Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு(topic) ஆகும். பிளாக்கை தொடங்குவது வேடிக்கையானது என்றாலும், பிளாக்கின் க...

சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு(topic) ஆகும்.

பிளாக்கை தொடங்குவது வேடிக்கையானது என்றாலும், பிளாக்கின் கடினமான பகுதி எந்த தலைப்பில் எழுதப்போகிறோம் என்பதை தேர்வு செய்வது தான். பிளாக்கிங்கில் புதியதாக இருக்கும் நம்மில் பலர் ஒரு தலைப்பைப் பற்றி எழுதி, மறுநாள் மற்றொரு தலைப்புக்குத் தாவுகிறோம்.

நீங்கள் இன்று ஸ்மார்ட்போன்களைப் பற்றி எழுதுகிறீர்கள். பின்னர் நாளை உடல்நலம் பற்றி எழுதுகிறீர்கள். பின்னர் அடுத்தவாரம் அரசியல் பற்றி பேச ஆரம்பிக்கிறீர்கள். இந்த மாதிரி செய்வது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கும். அதனால் நீங்கள் உங்களின் Targeted Audience ஐ ஈர்க்க தவறவிடுவீர்கள். 

உதாரணத்திற்கு, Tamilbold ஆனது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய வழிகளைப் பற்றியும் அது தொடர்பான விஷயங்களும் அடங்கிய பிளாக் ஆகும்.

இதன் Niche ஆனது blogging, Affiliate marketing, Wordpress, SEO மற்றும் பல. இது பல தலைப்புகள்(niche) போல் தெரிகிறது என்று எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் உற்று நோக்கினால், அனைத்தும் ஆன்லைன் மார்க்கெட்டிங்/பிளாக்கிங்/தொழில்முனைவோர் niche இன் ஒரு பகுதியாகும். 

இதேபோல், உங்களின் பிளாக்கிற்கு முதல் நாளில் இருந்தே niche இருக்க வேண்டும். குறிப்பு : நான் முதலில் பிளாக் ஆரம்பிக்கும்போது, எந்த ஒரு niche ஐயும் தேர்வு செய்யவில்லை. About me இல் கூறியபடிதான் ஆரம்பித்தேன். பின்னர் தான் இந்த niche ஐ தேர்வு செய்து எழுதுகிறேன். இதற்கு தொடர்பில்லாத நிறைய பதிவுகளையும்அழித்துள்ளேன்.

A few Tips to decide on the Niche of your blog 


Niche ஐ தீர்மானிக்கும்போது, நீங்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். 

நீங்கள் லாபத்திற்காக பிளாக்கிங் செய்கிறீர்கள் என்றால், டன் கணக்கான traffic ஐ பெறும் ஒரு topic ஐ தேர்வு செய்ய விரும்பாதீர்கள். ஏனெனில் அதில் பணம் கிடைக்காது.

இந்த மாதிரி Topics, 

 • Free SMS 
 • Free wallpaper
 • WhatsApp tips 
 • Free movie downloads 
 • Etc

இந்த Niches உங்களுக்கு அதிகமான traffic ஐ பெற்று தரும். ஆனால் அநேகமாக அதிக பணத்தை பெற்றுத் தராது.

அதேநேரத்தில், எழுதுவதற்கு மிக கடினமாக உள்ள niche ஐ நீங்கள் தேர்வு செய்யாதீர்கள். 

எனவே, ஒரு நல்ல Niche எது?

ஒரு நல்ல Niche என்பது நீங்கள் விரும்பும் விஷயங்களுடன் தொடர்புடையது. நல்ல traffic மற்றும் பணமதிப்பை கொண்டிருக்கும். அதற்கும் மேலாக உங்கள் niche -க்கு எதிர்காலம் இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு iPhone 13 வெளிவரும் போது iPhone 12 இல் ஏன் ஒரு தொழிலை மேற்கொள்வீர்கள்?

ஒரு Niche ஐ தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள் இங்கே :-

1. உங்களின் ஆர்வம் (Your interest )
2. தொழில் மதிப்பு (CPC) ( Business value )
3. மாத/வருட தேடல்கள் ( Monthly/Yearly Searches )
4. தலைப்பின் போக்கு மற்றும் எதிர்காலம் ( Trends & Future of the topic )

இப்போது உங்களுக்காக சரியான niche ஐ தேர்வு செய்ய உதவும் யோசனைகளைப் பற்றி பார்ப்போம். சரியாக இல்லாத ஒரு niche ஐ நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்தால் அல்லது பல விஷயங்களைப் பற்றி நீங்கள் பிளாக்கிங் செய்திருந்தால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் எப்போதும் உங்கள் niche ஐ மாற்றலாம்.

சரி, வாருங்கள். நமது வழிகாட்டியைப் பார்ப்போம்.

1. Brainstorm, Brainstorm, Brainstorm


உங்களுக்கு விருப்பமான தலைப்புகள் யாவை?  கிரிக்கெட்? கோலிவுட்? நாட்டுப்புற இசை? உங்களுக்கு சுவாரஸ்யமான அனைத்து தலைப்புகளின் பட்டியலையும் உருவாக்கவும்.

இந்த கட்டத்தில் பட்டியலின் நீளம் குறித்து கவலைப்பட வேண்டாம். இதில் 20 வெவ்வேறு விஷயங்கள் இருக்கலாம். இது ஒரு பொருட்டல்ல.

2. Passion or Profit or Both


"நான் மிகவும் பரபரப்பான தலைப்புகளைப் பற்றி பிளாக்கிங் செய்ய வேண்டாமா? எல்லோரும் கூகிள் செய்யும் விஷயங்கள்?"

ம்ம்ம்...நல்ல கருத்து.

எடுத்துக்காட்டாக, தொழில்நுட்பம் பற்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் பைத்தியம் போல் கூகிள் செய்கிறார்கள்.(இந்திய பிளாக்குகளில் 90% ஐடியில் இருந்து வந்தவர்களுக்கு சொந்தமான தொழில்நுட்ப பிளாக்குகள் என்பதில் ஆச்சர்யமில்லை)

ஆனால் நீங்கள் தொழில்நுட்பத்தில் சுத்தமாக ஆர்வம் இல்லாதவர் அல்லது அதில் நிபுணத்துவம் பெற்றவர். இது ஒரு பரபரப்பான விஷயம் என்பதால் நீங்கள் ஒரு தொழில்நுட்ப பிளாக்கை தொடங்க வேண்டுமா?

