பிளாக்கிங்கை பொருத்தவரை, பிளாக் தொடங்குவதற்கு ஏராளமான விருப்பங்கள் உங்களுக்கு உள்ளன.
- WordPress
- Blogspot (blogger)
- Tumblr
Tamilbold இல் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்று :-
பிளாக்கிங்கிற்கு எது சிறந்தது?
WordPress or blogger?
இந்த விவாதம் சில நேரங்களில் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும். பல பயனர்கள் Blogspot ஐ விரும்புகின்றனர். ஏனெனில் அதில் குறைவான தொழில்நுட்ப இடையூறுகளே உள்ளன. மேலும் பல பயனர்கள் WordPress ஐ அதன் அதிக சக்தி மற்றும் அம்சங்களால் அதை விரும்புகின்றனர்.
யாராவது என்னிடம், "எந்த பிளாட்பாரத்தில் பிளாக்கை தொடங்க வேண்டும்" என கேட்டால், எனது வழக்கமான பதில் இதுவாகத்தான் இருக்கும். உங்களின் பிளாக் தொடக்கத்தை blogger.com இல் இலவசமாக தொடங்குங்கள். ஆனால் அதனுடன் அதிக நேரம் ஒட்டிக்கொள்ளாதீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.
நான் எனது பிளாக்கை முதன்முதலில் blogger ல் தான் தொடங்கினேன். பிறகு Custom domain name வாங்கி blogger உடன் இணைத்து பயன்படுத்தி வருகிறேன். எனது பிளாக்கை blogger இல் இருந்து WordPress.org க்கு கூடிய விரைவில் மாற்ற இருக்கிறேன்.
அதனால், WordPress ஐப் பற்றி கற்றுக்கொள்ள நிறைய கற்றல் அனுபவங்கள் தேவைப்பட்டது. அதனை தற்பொழுது விரிவான வழிகாட்டிகள், பயிற்சிகள் மற்றும் வீடியோக்களின் உதவியுடன் WordPress ஐ பற்றி கற்பது மிகவும் எளிதாகிவிட்டது.
எப்படி இருந்தாலும் இந்த கட்டுரையில், நான் WordPress or Blogspot :- இவற்றுள் எது சிறந்தது என்பதற்கான விரிவான ஒப்பீட்டைப் பகிர்ந்துள்ளேன். மேலும் சில சூழ்நிலைகளுக்கு எது சிறந்தது, ஏன் என்று விளக்குகிறேன்.
WordPress Vs Blogger :- Which platform to choose
1. Why and why not blogger?
உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பிளாக்கைத் தொடங்க விரும்பினால் Blogger (Blogspot) பிளாட்பாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பணத்திற்காக blogging செய்யாதபோது அல்லது எந்த ஒரு தொழில்நுட்ப அறிவும் தேவை இல்லாத ஒரு எளிய தளம் உங்களுக்கு தேவைப்படும் போது, Blogspot மிகவும் நல்லது.
செயல்பாடுகள் (functionalities) மற்றும் SEO ஆகியவற்றின் அடிப்படையில் Blogspot ல் பல வரம்புகள்(limitations) உள்ளன. கிட்டதட்ட 0 செலவில் ஒரு பிளாக்கைத் தொடங்க உங்களுக்கு ஒரு தளம் தேவைப்பட்டால், Blogspot சரியான தேர்வு.
அதே நேரத்தில், நீங்கள் பணத்திற்காகவோ, அதிகாரத்தை உருவாக்குவதற்காகவோ அல்லது உங்களை பிராண்டிங் செய்வதற்காகவோ பிளாக்கிங் செய்கிறீர்கள் என்றால், Blogspot சிறந்த தேர்வாக இருக்காது. ஏனெனில் Search engine -களில் உங்களை பார்க்கக்கூடிய நிலை(visibility) மீது கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டு உள்ளதால் தான், சிறிது நேரத்திற்குப் பிறகு புதிய அம்சங்களை சேர்க்க விரும்பும் போது நீங்கள் மிகவும் கட்டுப்படுத்தபட்டிருப்பீர்கள்.
நான் இதை பலமுறைப் படித்து இருக்கிறேன்:-
பிளாக்கர் ஒரு கூகுள் தயாரிப்பு. அதாவது இது அதிக SEO நன்மைகளை அளிக்கிறது.
இது வெறுமனே உண்மை இல்லை.
