உங்களுக்கு தெரிந்தவரை பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்பதாக இருக்கக்கூடும். உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலானோர் அத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அதைப் பயன்படுத்தி ஏராளமானோர் பணம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக்கில் தங்களுக்கென ஒரு Page -ஐ உருவாக்கி அதன் மூலம் தங்களின் தொழில்/பிராண்ட் ஆகியவற்றை பெருக்கிக் கொள்கின்றனர். நீங்களும் பேஸ்புக்கில் Page மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை படியுங்கள்.
தற்பொழுது Facebook ஆனது அவர்களின் Adbreaks Program ஐ பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்கும்.
Facebook Page மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவை படித்துவிட்டீர்கள் எனில் அதில் ஒரு பகுதியாக வரும் Facebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி தெளிவாகக் காண்போம்.
Facebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
பேஸ்புக்கின் புதிய கொள்கையின்படி, பேஸ்புக் மூலம் பணமாக்குதலை செயல்படுத்த உங்களுக்கு கடந்த 60 நாட்களில் 10,000 பின்தொடர்பவர்களையும் 30,000 பார்வைகளையும் (குறைந்தபட்சம் ஒரு நிமிடம்) கொண்ட ஒரு Page தேவை.
YouTube ல் எப்படி AdSense மூலமாக பணம் சம்பாதிக்கிறீர்களோ அதே மாதிரிதான் Facebook ல் Adbreak மூலமாக பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள். YouTube ல் எப்படி விதிமுறைகள் இருக்கின்றதோ அதே மாதிரியான விதி முறைகளும் Facebook ல் இருக்கின்றன.
1. Eligibility for Monetization Facebook videos :-
- உங்களின் வீடியோவை 3 நிமிடம் அல்லது அதற்கு மேற்பட்டதாக வெளியிடுங்கள். குறிப்பாக மற்றவர்களை ஈர்க்கக் கூடிய வீடியோவை உருவாக்குங்கள்.
- உங்களின் Facebook Page ல் குறைந்தது 10,000 followers இருக்க வேண்டும்.
- உங்கள் Page - ல் உள்ள அனைத்து வீடியோக்களும், மொத்த வீடியோ எண்ணிக்கை 30,000 பார்வைகளாக இருக்க வேண்டும் (கடந்த 60 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்கும்போது மட்டுமே காட்சிகள் எண்ணப்படும்).
இவற்றை உங்களின் Page பெற்றிருந்தால் எளிமையாக உங்களுடைய Page-ற்கு Monetization கிடைக்கும்.
2. Adbreaks for more Creaters :-
தற்பொழுது Facebook ஆனது அவர்களின் Adbreaks Program ஐ பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்கும்.
நீங்கள் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டால் Adbreak மூலம் அதிக வருவாய் ஈட்டமுடியும். குறிப்பாக அந்த வீடியோ உங்களின் சொந்த தயாரிப்பாக இருக்க வேண்டும். வீடியோவை Upload செய்யும் போது Adbreak ஐ Enable செய்து கொள்ளலாம்.
3. Communicate with your visitors :-
உங்கள் வீடியோவை யார் பார்க்கிறார்கள் என்பதற்கான ஃபேஸ்புக்கின் சரியான வழிமுறை தெளிவாக இல்லை என்றாலும் நீங்கள் தவறாமல் தொடர்புகொள்ளும் நபர்களுக்கும் அவர்களின் News feed ல் உள்ள உங்கள் பதிவை அடிக்கடி பார்க்கும் நபர்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
உங்களின் Content ஐ உங்கள் நண்பர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பினை, Likes மற்றும் அந்த Content -ற்கு வரும் கருத்துகளுக்கு பதிலளிப்பது மூலமாக அதிகரிக்கலாம்.
பிற நண்பர்களின் பதிவை Likes மற்றும் Comment செய்வது உங்கள் பதிவை பார்க்க உங்கள் நண்பர்களுக்கு உதவும்.
4. Post Videos regularly :-
உங்களின் Page ஐ பின்தொடர்பவர்களின் News feed ஐ Post அல்லது வீடியோக்களின் மூலம் நிரப்ப விரும்பவில்லையெனில், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு Post ஐ பதிவிடுங்கள்.
குறுகிய, வேடிக்கையான அல்லது அர்த்தமுள்ள பதிவை நிர்வகிக்க நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டால், அது கடினமானதாக தான் இருக்கும்.
இருப்பினும் தொடர்ந்து பதிவிடுவது நிலையான பின்தொடர்பவர்களுக்கு வழிவகுக்கும்.
உங்கள் பதிவுகளுக்கு ஒரு Theme ஐ நியமிப்பது உங்கள் பதிவுகளை சீராக வைத்திருக்க உதவும். உதாரணத்திற்கு சினிமா பற்றிய Page வைத்திருந்தால் சினிமா பற்றிய பதிவையே பதிவிடுங்கள்.
முக்கிய குறிப்பு:-
உங்களின் வீடியோவானது நீங்கள் சொந்தமாக தயாரித்ததாக இருக்க வேண்டும். மாறாக மற்றவர்களின் வீடியோக்களை பகிர்ந்தால் கண்டிப்பாக உங்களின் Facebook Account முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
நன்றி
ReplyDelete