 நிச்சயமாக, நீங்கள் ஒரு மணி நேரத்தில் பிளாக்கிங் செய்ய தொழில்நுட்பத்தைப் பற்றிய போதுமான தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் பிளாக்கிங்கில் வெற்றியை அடைவது என்பது ஒரு நீண்ட செயல்முறை.

முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று பார்வையாளர்களை பெறுவீர்கள். உங்கள் பிளாக்கின் niche -க்காக web இல் தேடிப் படித்து அவற்றிலிருந்து அர்த்தமுள்ள கருத்துகளைத் தெரிவிக்க முயற்சி செய்கிறீர்கள்.

உங்களுக்கு ஆர்வமில்லாத தலைப்பில் தரமான உள்ளடக்கத்தை உருவாக்க இரவும் பகலும் பாராமல் உழைக்க முடியும் என உறுதியாக இருக்கிறீர்களா...அதாவது ஒரு வருடத்திற்கு, இரண்டு வருடத்திற்கு, ஐந்து வருடத்திற்கு.

The Golden Rule :- உங்களுக்கு விருப்பமில்லாத தலைப்புகளை (niche or topic) தேர்ந்தெடுக்க வேண்டாம்.

3. Competition : Cricket Vs German Shepherd Hair care 


உங்களுக்கு ஆர்வமுள்ள அல்லது விருப்பமுள்ள தலைப்புகளின் பட்டியலை உருவாக்கிவிட்டீர்கள். அதில் கிரிக்கெட் முதலில் உள்ளது.

நீங்கள் கிரிக்கெட்டிலே மூழ்கி உள்ளீர்கள். சாப்பிடும்போதும் கிரிக்கெட், தூங்கும் போதும் கிரிக்கெட், கனவு காணும் போதும் கிரிக்கெட் என இருக்கிறீர்கள்.

எனவே நீங்கள் கிரிக்கெட் வலைப்பதிவை தொடங்க வேண்டுமா? அதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது.

Cricinfo.com, Cricketnext.in மற்றும் Oneindiacricket போன்றவற்றிலிருந்து உங்களுக்கு கொஞ்சம் போட்டி இருக்கும்.

சரி, எனவே நீங்கள் அந்த niche இன் போட்டி நோக்கத்தைப் புரிந்துகொண்டு கிரிக்கெட்டை வேண்டாம் என நிறுத்துகிறீர்கள்.

இப்பொழுது என்ன? உங்களுக்கு பிடித்த மற்றொரு தலைப்புக்கு செல்லுங்கள். அதாவது இரண்டாவதாக உள்ள German shepherd hair care -ற்கு. 

நீங்கள் கூகுளில் தேடலை செய்கிறீர்கள். அதில் எவ்வித போட்டியும் இல்லை. Zero competition ஆக இருக்கிறது. எனவே நீங்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் விஷயத்தில் உங்கள் வலைப்பதிவை உருவாக்க முடியுமா?

மீண்டும் யோசியுங்கள்.

போட்டி பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால் அதற்கான demand என்ன?

ஒவ்வொரு மாதமும் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் அதை கூகிள் செய்வார்களா?

உங்கள் ஆர்வம்(interest), பிரபலமான போக்குகள்(popular trends), மற்றும் போட்டியின் நிலை(level of competition) ஆகியவற்றில் சமநிலையை ஏற்படுத்துவதே முக்கியம். அதாவது இந்த மூன்றும் பொருந்தும் வகையில் உள்ள niche ஐ தேர்ந்தெடுங்கள்.

4. Long-Term Potential


"Current events" பற்றி எழுதுவது தற்போது பிரபலமாக உள்ளது. இது உங்கள் ஆர்வங்களின் பட்டியலிலும் முதலாவதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் www.indiaelection2021.com போன்ற பிளாக்கை தொடங்க வேண்டாம். இதுபோன்ற ஒன்று நீண்ட காலத்திற்கு மதிப்பை கொண்டிருக்காது. இது இந்த 2021 தேர்தல் வரை மட்டுமே மதிப்பைக் கொண்டிருக்கும். அதன் பின்பு இத்தளத்திற்கு பார்வையாளர்கள் யாரும் வரமாட்டார்கள்.

காலத்தால் அழியாத ஒரு தலைப்பை தேர்வு செய்யுங்கள். இதைச் செய்வதற்கான ஒரு வழி, Evergreen topics இல் பிளாக்கிங் செய்வது. 

Google trends ஐ பயன்படுத்தி எந்தவொரு தலைப்பு காலத்திற்கும் மதிப்பைக் கொண்டிருக்கும் என தேடிப் பார்க்கலாம். உதாரணத்திற்கு,
5. Why would people listen to me?


மக்கள் ஏன் என் பேச்சை கேட்பார்கள்?

எனவே இப்போது மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில் உங்கள் பட்டியலை 3 அல்லது 4 தலைப்புகளாகக் குறைத்துள்ளீர்கள். தனித்துவமான content ஐ வழங்குவதற்கான திறனை இந்த தலைப்புகளில் எது உங்களுக்கு வழங்குகிறது என்பதை இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அது இதுவாகக் கூட இருக்கலாம்.
 • அனுபவம் (அனைத்து இடங்களுக்கும் பயணிப்பது உங்களுக்கு ஒரு travel blog ஐ எழுதுவதற்கு தேவையான ஒரு தகுதி).
 • பல்கலைக்கழகத்தில் ஒரு தலைப்பின் விரிவான ஆய்வுகள்
 • அடிப்படையாக எழுதுவது கூட (basic writing). இந்தியாவில் தனிப்பட்ட பிளாக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

என்னோட விஷயத்தில், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி இணையத்தில் தேடிய போது தமிழில் எந்த தகவலும் அவ்வளவாக கிடைக்கவில்லை. அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. அதன் காரணமாக பணம் சம்பாதிக்கும் பொருட்டு, பிளாக் ஆரம்பிக்கலாம் என தொடங்கி மருத்துவம், சமையல் குறிப்பு, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது, அழகு குறிப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் பிளாக்கை தொடங்கினேன். என்னை மாதிரி தமிழில் படிக்க விரும்பும் நபர்களுக்கு என்னுடைய பிளாக் உதவும் என நினைத்து தமிழில் தொடங்கினேன். பின்னாளில் இணையத்தில் படிக்க படிக்க, ஒரு வலைதளத்திற்கு niche என்பது மிக முக்கியம் என அறிந்து, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது மற்றும் அதற்கான வழிமுறைகளைப் பற்றி இணையத்தில் இருந்து படித்து, தமிழில் என்னுடைய இந்த பிளாக்கில் எழுதி வருகிறேன்.

