Affiliate or AdSense : இதில் எதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும்?

Affiliate or AdSense:  which makes more money?

நாம் எப்பொழுதும் Affiliate Marketing Program பற்றி நினைக்கும்போது, நம் மனதில் முதலில் ஒரு கேள்வி எழும், "Affiliate Marketing ஆ இல்லை AdSense ஆ"   இதில் எதை பயன்படுத்தலாம் என்று.

இது ஒரு சூசகமான கேள்வி. எதுவாக இருந்தாலும் நீங்கள் பிளாக் எழுதுவதை தொழிலாக கொண்டிருந்தால், உதாரணத்திற்கு என்னை மாதிரி இருந்தால், நீங்கள் Affiliate Marketing  மூலமாக தொடர்ச்சியாக பணம் வருவதை வேண்டாம் என்றோ அந்த வாய்ப்பை தவறவிடவோ விரும்ப மாட்டீர்கள். சரிதானே..?
இந்தப் பதிவில் நான் தெரிந்து கொண்ட சில தகவல்களை தருகிறேன். அதிலிருந்து நீங்கள் AdSense ஆ இல்லை Affiliate marketing ஆ என தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் Affiliate marketing  செய்வதற்கு புதியவர் எனில், நான் எழுதிய Affiliate marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவை படியுங்கள்.



சில பிரபலமான பிளாக்கர்கள், Affiliate marketing + AdSense + Direct advertisement  ஆகியவற்றின் மூலமாக தங்களது பிளாக்குகளை(blog) Monetize  செய்கிறார்கள்.

பொதுவாக சில தகவல்கள்,Google  ஆனது Affiliate marketing -ற்க்கு எதிராக செயல்படுகிறது என வதந்திகள் உலா வருகின்றன. உண்மையில் Google ஆனது Affiliate link களை பிளாக்குகளில் கொடுக்க அனுமதிக்கிறது. ஆனால் அந்த Blog ஆனது  தரமான தகவல்களை கொண்ட பிளாக்காக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் தரமற்ற தகவல்களை (Low quality content) பதிவிட்டு , அதில் பத்து Affiliate link  களை கொடுத்திருந்தால், Search engine bots  இந்தப் பதிவினை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும். அதனால் உங்களுடைய பதிவினை யாரும் பார்க்க இயலாமல் போய்விடும்.

AdSense vs Affiliate marketing : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:-


  • AdSense account -ல் Approve வாங்குவதைவிட Affiliate network -ல் வாங்குவது எளிது.
  • Affiliate Marketing ஆனது Adsense ஐ விட அதிக பணத்தை தரும்.
  • அதிகபட்சமான Affiliate நிறுவனத்தினர் PayPal அல்லது Payoneer மூலமாக பணத்தை நமக்குத் தருகின்றனர். ஆனால் AdSense ல் அவ்வாறு இல்லை.
  • அனைத்து விதமான Niches க்கும் ஏற்றவாறு affiliate product ஐ தேடமுடியும். ஆனால் AdSense ல்  குறிப்பிட்ட  Niches க்கு மட்டுமே விளம்பரங்கள் கிடைக்கும்.
  • AdSenseGoogle  நிறுவனம் மட்டுமே தனியாக நடத்துகிறது. ஆனால் Affiliate marketing -ற்க்கு  ஏராளமான பெரிய மற்றும் சிறிய affiliate companies இருக்கின்றன.
  • Affiliate ads ஆனது Google AdSense ஐ விட அதிகம் விரும்ப கூடியதாகவும் அதிகம் பணம்  தரக்கூடியதாகவும் இருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டவற்றை வைத்துப்பார்த்தால், Affiliate marketing ஆனது Adsense ஐ  விட அதிக லாபம் தரக்கூடியதாகவும் நன்மை தரக் கூடியதாகவும் இருக்கும்.

நீங்கள் உங்களுடைய முடிவை எடுப்பதற்கு முன்பு Affiliate marketing பற்றி ஒரு சில விஷயங்களைக் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.


Affiliate marketing ஆனது ஒரு சில Page - களில் மட்டுமே வேலை செய்யும். ஆகையால் உங்களது பிளாக்கில் உள்ள ஒவ்வொரு page ன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியாது. Adsense ஆனது அதற்கு மாறாக ஒவ்வொரு page - லுமே வேலை செய்யும். ஏனென்றால் Affiliate marketing ல்  உங்களது link மூலமாக மற்றவர்கள் பொருள் வாங்கினால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.
பிளாக்கர்களுக்கு Adsense ஆனது முதுகெலும்பாக உள்ளது. ஏனெனில் அது ஒரு தடவை பணம் கொடுக்க ஆரம்பித்தால்  மாதாமாதம் பணம் தந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு நாளைக்கு வரும் பணமானது ஒரு affiliate sale க்கு  கிடைக்கும் பணத்தை விட குறைவாகவே இருக்கும். அது பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும்.

முக்கியமான ஒரு இடத்தில்(Header)  உள்ள Adsense விளம்பரத்தை எனது blog post ல்  இருந்து நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக Affiliate banner ஐ  பிளாக்கின் niche க்கு ஏற்றவாறு வைக்கிறேன்  என்றால் அது மிகவும் ஆபத்தானது. அது சில நேரங்களில் நன்றாகவும் சில நேரங்களில் ஆபத்தாகவும் கூட முடியும்.
இருந்தபோதிலும் Affiliate banner ஐ வைத்துவிட்டேன் என்றால் அதன் மூலம் ஒரு மாதத்திற்கு 4-7 பொருட்களை விற்பனை செய்தால் மட்டுமே Adsense மூலம் கிடைக்கும் பணத்தை விட சிறப்பாக இருக்கும். ஒரு பொருள் கூட விற்பனை ஆகவில்லை எனில் மாத முடிவில் ஒரு ரூபாய் கூட நமக்கு கிடைக்காது.

இறுதியாக என்னைக்கேட்டால் Adsense மற்றும் Affiliate marketing இரண்டையுமே பிளாக்கில் பயன்படுத்தலாம். அதுவும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு பயன்படுகிற மாதிரியான content எழுதி, நீங்கள் கணிசமான பணத்தை மாத இறுதியில் பெறமுடியும்.

அதிகமாக கிளிக் செய்யக்கூடிய பகுதிகள் அதாவது Post -ற்க்கு மேலே மற்றும் Sidebar 350 block ஆகிய இடங்களில் Adsense விளம்பரங்களை பயன்படுத்தலாம்.
நீங்கள் இந்த இடங்களை Affiliate marketing விளம்பரத்திற்கு பயன்படுத்துமாறு நான் கூறுவேன்.

                   ●125*125 (Sidebar)
                   ●728*90  (Header,Footer)
                   ●468*60 (below the post, below comments ,above comments)

எப்பொழுதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், அதிகப்படியான Adsense விளம்பரங்கள் கண்டிப்பாக அதிகப்படியான பணத்தை தராது. ஒன்று அல்லது இரண்டு Adsense விளம்பரங்களோடு Affiliate links களை  பயன்படுத்தினால் சிறப்பான முடிவு கிடைக்கும்.

என்னுடைய கருத்தினை நீங்கள் தெரிந்து கொண்டீர்களா...தற்பொழுது நீங்கள் Adsense ads ஆ இல்லை Affiliate banners ஆ இல்லை  இரண்டுமா என  தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்ததா?  கமெண்ட் செய்யுங்கள். மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் ஷேர் செய்யுங்கள்...

1 Comments

Previous Post Next Post