பேஸ்புக்கில் உங்களுக்கென தனியாக ஒரு Page - ஐ உருவாக்கி அதன் மூலம் உங்களின் தொழில் , வணிகம் முதலியவற்றை விரிவுபடுத்தலாம். குறிப்பாக Facebook - ல் நீங்கள் Business page, fan page, meme page போன்ற பலவற்றை உருவாக்கி அதில் செயலாற்றலாம்.
சரி வாருங்கள்... பேஸ்புக்கில் Page - ஐ எப்படி உருவாக்குவது என்பதை காண்போம்.
சரி வாருங்கள்... பேஸ்புக்கில் Page - ஐ எப்படி உருவாக்குவது என்பதை காண்போம்.
நீங்கள் Mobile ஐ பயன்படுத்தினால், பின்வரும் வழிமுறையை பயன்படுத்துங்கள். மாறாக கணிணியை பயன்படுத்தினால் இதிலிருந்து சிறிது மாறுபடும்.
- உங்கள் போனில் உள்ள Facebook App - ஐ open செய்து , அதில் Log in செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து படத்தில் உள்ளவாறு தோன்றும் குறியீட்டைக் கிளிக் செய்யுங்கள்.
- அதன் பின்பு வருவதில் Pages என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதற்கு அடுத்தபடியாக வரும் பக்கத்தில் "Create" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வருவதில் Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதன் பின்னர் வரும் பக்கத்தில், உங்களின் Page - ற்கு என்ன பெயர் கொடுக்க விரும்புகிறீர்களோ அதை கொடுத்து, "Next" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வருவதில், உங்களுடைய Page எது சம்பந்தமானது என்பதை தேர்வு செய்து , அந்த கட்டத்தில் உள்ளிட்டு "Next" என்பதை கிளிக் செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் உருவாக்கிய Page , Health சம்பந்தமானது எனில், அந்த box - ல் Health என உள்ளிட்டு Search செய்து , உங்களுக்கு தகுந்தாற்போல் வரும் Category ஐ தேர்வு செய்ய வேண்டும். பின்பு "Next" ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து வருவதில் உங்களுக்கு ஏதேனும் Website வைத்திருந்தால் அதன் லிங்கினை கொடுத்து "Next" என்பதை கிளிக் செய்யுங்கள். அப்படியில்லையெனில் கீழே உள்ள "I don't have a website" என்பதன் அருகில் உள்ள box - ல் click செய்து "Next" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதற்கு அடுத்ததாக வருவதில் உங்கள் Page க்கென Cover photo மற்றும் Profile photo வைத்து "Done" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- தற்பொழுது உங்களின் Page உருவாகிவிடும்.அதன்பிறகு நீங்கள் "Post" என்பதை கிளிக் செய்து , உங்களின் Text , Photo அல்லது Video வை Page - ல் பதிவிடலாம்.
மிகவும் பயன் தருவதாக அமைந்துள்ளது
ReplyDeleteNice teach
ReplyDelete