Gmail account - ஐ உருவாக்குவது எப்படி?

Gmail என்பது கூகுள் நிறுவனத்தினால் தகவல் பரிமாற்றத்திற்க்காக உருவாக்கப்பட்டதாகும். தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் இணையத்தில் உள்ள எந்த ஒரு வலைதளத்திலும் தங்களுக்கென ஒரு கணக்கை தொடர முதன்மையான தேவையாக இருப்பது இந்த  Gmail தான்.இப்படி பல வகையான தேவைகளுக்கு gmail என்பது மிக முக்கியமான ஒன்றாகிறது.

   அப்படிப்பட்ட Gmail account ஐ எப்படி உருவாக்குவது என்பதை காண்போம்.

  •    முதலில் உங்களது Mobile அல்லது Computer ல் உள்ள ஏதாவது ஒரு        browser ல் Gmail என டைப் செய்து search  செய்ய வேண்டும்.


  •  பின்பு மேலே உள்ள படத்தில் உள்ளபடி தோன்றும்.அதில் முதலாவதாக உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.



  • அதன்பிறகு மேலே உள்ளபடி திரையில் தோன்றும் sign in என்ற option ஐ கிளிக் செய்ய வேண்டும்.


  • பின்பு படத்தில் உள்ளவாறு தோன்றும்.அதில்  உள்ள  Create account என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.


  • தற்பொழுது நீங்கள் காணும்   பக்கத்தில் உங்களுடைய பெயர் , நீங்கள் விரும்பிய Gmail Id  ன் பெயர் (Example : vijay 145@gmail.com  ), கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து Next  ஐ கிளிக் செய்யவேண்டும் . 

  • தற்பொழுது  அடுத்து  வரும் பக்கத்தில்  Verify  your  phone number என்று வரும் .அதில் உங்களுடைய போன் நம்பர் கொடுத்து next ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய   போனுக்கு OTP வரும் . அதனை உள்ளீடு செய்து  உங்களது account ஐ verify செய்து கொள்ள வேண்டும் .

  • பின்பு வரும் பக்கத்தில் I Agree  என்பதனை கிளிக் செய்ய வேண்டும் .தற்பொழுது உங்களுடைய Gmail  Id  உருவாகிவிடும் .

Post a Comment

Previous Post Next Post