How to create a Google adsense account?
உங்களிடம் ஒரு பிளாக்கோ அல்லது ஒரு யூடுயூப் சேனலோ இருந்தால் அதன்மூலம் பணம் சம்பாதிக்க Google Adsense மிக முக்கியமாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட Adsense இல் Account உருவாக்குவது எப்படி என்பதைக் காண்போம் .
Google AdSense இல் Sign Up செய்வது எப்படி?
- முதலில் கூகுள் சர்ச் பாக்ஸில் Google AdSense என Type செய்து search செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில் Signup now என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு வரும் பக்கத்தில் Your website என்னும் இடத்தில் உங்களது Website ன் URL ஐ paste செய்யுங்கள். நீங்கள் Youtube channel வைத்திருந்தால் அந்த சேனலின் லிங்கினை கொடுங்கள் . Your email address என்னுமிடத்தில் உங்களது email id ஐ கொடுங்கள்.
- பிறகு கீழே Yes அல்லது No என இரண்டு option இருக்கும்.அதில் உங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸிலிருந்து உதவி மற்றும் பரிந்துரைகள் வேண்டுமெனில் முதலாவதாக உள்ள Yes என்பதை கிளிக் செய்யுங்கள்.வேண்டாமெனில் No என்பதனை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு Save & Continue என்பதை கிளிக் செய்யுங்கள் .
- பின் வரும் பக்கத்தில் உங்களின் Google Account இல் Sign in செய்து கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய Country ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள் .
- அடுத்து வரும் பக்கத்தில் Adsense இன் Terms and Conditions ஐ படித்து தெரிந்துகொண்டு , உங்களுக்கு வேண்டுமெனில் Accept என்பதை கிளிக் செய்யுங்கள் .
- தற்பொழுது Create account என்பதை கிளிக் செய்ய உங்களின் Adsense Account உருவாகிவிடும் .