உங்களது பிளாக்கிற்கு "About Page" ஏன் தேவை? | Why need About page for your blog?

   உங்களுடைய  Blog Post படிப்பதற்கு மிக எளிதாகவும், ஆர்வத்தை 
தூண்டக் கூடியதாகவும் இருந்தால் பலருக்கும்  உங்களுடைய ப்ளாக் பிடிக்கும். மேலும் அவர்கள் உங்களுடைய ப்ளாக் மூலமாக தங்களது தொழிலை மேம்படுத்த எண்ணுவதும் உண்டு. அந்த சமயத்தில் உங்களை தொடர்பு கொள்ள "About Page "மிக பயனுள்ளதாக இருக்கும்.



        சில சமயங்களில்  "About Page " சரிவர இல்லாமல் இருந்தால் உங்களுக்கு வரவேண்டிய விளம்பரதாரர்கள் வராமலும்  போகலாம்.

 "About Me"  Page அவ்வளவு முக்கியம்.ஏன்?


 1.உங்களது பிளாக்கின் தனித்தன்மையை வரையறுக்கும்.


        "About Me"  Page ஆனது உங்களது பிளாக் அல்லது வெப்சைட்டிற்கு  அடித்தளமாக அமையும். ஒரே ஒரு பக்கமானது, நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது வெப்சைட் எதைப் பற்றியது மற்றும் மேலும் பல தகவல்களை உங்களது பார்வையாளர்களுக்கு மிக எளிதாக காட்டுகிறது.

 உதாரணமாக, ஒரு நிறுவனத்தின்  "About Us"  Page ஆனது பின்வரும் தகவல்களை கொண்டிருக்கும்.
  • எப்பொழுது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 
  • நிறுவனம் எங்கு அமைந்துள்ளது 
  • நிறுவனத்தின் நோக்கம் என்ன 
  • எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் 
  • நிறுவனம் என்ன பணிகளை மேற்கொள்கிறது 
  • சாதனைகள் மற்றும் இலக்குகள் 


நீங்கள் இப்பொழுது தான் பிளாக் எழுத ஆரம்பிக்கிறீர்கள் எனில், உங்களுடைய பிளாக்கின் நோக்கம்? எப்பொழுது தொடங்கப்பட்டது? நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? இனிமேல் பார்வையாளர்களுக்காக பிளாக்கில் என்ன எழுதப் போகிறீர்கள்? போன்ற தகவல்களை About Page இல்  கொடுக்கலாம்.

2. பார்வையாளர்கள் உங்களோடு தொடர்பில்  இருக்க விரும்புவார்கள்



         உங்களது Analytics - ஐ  பார்த்தீர்கள் என்றால், உங்களது பிளாக்கின் ஒரு தனிப்பட்ட போஸ்ட்டை பார்வையிட்டவர்களின்  எண்ணிக்கையை விட "About Me"  Page - ஐ  பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இது பார்வையாளர்கள் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைக்  காட்டுகிறது.

 இதற்கு காரணம், அவர்கள் உங்களோடு தொடர்பில் இருக்க விரும்புகிறார்கள் என்பதே.

 அவர்கள் உங்களோடு சமூக வலைதளங்களில் தொடர்பில் இருக்கவும் விரும்புவார்கள்.அதற்கு சில வழிகளை ஏற்படுத்தி நீங்கள் எப்பொழுதும் பார்வையாளர்களுடன் தொடர்பில்  இருக்கலாம்.

 3. நம்பகத் தன்மையை உருவாக்கும் 


       "About Me"  Page - ல் நீங்கள் வாங்கிய பாராட்டுகள் மற்றும் அதனைச் சார்ந்த வீடியோக்களை பதிவிடுங்கள். அது உங்களுடைய பிளாக்கின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரத்தை உருவாக்கும் .

உங்களைப் பற்றி கட்டுரைகள் பிளாக்கிலோ அல்லது செய்தித்தாள்களிலோ  வந்தால் அதனை "About Me"  Page - ல் பதிவிடுங்கள். மேலும் நீங்கள் உங்களது உழைப்பிற்காக விருது வாங்கி இருந்தால் அதனையும் மறக்காமல் பதிவிடுங்கள். மக்கள் எப்பொழுதும் சிறப்பானவற்றையே  விரும்புவார்கள்.

 Important  : முக்கியமாக உங்களது contact info -வினை  "About Me"  Page -இல் கொடுங்கள் .இது மேலும் நம்பகத் தன்மையை உருவாக்கும்.

பல புதிய பிளாக்கர்கள் தங்களின் பிளாக்கில் "About Me"  Page  வைப்பதை  தவிர்க்கிறார்கள். அவர்கள்  தங்களை எப்படி பார்வையாளர்களிடம் மார்க்கெட்டிங் செய்வது என அஞ்சுகிறார்கள். 

நான் நிறைய கருத்துக்களை இணையத்திலிருந்து தேடி எடுத்து அதில் உங்களுடைய "About Me"  Page ஐ  சீரமைக்க தேவையான பல கருத்துக்களை கீழே குறிப்பிடுகிறேன்.

 "About Me"  Page ஐ  சீரமைக்க தேவையான சில நுட்பங்கள்:


  •  "About Me"  Page ஆனது  உங்களுக்கானது அல்ல. உங்களைப் பற்றி பார்வையாளர்கள் தெரிந்து கொள்வதற்கானது  என புரிந்து கொள்ளுங்கள்.


  •  நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சமூக வலைதளத்திற்கான லிங்க் கொடுங்கள். இது அவர்களிடையே ஒரு தொடர்பை  ஏற்படுத்தும்.


  • உங்களைப் பற்றிய தகவல்களை கொடுங்கள். அதில் ப்ளாக் எழுதும் போது ஏற்பட்ட தோல்விகள், வெற்றிகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகள் போன்றவற்றைக்  குறிப்பிடலாம்.


  •  உங்களுடைய புகைப்படத்தை அதில் கொடுங்கள்.



  •  உங்களைப் பற்றி பார்வையாளர்கள் பேசி இருந்தால் அதனை பதிவேற்றுங்கள்.


  •  உங்களுடைய தொடர்பு எண் மற்றும் முகவரியை கொடுங்கள். அது பார்வையாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.


  • பார்வையாளர்களுக்கு," நீங்கள் இந்த பிளாக்கில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்" என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.


  • நீங்கள் எழுதும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு எளிதாகப் புரியும் படியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு தூய தமிழில் எழுதினால் பாதி நபர்களுக்கு  அது என்னவென்று  புரியவே புரியாது.


  •  Call-to-action தேர்வினை கொடுங்கள். இது பார்வையாளர்களை தினசரி உங்களது பதிவினை பார்க்க வைப்பதற்கு உதவும்.


 மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு போதுமானதாக இருந்து, நீங்கள் உங்களுடைய "About Me"  Page ஐ  மாற்றி இருந்தால் உங்களுடைய "About Me"  Page ன்  லிங்கினை கமெண்ட் செய்யுங்கள்.

 இந்த போஸ்ட் ஆனதே உங்களுக்குப் பிடித்திருந்து, அதனை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினால் இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள்.

3 Comments

Previous Post Next Post