நான் பிளாக் தொடங்கும்போது niche ஐ  பற்றி எனக்கு தெரியாது. அதனால் மிகவும் சிரமப்பட்டேன். எனது நேரமும் வீணாய் போனது.

எனவே சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் எழுத விரும்பும் நீண்ட கால திட்டத்தைக் கண்டறியுங்கள். உங்களை கவர்ந்திழுக்கும் தலைப்பை(topic) கண்டறியுங்கள். எல்லாவற்றையும் விட நீங்கள் விரும்பும் ஒன்றைக் கண்டறியுங்கள்.

பிளாக்கிங் என்பது அறிவைப் பகிர்வது மட்டுமல்ல. இது உங்களைப் பயிற்றுவிப்பது மற்றும் உங்கள் சொந்த புரிதலை மேம்படுத்துவது பற்றியும் ஆகும்.

இந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்கான ஒரு நல்ல niche ஐ அடையாளம் காணுங்கள். நீங்கள் விரும்பினால் கீழே உள்ள கருத்துகளில் அந்த niche என்ன என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

பிளாக்கை தொடங்கும் பெரும்பாலான புதியவர்கள் தங்கள் பிளாக்கிங் தளமாக Blogspot ஐப் பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் Blogspot ஆனது இலவசம், த...

பிளாக்கை தொடங்கும் பெரும்பாலான புதியவர்கள் தங்கள் பிளாக்கிங் தளமாக Blogspot ஐப் பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் Blogspot ஆனது இலவசம், தொடங்குவதற்கு உங்களுக்கு குறைந்த தொழில்நுட்ப திறன்கள் தேவை. அதுமட்டுமில்லாமல் முதலீடு எதுவும் இல்லாமல் வருமானத்தை பெற முடியும்.

மேலும் நீங்கள் பிளாக்கில் Unlimited bandwidth மற்றும் Unlimited storage ஐப் பெறுவீர்கள்.

                       Read : How to Start a free blog on BlogSpot

Blogspot இல் நீங்கள் விரும்பாத ஒன்று .blogspot டொமைன் பெயர். இதை Custom domain name வாங்குவதன் மூலம் எளிதாக சரி செய்ய முடியும்.


Blogspot URL ஆனது இப்படி இருக்கும் 

       www.domain.blogspot.com

Custom domain name ஆனது இப்படி இருக்கும் 

       www.domain.com

Custom domain name ஆனது .blogspot டொமைன் பெயரை விட பல கூடுதல் நன்மைகளை கொண்டுள்ளது.

உங்கள் Blogspot பிளாக்கிற்கு Custom domain ஐ ஏன் வாங்க வேண்டும்?

 

1. Buying a domain name is cheap

ஒரு டொமைன் பெயரை வாங்குவது மிகவும் மலிவானது. நீங்கள் ஒரு நல்ல டொமைன் பெயரை 500 - 800  ரூபாய்க்குள் பெறலாம். 

நீங்கள் .com டொமைன் பெயரை GoDaddy இல் மலிவான விலைக்கு வாங்கலாம்.

2. Social media credibility

Blogspot ஒரு இலவச தளமாக இருப்பதனால், பெரும்பாலும் ஸ்பேமர்களால்(spammer) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த Blogspot ஐ சமூக ஊடகங்களில் மக்கள் நம்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதற்கு இது ஒரு காரணம். 

உங்கள் blogspot பிளாக்கிற்கு custom domain name ஐ பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு  இலவச வலைப்பதிவைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை இது நீக்குகிறது. எனவே இது ஒரு ஸ்பேமர் அல்ல.

3.Web promotion

Web promotion என்பது சமூக ஊடகங்கள் முதல் link building வரை பல விஷயங்களைக் குறிக்கும்.

ஆனால் நம்பகத்தன்மையைப் பற்றி பேசும்போது, பெரும்பாலான சிறந்த வலைதளங்கள் ஒரு blogspot டொமைனிற்கு ஒரு இணைப்பை வழங்க விரும்புவதில்லை.

இது promotion ஐ மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.

4. Seriousness toward blogging

நீங்கள் என்னதான் கடுமையாக வேலை பார்த்து உங்களின் blogspot பிளாக்கிற்கு நல்ல content ஐ உருவாக்கி இருந்தாலும், ஒரு நல்ல layout, நல்ல Template மற்றும் Custom domain name இல்லாமல் இருந்தால், மக்கள் நீங்கள் தீவிரமாக பிளாக் எழுதவில்லை என்றே நினைப்பார்கள்.

அடிப்படையில், நீங்கள் விரும்பும் விஷயத்தில் பணத்தை செலவிட நீங்கள் தயாராக இல்லை என்றால், உங்கள் பிளாக்கை யாரும் நம்பமாட்டார்கள்.

 
5. Branding 

உங்கள் வாசகர்களின் மனதில் நீங்கள் உருவாக்கும் கருத்து உங்கள் பிளாக்கிங் வெற்றிக்கு இன்றியமையாதது.

Custom domain name ஐ  பயன்படுத்துவது உங்கள் வலைப்பதிவை ஒரு தொழில்முறை பிராண்டாக நிறுவ உதவுகிறது.

நீங்கள் மேலும் நல்ல logo, favicon மற்றும் banner ஐப் பயன்படுத்தி உங்களின் பிராண்டை  நிலைநிறுத்தலாம்.

6. Professional Email

Custom domain name வைத்திருப்பதனால் custom domain name -ன் அடிப்படையிலான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கான திறன் வருகிறது.

உங்கள் டொமைன் பெயருடன் ஒரு மின்னஞ்சல் முகவரியை நீங்கள் வைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, Contact@tamilbold.com

 • How to Create a Professional Email using zoho for free

7. The SEO advantage

உங்களின் வலைப்பதிவை வேர்ட்பிரஸ்க்கு மாற்ற திட்டமிட்டால், custom domain name ஆனது அந்த விலைமதிப்பற்ற link juice ஐ நீங்கள் இழக்கமாட்டீர்கள் என்பதை உறுதிசெய்யும்.

உங்கள் இடம் பெயர்வு ஆனது மேலும் Search engine friendly ஆக இருக்கும்.

