நீங்கள் இலவசமாக ஒரு வெப்சைட் தொடங்க அதுவும் நீங்கள் வெப்சைட் தொடங்குவதற்கு புதியவர் எனில் உங்களுக்கு இது மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும். எந்தவித செலவு இல்லாமலும் பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும் இருக்கும்படியான வெப்சைட்டினை Blogspot.com தருகிறது.
Blogspot லிருந்து இலவசமாக ஒரு பிளாக்கை உருவாக்குவது எப்படி?
Blogspot.com லிருந்து இலவசமாக ஒரு பிளாக்கை உருவாக்குவதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய Google account ஐ Blogspot.com சென்று Sign in செய்து கொள்ள வேண்டும். உங்களிடம் Google (Gmail ) Account இல்லையெனில் புதியதாக ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.உங்களுடைய அக்கவுண்டில் Sign in செய்த பிறகு "Create blog" என்பதை கிளிக் செய்யுங்கள் அல்லது பின்வரும் லிங்கினை கிளிக் செய்து ஃப்ரீ பிளாக்கினை உருவாக்கிக் கொள்ளலாம்.Create a free blog
படிப்படியாக ஒரு பிளாக்கினை உருவாக்குவது எப்படி என்பதை காண்போம்.
- முதலில் Google Search -ல் blogspot.com என டைப் செய்து Search செய்து கொள்ளுங்கள்.
- பிறகு வரும் பக்கத்தில் முதலாவதாக உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில் "Create your blog" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு உங்களுடைய கூகுள் (ஜிமெயில்) அக்கவுண்ட்டை பயன்படுத்தி login செய்து கொள்ளுங்கள்.
- பின்பு "Display name" என்பதில் உங்களுடைய பெயரினை கொடுக்கவேண்டும் .பிறகு "Continue to blogger" என்பதை கிளிக் செய்யவேண்டும் .
- அடுத்து வரும் பக்கத்தில் "Create blog" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு படத்தில் உள்ளபடி தோன்றும். அதில் Title என்பதில் நீங்கள் விரும்பும் பெயரினை உங்களுடைய ப்ளாக்கின் பெயராக கொடுக்க வேண்டும். பின்பு "Save" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து வரும் பக்கத்தில், Address என்பதில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுக்க வேண்டும். பிளாக்கின் முகவரி ஆனது available ஆக இருந்தால், "This blog address is available" என வரும். அப்படி இல்லையெனில் "This blog address is not available" என வரும். உங்களின் பிளாக் முகவரிஆனது available என வந்த பிறகு "Save" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- தற்பொழுது உங்களுடைய ப்ளாக் உருவாகிவிடும்.
பயன் உள்ளதாக அமைந்தது நன்றி.
ReplyDeleteThis verymuch useful Thank You.
bro only by using blog post how to earn money ?
ReplyDeleteGOOGLE adSense moolama earn pannalam bro. intha blog laye blog moolama panam eppadi sampathikkalam nu oru post potruken. padichu paarunga.
Deleteஇலவசமாக எவ்வாறு domain மற்றும் hosting வாங்குவது, எந்த இணையதளம் இதற்கு சரியானதாக இருக்கும் ?
ReplyDeleteFREE Hosting and domain vaangurathukku blogger.com correct ah erukkum. aanaal ungaloda domain name xyz.blogspot.com apdnu thaa erukkum. neenga custom domain name vangi xyz.com nu maathikalam.
ReplyDeleteThis is Useful information brother.thank u so much for Ur valuable details.
ReplyDelete