமாக பொருள் வாங்கப்பட்டால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இதிலும் சிறப்பு என்னவென்றால் உங்களுடைய link ல் சென்று நீங்கள் கொடுத்திருந்த பொருளை வாங்காமல் வேறு பொருளை வாங்கினாலும் அதற்கான கமிஷன் உங்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும் ஒருசில affiliate programs புதியதாக affiliate marketing செய்பவர்களிடம் கீழே கொடுக்கப்பட்டவற்றை பற்றி தெரிவிப்பது இல்லை.

  • Standard cookie length ( 30 - 90 days )
  • Commission on sale of other products


கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்ட இரண்டு விஷயங்களையும் Sign up  செய்வதற்கு முன்பு check செய்துகொள்ளுங்கள்.

மிகப்பிரபலமான நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டையும் தருகின்றன. ஆகையால் இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

Affiliate Programs ல் கவனிக்க வேண்டியவை :-


கண்டிப்பாக affiliate marketer - கள் ஏராளமான விஷயங்களை புதிதாக ஏதாவது ஒரு affiliate program ல் சேர்வதற்கு முன்பு check  செய்துகொள்ளவேண்டும். இருப்பினும் மேலே சொன்ன நான்கு விஷயங்களை பின்பற்றினால் எந்த ஒரு affiliate company யிடம் இருந்து ஏமாற்றப்பட மாட்டீர்கள்.


Affiliate program ல் சேருவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா? ஏதாவது ஒரு affiliate company உங்களை ஏமாற்றி இருக்கிறார்களா? எந்த Company ? Comment செய்யுங்கள்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள்.

8 comments:

  1. சிறந்த முறையில் விளக்கம் கொடுத்திருக்கிங்க. நன்றிகள் ..

    ReplyDelete
  2. மிகவும் அருமை👍👍 நன்றாக புரிகிறது. நன்றி🙏🙏🙏

    ReplyDelete
  3. Mobilepe company பற்றி கூறுங்கள்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நன்றி.

    ReplyDelete
  5. Dear Friend
    அழகு தமிழில் மிகவும் அழகாக புரியும்படி விளக்கமாக தெளிவாக கூறியுள்ளிர் . வாழ்த்துக்கள் நன்றி 🙏
    My channel name -
    1) Wellwisher Ananthan
    2) Motivation Ananthan

    Thanks for watch like and Subscribe my channel

    ReplyDelete