நீங்கள் Wordpress, blogger அல்லது வேறு எந்த தளத்தையும் பயன்படுத்துகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. தேடுபொறிகளுக்காக (search engine) உங்கள் முழுமையான தளத்தை எவ்வாறு iஉள்ளமைக்கிறீர்கள்(configure) என்பதன் மூலம் SEO தீர்மானிக்கப்படுகிறது.
பிளாக்கர் இயங்குதளத்தில், உங்கள் தளத்தின் மீது உங்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு(limited control) மட்டுமே உள்ளது. அவர்கள் சில புதிய SEO அம்சங்களைச் சேர்த்திருந்தாலும், Blogspot இல் இன்னும் SEO Optimization சிறப்பாக இல்லை.
சுருக்கமாக, நீங்கள் எழுத விரும்புவதை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு பிளாக்கை உருவாக்கவில்லை எனில், Blogger ஆனது WordPress ஐ விட சிறந்தது. பிளாக்கர் இயங்குதளத்தால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட அம்சங்கள் உங்களுக்கு 'Ok' எனில், இது ஒரு சிறந்த தேர்வாகும். பணம் சம்பாதிப்பதற்கு அல்லது நீண்டகால தாக்கத்தை உருவாக்குவதற்கு WordPress இயங்குதளம் சிறந்தது.
குறிப்பு : WordPress இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வருகிறது. நீங்கள் அதைப் பற்றி இங்கே படிக்கலாம்.
2. Why and why not WordPress?
WordPress உங்கள் வலைப்பதிவின் (blog) மீது முழுமையான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் விரும்பும் எதையும் செய்யலாம்.
நீங்கள் உங்கள் சொந்த கோப்புகளை host செய்யலாம். நீங்கள் விரும்பியபடி வடிவமைக்க முடியும். மேலும் அதை எந்த நோக்கத்திற்காகவும் (தனிப்பட்ட அல்லது தொழில்முறை) பயன்படுத்தலாம்.
உங்கள் பிளாக்கை மேலும் SEO friendly ஆக மாற்றுவதற்காக SEO Plugin -களை சேர்ப்பது உட்பட SEO மீது முழுமையான கட்டுப்பாட்டையும் பெறுவீர்கள். மேலும் 'Rich snippets' போன்ற plugin பயன்படுத்தி "star ratings" போன்ற சமீபத்திய SEO நுட்பங்களை நீங்கள் எப்போதும் அறிமுகப்படுத்தலாம்.
நீங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய வேர்ட்பிரஸ் உங்களை அனுமதிக்கும்.
ஆனால் அதே நேரத்தில், நீங்கள் உங்கள் சொந்த பிளாக்கை நிர்வகிக்க வேண்டும். உங்கள் சொந்த Server இல் நீங்கள் வேர்ட்பிரஸ் நிறுவ மற்றும் உங்கள் பிளாக்கின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
இது தொழில்நுட்பமாக தோன்றலாம். ஆனால் WordPress community -ன் அற்புதமான ஆதரவுடன், நீங்கள் எந்த நேரத்திலும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம்.
WordPress இல் உடனே தொடங்குவதற்கு வீடியோக்களைப் பார்ப்பது, Plugin ஐ எவ்வாறு சேர்ப்பது என்பதை கற்றுக் கொள்வது, Dashboard உடன் பழகுவது போன்றவற்றில் சில முயற்சிகள் தேவைப்படலாம்.
ஒரு பிளாக்கை பிரபலமாக்குவதற்கும் அதிலிருந்து பணம் சம்பாதிப்பதற்கும் உண்டான மனநிலையுடன் நீங்கள் ஒரு பிளாக்கை உருவாக்க திட்டமிட்டால், நீங்கள் Self-hosted WordPress பிளாக்கிற்கு செல்லலாம்.
நீங்கள் எப்போதாவது எழுதுபவராகவோ அல்லது ஒரு பொழுதுபோக்கு பிளாக்கராகவோ இருந்தால், Blogspot உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.
Blogspot , WordPress.com மற்றும் self hosted WordPress.org ஆகியவற்றிற்கு இடையிலான அம்ச வேறுபாடுகளை விளக்கும், HowJoyful வழங்கும் எளிதான விளக்கப்படம் இங்கே:
Matt cutts on Blogger or WordPress for SEO:-
Matt cutts ஒரு கூகுள் பொறியாளர் மட்டுமல்ல. அவர் Google web spam குழுவின் தலைவராகவும் உள்ளார்.
