Web hosting என்பது ஒரு ஆன்லைன் சேவையாகும். அது உங்களுடைய website அல்லது web Application -ஐ இணையத்தில் வெளியிட உதவுகிறது. நீங்கள் web hosting -ற்க்காக Sign up செய்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் website -ற்க்காக ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்கிறீர்கள் என அர்த்தம். அந்த இடம்தான் Server. அங்கு உங்களின் website சரியாக வேலை செய்ய தேவையான அனைத்து கோப்புகளையும் தரவுகளையும் சேமிக்கலாம்.
How web hosting works?
உதாரணத்திற்கு, நீங்கள் வெளியூரில் வேலை செய்பவராக வைத்துக்கொள்வோம். நீங்கள் அங்கு தங்கி வேலை பார்ப்பதற்கு ஒரு இடம் தேவைப்படும் அல்லவா? அதற்க்காக நீங்கள் வாடகைக்கு ஒரு வீட்டை எடுப்பீர்கள் அல்லவா? அப்படி வீட்டை வாடகைக்கு எடுத்து, உங்களின் உடைமைகளையும் அங்கு கொண்டுவந்து, அங்கிருந்து தான் வேலைக்கு செல்ல வேண்டும். அந்த வீட்டிலிருந்து தான் நீங்கள் இயங்கவேண்டும். வேலையை மட்டும் வைத்துக்கொண்டு தங்குவதற்கு இடம் இல்லை என்றால், நீங்கள் எப்படி வேலை செய்வீர்கள்.
அதேமாதிரிதான், உங்களின் website இயங்குவதற்கு web hosting தேவை.
இந்த கட்டுரையில், web hosting பற்றிய விவரங்களை உங்களுக்கு புரியும் வகையில் எளிதாக பார்ப்போம்.
How web hosting works?
Web hosting எப்படி வேலை செய்கிறது?
Server என்பது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இயங்கும் ஒரு உயரிய கணினி ஆகும். இதனால் உங்கள் website, அதைப் பார்க்க விரும்பும் எவருக்கும் எல்லா நேரத்திலும் கிடைக்கும். அந்த server ஐ தொடர்ந்து இயங்க வைப்பதற்கும் தீங்கிழைக்கும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும், உரை, படங்கள், கோப்புகள் போன்ற உங்கள் உள்ளடக்கத்தை server இல் இருந்து எடுத்து உங்கள் பார்வையாளர்களின் உலாவிகளுக்கு(browser) மாற்றுவதற்கும் உங்கள் web host பொறுப்பு.
நீங்கள் புதியதாக ஒரு website ஐ தொடங்க முடிவு செய்தால், நீங்கள் ஒரு வெப்ஹோஸ்டிங் வழங்குநரை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு server இல் ஒரு இடத்தை வழங்குவார்கள்.
உங்கள் web host உங்களின் எல்லா கோப்புகளையும் தரவுகளையும் server இல் சேமிக்கிறது. யாராவது உங்களின் domain name ஐ அவர்களின் பிரௌசரில் தேடும் பொழுதெல்லாம் அந்த கோரிக்கையை ஏற்று, தேவையான எல்லா கோப்புகளையும் உங்கள் host வழங்கும்.
எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற Hosting plan ஐ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது வீட்டு வாடகைக்கு ஒத்ததாகவே செயல்படுகிறது. Server தொடர்ந்து இயங்குவதற்கு நீங்கள் வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும்.
Types of web hosting :-
பெரும்பாலான web host வெவ்வேறு வகையான hosting ஐ வழங்குகின்றன. இதனால் அவர்கள் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நீங்கள் ஒரு எளிய தனிப்பட்ட வலைப்பதிவை(blog) உருவாக்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு பெரிய ஆன்லைன் வணிகத்தை சொந்தமாக்க விரும்புகிறீர்களா என்பது போன்ற உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பின்வரும் ஹோஸ்டிங்குகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
- Shared hosting
- VPS hosting
- Cloud hosting
- WordPress hosting
- Dedicated hosting
நீங்கள் சிறியதாக தொடங்குவது நல்லது. உங்களின் தளம் அதிக traffic ஐ அடையும் போது, மிகவும் மேம்பட்ட வகை திட்டத்திற்கு Upgrade செய்து கொள்ளலாம். எப்படியிருந்தாலும் ஒவ்வொன்றையும் பற்றி இன்னும் விரிவாகக் காண்போம்.