How to get a Custom BlogSpot domain


நீங்கள் உங்களின் பிளாக்கிற்கு custom domain name ஐ வாங்க திட்டமிட்டால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பது பற்றி இங்கே:

1. Find domain name

உங்களின் பிளாக்கிற்கு சரியான டொமைன் பெயரை தேடுங்கள். உங்கள் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக பிராண்டபிள் மற்றும் மறக்கமுடியாத ஒன்றைப் பயன்படுத்தவும். பின்வரும் இணைப்பின் மூலம் சரியான டொமைன் பெயரை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை அறியலாம்.


2. Follow this detailed guide

பின்வரும் இணைப்பின் மூலம் நீங்கள் உங்களின் பிளாக்கிற்கு Custom domain name ஐ எவ்வாறு இணைக்கலாம் என்பதை அறியலாம்.

 • How to add custom domain name to your blog

Note : Wordpress ஆனது Blogspot பிளாக்கிங் தளத்தை விட சிறந்தது ஆகும். ஜனவரி 2016 அறிக்கையின்படி, உலகில் 25% வலைதளங்கள் வேர்ட்பிரஸ் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள, 


நான் பரிந்துரைப்பது என்னவென்றால், ஒரு சில மாதங்களுக்கு blogspot ஐப் பயன்படுத்திவிட்டு பின்பு Self hosted wordpress blog -ற்கு மாறிக்கொள்ளலாம். இருந்தாலும் உங்களிடம் பணமிருந்தால் நீங்கள் நேராக wordpress இல் பிளாக்கை தொடங்குவது நல்லது.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

உங்களது வலைதளத்திற்கு சரியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்களின் வெற்றிக்கு முக்கியமானது. நீங்கள் தவறான டொமைன் பெயரை தேர்வு செய்தால், உங...

உங்களது வலைதளத்திற்கு சரியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்களின் வெற்றிக்கு முக்கியமானது. நீங்கள் தவறான டொமைன் பெயரை தேர்வு செய்தால், உங்கள் brand மற்றும் Search ranking -களை பாதிக்காமல் பின்னர் மாறுவது ஒரு தொந்தரவாக இருக்கலாம். 

அதனால்தான் தொடக்கத்திலிருந்தே சிறந்த டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

முதலில் தொடங்கும்போது, சரியான டொமைன் பெயருடன் கவர்ச்சியான வணிக பெயர் யோசனைகளைக் கொண்டுவருவது கடினம்.

இந்த கட்டுரையில், டொமைன் பெயர் யோசனைகளைப் பெற உங்களுக்கு தேவையான அனைத்து கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். சிறந்த டொமைன் பெயரைத் தேர்வு செய்து, உங்கள் புதிய டொமைனை ( இலவசமாக ) பதிவு செய்வோம்.

14 Tips for Choosing the Best Domain :-


புதியதாக பிளாக்கை தொடங்கும் போது, டொமைன் பெயரை தேர்வு செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நீங்கள் தொடக்கத்திலேயே தவறு செய்ய விரும்பமாட்டீர்கள்.

இந்த செயல்முறையை எளிதாக்க, உங்கள் வலைதளத்திற்கான  சிறந்த டொமைனை தேர்வு செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய எளிய 14 படிகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

  01. Stick with .Com
  02. Use Keywords in your Domain Name Search  
  03. Keep your domain name short
  04. Make it easy to pronounce and spell
  05. Keep it unique and brandable 
  06. Avoid hyphens in domain name
  07. Avoid doubled letters 
  08. Leave room to expand
  09. Research your domain name
  10. Use domain generators for clever ideas
  11. Act quickly before someone else taken it
  12. Best place to register a domain name
  13. Get free domain with web hosting
  14. Most popular domain registrars

மேலும் விபரங்களுடன் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1. Stick with .com


இன்றைய காலகட்டத்தில் நிறைய New domain name extensions உள்ளன. Original extension -களான .com, .net மற்றும் .org முதல் niche extension -களான .pizza,  .photography மற்றும் .blog வரையிலான domain name extensions உள்ளன.

நான் எப்போதும் .com டொமைன் பெயரைத்  தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பேன்.

புதிய extension -களை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக பிளாக் பெயர்களை கவர்ச்சியூட்டும்  விதமாக கொண்டு வரலாம் என்றாலும், தற்போது வரை .com ஆனது அதிகம் நிறுவப்பட்ட மற்றும் நம்பகமான  domain name extension ஆக உள்ளது.

புதிய domain extension -களான .ninja அல்லது .photography போன்ற domain name extensions நம்பகத்தன்மையற்றவையாக உள்ளன.

.com டொமைன்கள் மிகவும் மறக்க முடியாதவை. பல பயனாளர்கள், குறிப்பாக தொழில்நுட்ப ஆர்வலர்களாக இல்லாதவர்கள், ஒவ்வொரு டொமைனின் முடிவிலும் அதைப் பற்றி சிந்திக்காமல் தானாகவே  ".com"  என தட்டச்சு செய்வார்கள்.

உங்கள் வலைதளம் jane.photography  என வைத்துக்கொள்வோம். உங்களின் பயனர்கள் தற்செயலாக jane.photography.com என தட்டச்சு செய்தால், அவை இணையதளத்தில் error பக்கத்தில் வந்து முடிவடையும்.

புத்திசாலித்தனமாக அந்த ஆபத்தை தவிர்க்க .com உடன் ஒட்டிக் கொள்வது சிறந்தது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன் விசைப்பலகைகள் தானாகவே .com பொத்தானைக் கொண்டுள்ளன.

2. Use Keywords in Your Domain Name Search


ஒரு டொமைனில் keywords இன் பங்கு மிக முக்கியமானது. உங்கள் டொமைன் பெயரில் keywords ஐ பயன்படுத்துவதன் மூலம்,  உங்கள் வலைதளம் எதைப் பற்றியது என தேடுபொறிகளுக்குச் சொல்கிறீர்கள். தரமான உள்ளடக்கம் மற்றும் நல்ல பயனர் அனுபவத்துடன் சேர்ந்து, உங்கள் domain இல் உள்ள keywords கூகுளில்  உங்களின் rank ஐ உயர்த்த உதவும்.

உங்களின் keywords உடன் கூடிய ஒரு நல்ல டொமைனை கண்டுபிடிப்பது கடினம். அது ஏற்கனவே வேறொருவரால் எடுக்கப்படாமலும் இருக்க வேண்டும்.

