புதியதாக blog அல்லது website ஆரம்பித்த பிளாக்கர்களுக்கு "back link" என்று சொன்னாலே அவர்களுக்கு என்னவென்று புரியாது. அதை தெரிந்துகொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு புரியும்படியாக கூறுகிறேன்.
"Backlink" என்பது ஒரு Website அல்லது blog இல் உள்ள Post அல்லது Page இன் லிங்கினை எடுத்து இன்னொரு Website அல்லது blog இல் உள்ள Post அல்லது Page இல் இணைப்பதே ஆகும்.
உதாரணத்திற்கு,
இந்த படத்தில் உள்ளபடி, ஒரு பதிவில் நான் Revenue hits பற்றி எழுதி, அதில் அவர்களின் லிங்கினையும் கொடுத்திருக்கிறேன். இப்படி நம்முடைய website அல்லது blog இல் வேறொரு website அல்லது blog இன் லிங்கினை கொடுப்பதால் , அவர்களுக்கு ஒரு backlink கிடைக்கும்.
நான் Revenue hits -ன் லிங்கினை எனது பிளாக்கில் கொடுத்திருப்பதால், என் மூலமாக அவர்களுக்கு ஒரு backlink கிடைக்கும்.
அதேமாதிரி வேறு ஏதாவது ஒரு தளத்தில் , நம்முடைய website அல்லது blog இன் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் , அவர்கள் மூலம் நமக்கும் ஒரு backlink கிடைக்கும்.