1. Shared hosting
இந்த வகை Hosting பெரும்பாலான web hosting தேவைகளுக்கு மிகவும் பொதுவான பதிலாகும். மேலும், இது பெரும்பாலான சிறு வணிகங்களுக்கும் தனிப்பட்ட வலைப்பதிவுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாகும்.
இந்த வகை hosting மூலம், நீங்கள் ஒரு server ஐ மற்ற வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் நான்கைந்து நபர்களுடன் சேர்ந்து தங்குவது போல.
ஒரு server இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட வலைதளங்கள் பின்வருவனவற்றை பகிர்ந்து கொள்கின்றன. அதாவது memory , computing power, disk space மற்றும் பல.
நீங்க இப்பொழுதுதான் blog எழுத தொடங்குகிறீர்கள் என்றால், இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
2. VPS hosting
VPS என்பதன் விரிவாக்கம் Virtual private server என்பதாகும். நீங்கள் இந்த வகை hosting இல் ஒரு server ஐ மற்ற வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள். ஆனால் உங்களின் web host , உங்களுக்கென ஒரு தனி இடத்தை அந்த server இல் ஏற்படுத்தி கொடுக்கும்.
அதாவது dedicated server space, memory போன்றவை உங்களுக்கென தனியாகவே ஒதுக்கப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் உங்களுக்கென்று தனி அறையில் தங்குவது போல.
VPS hosting plan ஆனது வேகமாக வளர்ந்து வரும் வலைத்தளங்கள், நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு சிறந்ததாக இருக்கும். உங்களின் வலைதளமானது மாதம் 20000 பார்வைகளுக்கு மேல் வந்தால், நீங்கள் VPS hosting -ற்கு மாறிவிடுவது நல்லது.
3. Cloud hosting
Cloud hosting ஆனது சந்தையில் தற்பொழுது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது.
உங்கள் host ஆனது உங்களுக்கென்று பல server -களை கொடுக்கும். அதாவது உங்களின் தரவுகளை ஒரு சர்வரில் சேமித்து வைக்கும். அந்த தரவானது வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு சர்வர்களுக்கு நகலெடுத்து அனுப்பப்பட்டிருக்கும்.
உங்களின் ஒரு server ஆனது மிகவும் பரபரப்பாகவோ அல்லது அதில் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலோ, உடனே அடுத்த சர்வருக்கு சென்று அங்குள்ள தரவை கொண்டு வந்து கொடுக்கும்.
மிகவும் பரபரப்பாக இயங்ககூடிய வலைதளங்களுக்கு இந்த cloud hosting மிகச் சிறப்பானதாக இருக்கும்.
4. Wordpress hosting
WordPress hosting என்பது shared hosting இன் ஒரு குறிப்பிட்ட வடிவமாகும். இது வேர்ட்பிரஸ் தள உரிமையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. உங்கள் server, குறிப்பாக வேர்ட்பிரஸ்க்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களின் தளம் தற்காலிக சேமிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக pre-installed plugins உடன் வருகிறது.
மிகவும் உகந்த கட்டமைப்பு( high optimized configuration) காரணமாக, உங்கள் தளம் மிக வேகமாக load செய்யப்பட்டு, குறைவான சிக்கல்களுடன் இயங்குகிறது. WordPress hosting plan இல் pre designed wordpress themes , drag and drop page builders , specific developer tools போன்ற wordpress -க்கு தேவையான கூடுதல் அம்சங்களும் உள்ளடங்குகிறது.
5. Dedicated hosting
Dedicated hosting என்பது உங்களின் வலைதளத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட உங்களின் சொந்த physical server ஆகும். எனவே நீங்கள் உங்களின் வலைதளத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அப்படியே நிர்வகிக்கலாம்.
உங்களின் server ஐ நீங்கள் விரும்பியபடி configure செய்து கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் operating system மற்றும் software ஐ தேர்வு செய்து, உங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ப முழு ஹோஸ்டிங் சூழலையும் அமைக்கலாம்.
உண்மையில், ஒரு Dedicated server ஐ வாடகைக்கு எடுப்பது உங்கள் சொந்த On-site server ஐ சொந்தமாக்குவது போலவே சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் web host இன் தொழில்முறை ஆதரவோடு வருகிறது. இது அதிக போக்குவரத்தை கையாளும் பெரிய ஆன்லைன் வணிகங்களை நோக்கியதாகும்.
அருமையான பதிவாக இருந்தது எனக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
ReplyDeleteHosting பற்றி தெரியாத எனக்கு புரியும் வகையில் அருமையான விளக்கம் நன்றி
ReplyDeleteGood explanation with good example. Thank you. Please do some more work like this.
ReplyDelete