உங்கள் டொமைன் தனித்துவமாக இருக்க, நீங்கள் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் keywords ஐ வேறு வார்த்தைகளுடன் இணைக்க வேண்டும்.

3. Keep your Domain Name Short


Keywords முக்கியமானவை என்றாலும், டொமைன் பெயரானது நீளத்துடன் செல்ல வேண்டாம். குறுகிய மற்றும் மறக்கமுடியாத டொமைன் பெயரை வைத்திருப்பது நல்லது.

உங்கள் டொமைன் பெயரை 12 எழுத்துகளுக்கு கீழ் வைத்திருக்க நான் பரிந்துரைப்பேன். நீளமான டொமைன் பெயரை உங்கள் பயனர் நினைவில் வைத்துக் கொள்வது கடினம்.

பயனர்கள் நீண்ட டொமைன் பெயரை, எழுத்துப் பிழையுடன் உள்ளிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது Traffic ஐ இழப்பதற்கு வழிவகுக்கும்.

அதனால்தான் உங்கள் டொமைன் நீளத்தை குறுகியதாக வைத்திருப்பது நல்லது.

4. Make your Domain Name Easy to Pronounce and Spell


பேசும் போதும் எழுதும் போதும் உங்கள் டொமைன் பெயரை எளிதாக பகிரக்கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் டொமைன் பெயரை நேரில் பகிருமாறு கேட்கப்படும் போது உங்களுக்கு தெரியாமல் இருக்க கூடாது.

ஒரு தொழில்முறை வணிக மின்னஞ்சல் முகவரியை உருவாக்க உங்கள் டொமைன் பெயரைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், கண்டிப்பாக எந்தவொரு கேட்பவனுக்கும் புரிந்துகொள்ளும் படியாகவும் எளிதில் உச்சரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

5. Keep it Unique and Brandable


உங்கள் பிளாக்கின் டொமைன் பெயர் தனித்துவமாக இருக்க வேண்டும். அதனால் உங்கள் வாசகர்களின் மனதில் நீங்கள் தனித்து நிற்கலாம். உங்கள் பிளாக்கின் niche ஐ கொண்ட மற்ற பிளாக்குகளை கண்டுபிடித்து, அவர்கள் எந்த மாதிரியான டொமைன் பெயர்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்.

நீங்கள் தற்செயலாக கூட trademark பெயர்களை பயன்படுத்த விரும்பாதீர்கள். அதேமாதிரி மற்ற பிளாக்கர்களின் டொமைன் பெயரை காப்பி அடிக்காதீர்கள்.

மேலும் பிராண்டபிள் டொமைன் பெயர்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிராண்டபிள் டொமைன் பெயர்கள் தனித்துவமானவை, கவர்ச்சியானவை மற்றும் மறக்கமுடியாதவை. எடுத்துக்காட்டாக, "Amazon.com"  என்பது "Buybooksonline.com" ஐ விட மிகவும் பிராண்டபிள் பெயர்.

புதிய டொமைனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் ஏற்கனவே இருக்கும் பிராண்டின் பதிப்புரிமை கொள்கைகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, wordpress ஆனது உங்கள் டொமைன் பெயரை "wordpress" உடன் வைத்திருக்க அனுமதிக்காது. அதாவது wordpressguide.in,  mywordpress.com இது மாதிரியான டொமைன் பெயரை நீங்கள் வாங்குவதை அனுமதிக்காது. "wordpress" என்பதற்கு பதிலாக "WP" உள்ளிட்ட பெயரைப் பயன்படுத்த அவை உங்களை அனுமதிக்கும்.

6. Avoid hyphens in Domain name


Hyphens உடன் ஒரு டொமைன் பெயரை ஒருபோதும் உருவாக்க விரும்பாதீர்கள். ஹைபன்கள் நீங்கள் தொடர்புகொள்ள விரும்பாத Spam டொமைன்களின் அடையாளமாக இருக்கலாம்.

ஹைபன்கள் உள்ள டொமைன்களும் எழுத்துப் பிழைகளுக்கு ஆளாகின்றன. நீங்கள் விரும்பும் டொமைன் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதால், ஹைபன்களுடன் ஒரு டொமைன் பெயரை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் பயனர்கள் ஹைபனை தட்டச்சு செய்ய மறந்துவிட்டால், உங்கள் போட்டியாளரின் தளத்திற்கு சென்றுவிடுவார்கள்.

7. Avoid Double Letters 


இரட்டிப்பான எழுத்துக்களை கொண்ட டொமைனைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் எழுத்துப்பிழையினால்  உங்களுக்கு
 வரவேண்டிய traffic ஐ இழக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, presssetup.com போன்ற ஒரு டொமைன் எழுத்துப் பிழைகளுக்கு ஆளாக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு traffic வராமல் போய்விடும்.

இரட்டிப்பான எழுத்துகளைத் தவிர்ப்பது உங்கள் டொமைன் பெயரை தட்டச்சு செய்ய எளிதானதாகவும், மேலும் பிராண்டபிளாகவும் இருக்க வைக்கும்.

8. Leave Room to Expand


உங்கள் industry அல்லது niche -க்கு தொடர்புடைய ஒரு டொமைன் பெயரை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். ஏனெனில் இது உங்கள் வலைதளத்தைப் பற்றி பயனர்களுக்கு சில யோசனைகளைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு பூக்காரன் orchidblog.com போன்ற ஒரு டொமைன் பெயரைத் தேர்வு செய்கிறார். ஆனால் பின்னர், அவர் மல்லிகைகளுக்கு(orchids) அருகில் உள்ள மற்ற பூக்களைப் பற்றியும் வலைப்பதிவைத் தொடங்க விரும்புகிறார். அவ்வாறான நிலையில், பிற பூக்களில் ஆர்வமுள்ள வாசகர்களை ஈர்ப்பதில் இருந்து டொமைன் பெயர் உங்களைத் தடுக்கக்கூடும். 

உங்களின் தளத்தை புதிய டொமைனுக்கு சரியாக நகர்த்துவது வெறுப்பூட்டும் செயலாகும். மேலும் அதை சரியாக செய்யாவிட்டால், உங்களின் Search ranking ஐ இழக்க நேரிடும். அதனால்தான் தொடக்கத்திலிருந்தே ஒரு சரியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.

