How to create a Facebook Account in tamil?

நீங்கள் இதுவரை பேஸ்புக்கை பயன்படுத்தவில்லை எனில், உங்களுக்கு  பேஸ்புக்கில் புதியதாக கணக்கை தொடங்குவது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது மிகவும் எளிமையானதுதான். தேவையான அனைத்து தகவல்களையும் பிரதான பேஸ்புக் பக்கத்தில் உள்ளிட்டு, ஓரிரு நிமிடங்களில் புதிய கணக்கை உருவாக்கலாம். உங்கள் புதிய கணக்கைப் பெற்றதும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், செய்திகளை அனுப்பவும், வீடியோக்களைப் பதிவேற்றவும், புகைப்படங்களை பகிரவும், குழுவில் சேரவும் மற்றும் செயல்பாடுகளை கண்டறியவும் இதைப் பயன்படுத்தலாம்.

சரி... பேஸ்புக் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைக் காண்போம்.


நீங்கள் Mobile ஐ பயன்படுத்தினால் :-


தற்பொழுது பேஸ்புக்கில் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அதில் கணக்கை உருவாக்க முடியும்.




  •  உங்களுடைய உண்மையான பெயரை உள்ளிடுங்கள். 

  • பின்பு உங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள்.


  •  அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் போன் நம்பரை உள்ளிடுங்கள். நீங்கள் உங்களின் Email id ஐ வைத்து உருவாக்க விரும்பினால் "Sign up with email"  என்பதை கிளிக் செய்து, Email id ஐ  உள்ளிடுங்கள்.


  •  பின்பு நீங்கள் ஆணாக இருந்தால் Male என்பதையும் பெண்ணாக இருந்தால் Female என்பதையும் மற்றவர்களாக இருந்தால் Custom  என்பதையும் கிளிக் செய்யுங்கள்.


  •  அதன் பிறகு நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை ( Nature586@# இது மாதிரி இருந்தால் நல்லது ) உள்ளிட்டு, Sign up என்பதை கிளிக் செய்யுங்கள்.


  •  உங்கள் Account ஐ  உருவாக்கிய பிறகு நீங்கள் உங்களின் Email அல்லது Phone number ஔ Confirm செய்து கொள்ளுங்கள்.


நீங்கள் கணினியை பயன்படுத்தினால் :-



  • உங்கள் கணினியில் உள்ள browser இல் Facebook  என Type  செய்து Search செய்து கொள்ளுங்கள். பின்பு வரும் பக்கத்தில் முதலாவதாக உள்ள Facebook என்பதை கிளிக் செய்யுங்கள்.



  •  அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Create an account என்பதற்கு கீழே உள்ள "First name" என்பதில் கிளிக் செய்து உங்களின் பெயரை உள்ளிடுங்கள்.


  • அதற்கு அடுத்து உள்ள "Surname"  என்பதில் உங்களின்  அப்பா பெயர் அல்லது நீங்கள் விரும்புகிற பெயரை உள்ளிடுங்கள்.


  • அடுத்துவரும் கட்டத்தில் உங்களின் Phone number அல்லது Email id ஐ உள்ளிடுங்கள் .


  •  அதற்கு அடுத்து உள்ள "New password" என்பதில் உங்களுக்கு விருப்பமான password ஐ உள்ளிடுங்கள். ( Nature586@# இது மாதிரி இருந்தால் நல்லது ) 


  • அதற்கு அடுத்து Date of birth என்பதில் உங்களின் பிறந்த தேதியினை உள்ளிடுங்கள்.


  • அதற்கு அடுத்து உள்ள Gender என்பதில் நீங்கள் ஆணாக இருந்தால் ஆண் என்பதனையும் பெண்ணாக இருந்தால் பெண் என்பதையும் மூன்றாம் பாலினத்தவர் ஆக இருந்தால் Custom  என்பதையும் கிளிக் செய்யுங்கள். 


  •  அதற்கு அடுத்ததாக "Sign up"  என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் புதியதாக இன்னொரு Screen -க்கு செல்லும். அதில்  " An activation link has been sent to your email account" என வரும்.

 நீங்கள் உங்களின் Email account - ல்  log in செய்து facebook ல் இருந்து அனுப்பிய Activation link ஐ கிளிக் செய்து உங்களின் Facebook account ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.

பின்பு நீங்கள் உங்களின் புகைப்படங்களை பதிவேற்றி, புதியதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post