ஒரு வலைதளத்திலிருந்து கூகுள் என்ன எதிர்பார்க்கிறது மற்றும் Google search engine எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி உங்களையும் என்னைப் போன்ற சாதாரண பயனர்களுக்கும் கல்வி கற்பிப்பவர்களில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் வீடியோவில், ஒரு பயனர் அவரிடம் பின் வருமாறு கேட்டார்:-
SEO அடிப்படையில் எது சிறந்தது: WordPress or Blogger?
இந்த கேள்விக்கு Matt பின்வரும் வீடியோவில் பதிலளித்துள்ளார்.
சுவாரஸ்யமாக, Matt cut தனது தனிப்பட்ட பிளாக்கிற்கு WordPress தளத்தை பயன்படுத்துகிறார். இருப்பினும் blogger புதிய பயனர்களுக்கு நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இது தொடங்குவது மிகவும் எளிது. சாதாரண பிளாக்கிற்கு இது அருமை என்று அவர் கூறுகிறார்.
Blogger மற்றும் WordPress இடையேயான SEO நன்மைகளை பொறுத்தவரை, இரண்டுமே இயல்புநிலை நிறுவலுடன்(default installation) ஒரே மாதிரியாக இருக்கும்.
WordPress இயல்புநிலை நிறுவல் ஆனது SEO friendly ஆக இருக்காது. ஆனால் கிடைக்கக்கூடிய பல plugin உதவியுடன் உங்கள் வேர்ட்பிரஸ் பிளாக்கை SEO friendly ஆக மாற்றலாம்.
சுருக்கமாக, WordPress உங்களுக்கு அதிக சக்தியைத்(power) தருகிறது. மேலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதை Customize செய்து கொள்ளலாம்.
Blogger Vs WordPress : Why WordPress is better?
நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி, Blogspot இல் நான் என்னுடைய பிளாக்கிங் பயணத்தை தொடங்கினேன். நான் எப்போதாவது தான் பதிவுகளை எழுதுவதாலும், இன்னும் தொழில்முறை பிளாக்கராக மாறாததாலும் WordPress-ற்கு மாறவில்லை. கூடிய விரைவில் நானும் WordPress -ற்கு மாறிவிடுவேன்.
நான் Blogspot ஐ பயன்படுத்துவதால், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி எனக்குத் தெரியும். இங்கு நான் எந்த நன்மைகளைப் பற்றியும் பேசப் போவதில்லை. ஏனெனில் Blogspot வழங்கும் அனைத்து அம்சங்களையும் WordPress வழங்குகிறது.
1. Control over your blog
Self hosted blog ஐ நான் ஆதரிக்க முக்கிய காரணம், Blogspot ஆனது கூகுளுக்கு சொந்தமானது என்பதால் தான். மேலும் அவர்கள் உங்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் உங்கள் Blogspot கணக்கை நீக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் Custom domain அம்சத்தைப் பயன்படுத்தினாலும்(using your domain name), ஸ்பேமர்கள்(spammers) Flag as Spam அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் பிளாக்கை spam ஆக புகார் அளிக்க வாய்ப்புகள் அதிகம்.
கூகுள் உங்களது பிளாக்கை remove செய்யக்கூடும். இது மிகவும் பொதுவானது. கூகுளில் search செய்து பார்த்தால், பல பிளாக்கர்கள் Blogspot ஐ பயன்படுத்தியதால் ஏற்பட்ட இந்த சிக்கல்களை எதிர்கொண்டதைப் பற்றி நீங்களே உணர்வீர்கள்.
Winner : self hosted blog
2. Search engine optimization
உங்கள் பிளாக் எங்கு host செய்யப்படுகிறது என்பது முக்கியமல்ல. எந்த ஒரு பிளாக்கரும் எதிர்பார்க்கும் முதல் மற்றும் கடைசி விஷயம் Traffic. Search engine optimization (SEO) என்பது எளிய முறையில் சொல்ல வேண்டுமானால், search engine -க்காக உங்கள் பிளாக்கை மேம்படுத்துதல் மற்றும் search engine இல் இருந்து traffic ஐ பெறுதல் ஆகும். WordPress மற்றும் Blogspot ஆகியவற்றை ஒப்பிடுகையில், search engine இல் உங்களது பிளாக்கை மேம்படுத்த, WordPress ஆனது கூடுதல் அம்சங்களை(option) உங்களுக்கு வழங்குகிறது. அங்கு Blogspot இல் நீங்கள் சில அமைப்புகளுக்கு(settings) மட்டுபடுத்தப்பட்டு இருக்கிறீர்கள்.