9. Research Your Domain Name


நீங்கள் ஒரு டொமைன் பெயரை பதிவு செய்வதற்கு முன், அதே பெயரைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வணிகம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். ஏற்கனவே trademark செய்யப்பட்ட பெயரை ஒத்த அல்லது அதே பெயர் இருக்கிறதா என்று நீங்கள் trademark search செய்யலாம்.

நீங்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் பெயர் இருப்பதை சரிபார்க்கலாம். 

இதேபோன்ற அல்லது பொருந்தக்கூடிய பெயர் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இது கடுமையான சட்டரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் உங்களிடம் இருந்து நிறைய பணம் செலவழிக்ககூடும்.

10. Use Domain Name Generators for clever ideas


தற்போது 360 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர்கள் உள்ளன. இதனால் பலர், நல்ல டொமைன் பெயர்களை ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் எனக் கூறுகின்றனர். 

தனிப்பட்ட டொமைன் பெயரை manual ஆக தேடுவது அதிக நேரம் எடுக்கும்.

டொமைன் பெயர் ஜெனரேட்டர்கள் வருவது இங்கு தான். இந்த இலவச கருவிகள் நீங்கள் கொடுக்கும் keywords ஐ வைத்து நூற்றுக்கணக்கான டொமைன் பெயர் யோசனைகளை உங்களுக்கு வழங்கும். அதிலிருந்து ஒரு பெயரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

11. Act quickly before someone else takes it


ஒவ்வொரு நாளும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் விரும்பும் ஒரு டொமைன் பெயரை நீங்கள் கண்டறிந்துவிட்டால், அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்.

டொமைன் பெயர்கள் ரியல் எஸ்டேட் போன்றவை. ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல பிராண்டபிள் டொமைன் பெயரை பதிவு செய்து, எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்றால், யாராவது உங்கள் டொமைன் பெயரின் யோசனையை பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

டொமைன் பெயர்கள் ஒப்பீட்டளவில் மலிவானவை என்பதால், வேகமாக செயல்பட எங்கள் வாசகர்களை எப்போதும் பரிந்துரைக்கிறோம். நீங்கள் பின்னர் உங்கள் எண்ணத்தை மாற்றினால், அது காலாவதியாகி விடலாம்.

Best places to Buy a Domain Name


இதுவரை நூற்றுக்கணக்கான டொமைன் பதிவாளர்கள் (domain registrars) இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றை கவனமாக தேர்வு  செய்வது முக்கியம். ஏனெனில் உங்கள் டொமைனை பின்னர் நகர்த்துவது கடினம்.

Web hosting போலவே, டொமைன் பெயர் பதிவுகளுக்கான விலை 600 ரூபாயிலிருந்து 1800 ரூபாய் வரை எங்கும் மாறுபடும்.நீங்கள் அதை இலவசமாக கூட பெறலாம்*.

ஒரு டொமைன் பெயரை நீங்கள் எவ்வாறு எளிதாக வாங்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Free Domain Registration with web hosting


பெரும்பாலான web hosting நிறுவனங்களும் டொமைன் பதிவை ஒரு சேவையாக வழங்குகின்றன. அந்த நிறுவனங்களில் சில, புதிய ஹோஸ்டிங் கணக்குகளுடன் இலவச டொமைன் பதிவை வழங்குகின்றன.

நீங்கள் ஒரு புதிய வலைதளத்தை தொடங்கினால், இந்த சலுகையைப் பயன்படுத்தி உங்கள் டொமைன் பெயரை இலவசமாகப் பெறுவது ஒரு சிறந்த யோசனை.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரு வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் நிறுவனங்கள் நம்முடைய பயனாளர்களுக்கு 60% தள்ளுபடியுடன் Web hosting, Free SSL certificate மற்றும் Free domain name ஆகியவற்றை வழங்குகின்றன.

Bluehost ஆனது மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பிராண்ட் பெயர்களில் ஒன்றாகும். அவர்கள் "wordpress" ஆல் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹோஸ்டிங் வழங்குநர் ஆவர்.

HostGator  மற்றொரு பிரபலமான Web hosting வழங்குநர் ஆகும். இது மிகவும் மலிவான வலைதள ஹோஸ்டிங் விருப்பங்களுடன் இலவச டொமைன் பெயரை வழங்குகிறது.

பெரும்பாலான ஹோஸ்ட்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே இலவச டொமைன் பதிவுகளை வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். முதல் வருடத்திற்குப் பிறகு, உங்கள் டொமைன் பதிவு வழக்கமாக வருடத்திற்கு ரூபாய் 1000 -க்குள் புதுபிக்கப்படும்.

நிறைய பயனர்கள் முதல் ஆண்டிற்க்கான இலவச டொமைனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில் முதல் வருடத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல், ஏன் இலவசமாக டொமைனை வாங்கக் கூடாது என நினைப்பதால் அவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Most popular Domain Registrars :-


நீங்கள் wordpress இல் பிளாக்கை தொடங்க விரும்பினால் Bluehost அல்லது HostGator இல் தொடங்கலாம். பெரும்பாலும் நான் Bluehost இல் தொடங்கலாம் என்று கூறுவேன்.

நீங்கள் Blogspot இல் பிளாக்கை தொடங்க விரும்பினால், Custom domain name பெறுவதற்கு GoDaddy சிறந்த தேர்வாக இருக்கும்.

அவ்வளவுதான். இந்த பதிவு உங்களுக்கு ஒரு டொமைன் பெயரை தேர்வு செய்வதற்க்கான ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் "Custom domain name" என்ற வார்த்தையை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படி கேட்டிருந்தால் அது என்ன என்று யோசித்து இருக்கி...

நீங்கள் "Custom domain name" என்ற வார்த்தையை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படி கேட்டிருந்தால் அது என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா? 

அதிகமான பிளாக்கர்கள் தங்களுடைய பிளாக்கிங் பயணத்தை Blogspot.com அல்லது Wordpress.com உடன் தொடங்குகின்றனர். காரணம் அதில் முதலீடு செய்ய தேவையில்லை என்பதே. அதில் பிளாக்கிங் தொடங்குவது எப்போதும் பாதுகாப்பான வழியாகும். ஆனால் பிளாக்கிங்கை தொழிலாக தொடங்கும் ஒருவர், தனது பிளாக்கை Blogspot.com அல்லது Wordpress.com இல் தொடங்கினால், அவர் செய்யும் மிகப்பெரிய தவறு இது. 

பிளாக்கிங் மூலமாக பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு எப்போதும் Self hosted wordpress blog (wordpress.org) தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

இருந்தாலும், தற்பொழுது custom domain name பற்றிப்  பார்ப்போம்.

Custom domain name என்பது ஒரு வலைதளத்தை அடையாளம் காணும் தனித்துவமான பிராண்ட் பெயர். 

Tamilbold.com, Tamilbold.in, Tamilbold.org இதுமாதிரி வருவதெல்லாம் custom domain name. 

Tamilbold.blogspot.com, Tamilbold.wordpress.com இதுமாதிரி வருவதெல்லாம்  Sub-domain.நீங்கள் Blogspot அல்லது wordpress.com இல் Sign up செய்யும்போது, உங்களின் domain பின்வருமாறு இருக்கும்.

Yourblog.blogspot.com
Yourblog.wordpress.com

ஆனால் தொழில்முறை பிளாக்குகளுக்கு, இந்த வகையான domains மோசமானவை.

இலவச பிளாக்கிங் தளத்தைப் பயன்படுத்தி பிளாக்கிங் செய்யும் பல பிளாக்கர்கள் வழக்கமாக Custom domain name வாங்குவதை விரும்புவதில்லை. அவர்கள் ஒரே Sub-domain இல் பல ஆண்டுகளாக பிளாக்கிங் செய்வார்கள். அவர்கள், தங்களின் பிளாக்கிற்கு அதிக traffic கிடைக்கும் பொழுது Custom domain name வாங்கிக் கொள்ளலாம் என நினைப்பார்கள். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை.

குறிப்பு :  ஒரு டொமைனைத் தேர்ந்தெடுப்பது பற்றி நான் பேசும்போது, நான் Tamilbold.com, Tamilbold.in, Tamilbold.org போன்ற Top level root domain பற்றிப் பேசுகிறேன். நீங்கள் Blogspot அல்லது Wordpress.com இல் Sign up செய்யும்பொழுது, உங்களுக்கு Tamilbold.blogspot.com, Tamilbold.wordpress.com போன்ற Sub-domain தான் கிடைக்கும்.

Custom domain name இல்லாமல் நீங்கள் என்னவெல்லாம் இழப்பீர்கள் :-


 • நீங்கள் ஒரு வருடம் பிளாக்கிங் செய்கிறீர்கள் மற்றும் ஏராளமான traffic ஐ பெற்றிருக்கிறீர்கள் எனில், உங்கள் வலைப்பதிவு(blog) சில Domain Authority ஐ உருவாக்கியிருக்கும். ஆனால் நீங்கள் Custom domain -க்கு  மாறும்போது, அந்த Domain Authority ஐ நீங்கள் இழப்பீர்கள். மேலும் நீங்கள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும். Search engine result page (SERP) இல் உங்கள் Rank ஐ  நீங்கள் பராமரிக்க முடியும் என்றாலும், உங்கள் Domain Authority (DA) ஆனது பூஜ்ஜியத்திற்கு சென்றுவிடும்.

 • தேடுபொறிகளில் உங்கள் வலைப்பதிவை(blog) தேடும்போது, உங்கள் புதிய முகவரி சிறிது நேரம் தெரியாது. பழைய Sub domain இல் இருந்து புதிய Custom domain -க்கு link juice -ஐ ( 301 redirection -க்கு பிறகு ) கூகுள் அனுப்ப நேரம் எடுக்கும்.

 • புதிய டொமைன் பெயரை பெற்றிருப்பதால், Google Analytics மற்றும் webmaster tools ஆகியவற்றின் கணக்குகளை Update செய்ய வேண்டியிருக்கும். புதிய டொமைனில் நீங்கள் எப்போதும் பழைய Analytics code -களை பயன்படுத்தலாம் என்றாலும், பழைய டொமைன் பெயரில் புதிய டொமைன் பெயருக்கான உங்கள் அளவீடுகளை(metrics) அளவிடுவது உங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கும்.

 • நீங்கள் மீண்டும் உங்கள் பிளாக்கின் Sitemap ஐ அனைத்து Search engine -களிலும் கொடுக்க வேண்டும்.

 • உங்கள் பிளாக்கின் முகவரியை அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் புதுப்பிக்க வேண்டும்.

 • நீங்கள் Sub domain இல் இருந்து Custom domain -க்கு மாறும் போது, இந்த புதிய டொமைன் பெயரை re-brand மற்றும் re-market செய்ய வேண்டும்.

ஆகையால் நீங்கள் பிளாக்கரில் பிளாக்கை தொடங்கும்போதே, Custom domain name ஐ  வாங்கி, அதனுடன் இணைத்துக் கொள்வது நல்லது.

Custom domain name வைத்திருப்பதன் நன்மைகள் :-


 • தேடுபொறிகளில் (குறிப்பாக கூகுளில்) .Blogspot.com அல்லது .wordpress.com ஐ விட root domain -களுக்கு சிறந்த வெளிப்பாடு (exposure) உள்ளது.

 • உங்களின் Google AdSense account ஆனது  Approval ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

                    தெரிந்து கொள்க :-  Google Adsense Account Approval Process

 • ஜிமெயில் அல்லது yahoo மின்னஞ்சலைக்  காட்டிலும் contact@tamilbold.com போன்ற contact email ஐ நீங்கள் வைத்திருக்கலாம்.

                   தெரிந்து கொள்க :-  How to Create a Professional email using Zoho for free

 • உங்கள் டொமைன் பெயரை நீண்ட பெயராக சொல்வதை காட்டிலும் எளிமையாக சொல்லி விளம்பரப்படுத்தலாம்.

 • Root level domain-கள்  பயனாளர்களின் பார்வையில் மிகவும் நம்பகமானவை. நீங்கள் பிளாக்கிங் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறீர்கள் எனில், இலவச Sub domain இல் இருப்பதைவிட  Custom domain -க்கு செல்வதால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

 • குறிப்பாக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முதல் நாளிலிருந்து உங்களுக்கு ஒரு பிராண்ட் பெயர் இருக்கும்.

How to choose a Custom Domain :-


நம்ம Tamilbold இல் ஏற்கனவே இதைப் பற்றி விளக்கமாக எழுதியிருப்பதால் முக்கியமான சில குறிப்புகள் இங்கே..

 • நீண்ட பெயரை தேர்வு செய்வதை விட்டுவிட்டு குறுகிய பெயரை தேர்வு செய்யுங்கள். 

 • பெயரானது உச்சரிப்பதற்கு எளிதானதாக இருக்கவேண்டும்.

 • நீங்கள் Sub-domain இல் இருந்து மாறுகிறீர்கள் எனில், உங்களின் பிராண்டை அப்படியே வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். (எ.கா):- tamilbold.blogspot.com  என்பதை tamilbold.com என மாற்றுங்கள். அது முடியாவிட்டால், இதேபோன்ற ஒன்றை முயற்சி செய்யுங்கள்.

                  தெரிந்து கொள்க :- 

                              1.  How to Pick a Great domain name for your blog

                              2.  Why you need to use A Custom domain name for your BlogSpot blog

நீங்கள் உங்களுக்கான domain name  ஐ   Godaddy இல் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் BlogSpot blog வைத்திருந்தால் பின்வரும் இணைப்பின் மூலம் உங்களின் custom domain name ஐ  பிளாக்கருடன் இணைத்துக் கொள்வதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

                 தெரிந்து கொள்க :-  How to add Custom domain name to your blog


ஆனால் மீண்டும், நீங்கள் wordpress.com அல்லது Blogspot.com இல் பிளாக்கை தொடங்குவதற்கு பதிலாக self hosted wordpress (wordpress.org) இல் பிளாக் தொடங்கலாம் என எப்போதும் நான் பரிந்துரைப்பேன். இந்த Wordpress guide மூலம் நீங்கள் wordpress இல் தொடங்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? Custom domain name உடன் நாங்கள் ஏன் பிளாக்கை தொடங்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கக்கூடிய வேறு சில காரணங்கள் யாவை? கீழே உள்ள comment box இல் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

    பிளாக்கிங் என்பது ஒரு வலைப்பதிவிற்கான(blog) உள்ளடக்கத்தை உருவாக்கி பராமரிக்கும் செயல். வழக்கமாக இது எழுதப்பட்ட வார்த்தையின் வடிவத்தில் ...

   பிளாக்கிங் என்பது ஒரு வலைப்பதிவிற்கான(blog) உள்ளடக்கத்தை உருவாக்கி பராமரிக்கும் செயல். வழக்கமாக இது எழுதப்பட்ட வார்த்தையின் வடிவத்தில் இருக்கும். அதில் படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Why is blogging so popular?

பிளாக்கிங் ஏன் பிரபலமாக உள்ளது?


 • இது தகவல்களின் முக்கிய ஆதாரமாக மாறியது.

 • பிளாக்கிங் மூலமாக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்தும், அவர்களை புதுப்பித்த நிலையிலும் வைத்திருக்கின்றன.

 • பிளாக் மூலமாக, உங்களின் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

 • பிளாக்கிங் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

Blogger என்றால் என்ன?


   Blogger என்பது ஒரு வலைப்பதிவின் உரிமையாளரான ஒரு நபர். வலைப்பதிவை உயிருடன் வைத்திருக்கும் நபர் (புதிய இடுகைகளை இடுகையிடுவது, சமீபத்திய செய்திகள், தகவல், கருத்துக்கள் போன்றவற்றை பகிர்வது...) .

சுருக்கமாக, பிளாக்கை எழுதும் நபர் பிளாக்கர் என்று அழைக்கப்படுகிறார்.

நீங்கள் "blog" என்ற வார்த்தையை அடிக்கடி எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே மாதிரி " Blog மூலமாக பணம் சம்பாதிப்பது எப்பட...

நீங்கள் "blog" என்ற வார்த்தையை அடிக்கடி எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே மாதிரி " Blog மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி" என்பதனையும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். என்றாவது "blog" என்றால் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து உள்ளீர்களா?

இந்தப் பதிவில், "Blog என்றால் என்ன" என்பதைப் பற்றியும் அதைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றையும் காண்போம்.

பிளாக் என்றால் என்ன?


   Blog  ஆனது ஒரு வெப்சைட் மாதிரியேதான் இருக்கும். பிளாக்கை நான் நாட்குறிப்பு அல்லது பத்திரிகை என்று தான் கூறுவேன். இது பெரும்பாலும் ஒரு நபரால் பராமரிக்கப்படுகிறது. அவரை blogger என்று அழைப்பர். வழக்கமாக, பிளாக்குகள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒருமுறை, வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை கூட இருக்கலாம். Blogs தனிப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களுக்கு இணையத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.

Blog definition :-

இணையத்தில் கிடைக்கும் ஒரு ஆன்லைன் பத்திரிக்கை அல்லது நாட்குறிப்பு.

Wikipedia -ன் அகராதிபடி, Blog  என்பதன் பொருள் History of Blog :-

   அதிகாரப்பூர்வமற்ற முறையில், முதல் வலைப்பதிவு(blog)  Justin Hall என்பவரால் (link.net) உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் "blog" அல்லது "weblog" என்ற வார்த்தையை உண்மையில் யாருக்கும் தெரியாது. உண்மையில் ஜஸ்டினின் web property ஆனது ஒரு எளிய வலைதளத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. ஆனால் அது ஒரு வலைப்பதிவு போலவே இருந்தது. அவர் இணையத்தில் கண்ட "பொருள்" பற்றி தவறாமல் (இன்னும் செய்துகொண்டிருக்கிறார்!) பதிவிட்டார். அது ஒரு "தனிப்பட்ட நாட்குறிப்பு".

"Weblog" என்ற சொல் முதன் முதலில் (அதிகாரப்பூர்வமாக) 1997 இல் 
Jorn Barger ஆல் அறிவிக்கப்பட்டது. 1999 இல் weblog ஆனது blog என சுருக்கப்பட்டது. இந்த கட்டத்தில், சில நபர்கள் (கணினி மற்றும் இணைய வசதி கொண்டவர்கள்) வலைப்பதிவை தொடங்கினார். இருப்பினும், இது பிரபலமாக இல்லை.

பின்னர் 2003 இல் வேர்ட்பிரஸ் வந்தது. அதன் வரவால் நிறைய மாறியது. வேர்ட்பிரஸ் இலவச பிளாக்கிங் தளத்தை வழங்கத்தொடங்கியது. Install செய்வது, பராமரிப்பு மற்றும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதால் நிறைய பேர் பயன்படுத்த தொடங்கினர். தற்போது 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் வேர்ட்பிரஸ் பிளாக்கிங் தளத்தைப் பயன்படுத்துகின்றன.

தற்போது 2020 இல், 500 மில்லியனுக்கும் மேலான பிளாக்குகள் இணையத்தில் இருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் blog இன் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.