3. Plugins and Support
WordPress ஆனது plugin மற்றும் வலுவான Community support ஆகிய சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
நான் Blogspot இல் இருக்கும்பொழுது, related post ஐ காண்பிப்பதற்கும், அத்தகைய அம்சங்களை சேர்ப்பதற்கும் எனது theme ஐ திருத்துவதற்கு நிறைய நேரம் செலவானது. உங்களுக்கு தேவையான அனைத்திற்கும் எளிய plugin -களை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை WordPress எளிதாக்குகிறது. Plugin ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இல்லையென்றால் Custom code -னை பெறுவதற்கும் உங்கள் பிளாக்கின் திறன்களை(capabilities) விரிவுபடுத்துவதற்கும் நீங்கள் WordPress support forum -ன் உதவியைப் பெற வேண்டும்.
4. Reputation (நற்பெயர்)
இது மனித போக்கு அல்லது கருத்தாக கருதப்படலாம். பெரும்பாலான மக்கள் பிளாக்கர் பிளாட்பாரத்தில் கட்டமைக்கப்பட்ட பிளாக்கினை தீவிரமற்றவை என பார்க்கிறார்கள். எளிமையான காரணங்களில் ஒன்று, அது இலவசம். மேலும் ஏராளமான மக்கள் இதை Black hat SEO, Spamming மற்றும் Affiliate landing pages ஆகியவற்றிற்காக பயன்படுத்துகின்றனர்.
Self-hosted blog பற்றி பேசும் போது அந்த நபர் Self-hosted blog இன் சேவைக்கு பணம் செலுத்தியதாக மக்கள் நினைக்கிறார்கள். மேலும் அவர் தனது பிளாக்கை தீவிரமாக எழுதுகிறார் எனவும் நினைக்கின்றனர்.
5.Theme and Templates
Blogspot பல templates -களை வழங்குகிறது. ஆனால் WordPress இன் வணிகரீதியான தன்மையின் காரணமாக, நீங்கள் வரம்பற்ற இலவச மற்றும் பிரீமியம் WordPress theme -களை காண முடியும். மேலும் உங்களிடம் FTP access இருப்பதனால், உங்கள் WordPress theme இன் முழுமையான தோற்றத்தையும் உணர்வையும் மாற்றலாம்.
6.Adsense
AdSense என்பது தனது பிளாக்கில் இருந்து பணம் சம்பாதிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்த பிளாக்கருக்கும் உயிர் நாடியாகும். ஆரம்பத்தில் உங்கள் AdSense கணக்கை Approve செய்ய சிறந்த வழியாக Blogspot பயன்படுத்தப்பட்டது. ஆனால், பின்னர் Blogspot உடன் உங்கள் AdSense கணக்கைப் பெறுவது கடினமாகி வருகிறது.
WordPress மற்றும் உங்கள் டொமைன் மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் பிளாக்கை Approve செய்வது மிகவும் எளிதானது. இது self hosted blog இன் மற்றொரு நன்மையாகும்.
The Verdict :- Blogger or WordPress
WordPress பிளாட்பாரம் ஆனது எப்போதுமே Blogspot பிளாட்பாரத்தை விட சிறந்த தேர்வாகும்.
நீங்கள் முக்கியமாக, ஒரு பிளாக்கை தொடங்க ஏன் விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து, பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். Blogger இல் பல வரம்புகள்(limitations) உள்ளன. ஆனால் WordPress இல் அவ்வாறு இல்லை. செயல்பாட்டைப் பொறுத்தவரை, WordPress மிக உயர்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த பதிவை படித்த பின்பு, உங்களின் Blogspot blog ஐ WordPress -க்கு மாற்ற விரும்பினால் பின்வரும் இணைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- How to migrate from Blogspot to WordPress
WordPress Vs Blogger குறித்த உங்களின் தீர்ப்பு(Verdict) என்ன? நீங்கள் எந்த தளத்தை விரும்புகிறீர்கள்? ஏன்?
இதற்கான உங்களின் பதிலை எனக்கு தெரியப்படுத்துங்கள்.
0 comments: