பிளாக்கை தொடங்கும் பெரும்பாலான புதியவர்கள் தங்கள் பிளாக்கிங் தளமாக Blogspot ஐப் பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் Blogspot ஆனது இலவசம், தொடங்குவதற்கு உங்களுக்கு குறைந்த தொழில்நுட்ப திறன்கள் தேவை. அதுமட்டுமில்லாமல் முதலீடு எதுவும் இல்லாமல் வருமானத்தை பெற முடியும்.
மேலும் நீங்கள் பிளாக்கில் Unlimited bandwidth மற்றும் Unlimited storage ஐப் பெறுவீர்கள்.
Blogspot இல் நீங்கள் விரும்பாத ஒன்று .blogspot டொமைன் பெயர். இதை Custom domain name வாங்குவதன் மூலம் எளிதாக சரி செய்ய முடியும்.
Blogspot URL ஆனது இப்படி இருக்கும்
www.domain.blogspot.com
Custom domain name ஆனது இப்படி இருக்கும்
www.domain.com
Custom domain name ஆனது .blogspot டொமைன் பெயரை விட பல கூடுதல் நன்மைகளை கொண்டுள்ளது.
உங்கள் Blogspot பிளாக்கிற்கு Custom domain ஐ ஏன் வாங்க வேண்டும்?
1. Buying a domain name is cheap
ஒரு டொமைன் பெயரை வாங்குவது மிகவும் மலிவானது. நீங்கள் ஒரு நல்ல டொமைன் பெயரை 500 - 800 ரூபாய்க்குள் பெறலாம்.
நீங்கள் .com டொமைன் பெயரை GoDaddy இல் மலிவான விலைக்கு வாங்கலாம்.
2. Social media credibility
Blogspot ஒரு இலவச தளமாக இருப்பதனால், பெரும்பாலும் ஸ்பேமர்களால்(spammer) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த Blogspot ஐ சமூக ஊடகங்களில் மக்கள் நம்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதற்கு இது ஒரு காரணம்.
உங்கள் blogspot பிளாக்கிற்கு custom domain name ஐ பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு இலவச வலைப்பதிவைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை இது நீக்குகிறது. எனவே இது ஒரு ஸ்பேமர் அல்ல.
3.Web promotion
Web promotion என்பது சமூக ஊடகங்கள் முதல் link building வரை பல விஷயங்களைக் குறிக்கும்.
ஆனால் நம்பகத்தன்மையைப் பற்றி பேசும்போது, பெரும்பாலான சிறந்த வலைதளங்கள் ஒரு blogspot டொமைனிற்கு ஒரு இணைப்பை வழங்க விரும்புவதில்லை.
இது promotion ஐ மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.
4. Seriousness toward blogging
நீங்கள் என்னதான் கடுமையாக வேலை பார்த்து உங்களின் blogspot பிளாக்கிற்கு நல்ல content ஐ உருவாக்கி இருந்தாலும், ஒரு நல்ல layout, நல்ல Template மற்றும் Custom domain name இல்லாமல் இருந்தால், மக்கள் நீங்கள் தீவிரமாக பிளாக் எழுதவில்லை என்றே நினைப்பார்கள்.
அடிப்படையில், நீங்கள் விரும்பும் விஷயத்தில் பணத்தை செலவிட நீங்கள் தயாராக இல்லை என்றால், உங்கள் பிளாக்கை யாரும் நம்பமாட்டார்கள்.
5. Branding
உங்கள் வாசகர்களின் மனதில் நீங்கள் உருவாக்கும் கருத்து உங்கள் பிளாக்கிங் வெற்றிக்கு இன்றியமையாதது.
Custom domain name ஐ பயன்படுத்துவது உங்கள் வலைப்பதிவை ஒரு தொழில்முறை பிராண்டாக நிறுவ உதவுகிறது.
நீங்கள் மேலும் நல்ல logo, favicon மற்றும் banner ஐப் பயன்படுத்தி உங்களின் பிராண்டை நிலைநிறுத்தலாம்.
6. Professional Email
Custom domain name வைத்திருப்பதனால் custom domain name -ன் அடிப்படையிலான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கான திறன் வருகிறது.
உங்கள் டொமைன் பெயருடன் ஒரு மின்னஞ்சல் முகவரியை நீங்கள் வைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, Contact@tamilbold.com
- How to Create a Professional Email using zoho for free
7. The SEO advantage
உங்களின் வலைப்பதிவை வேர்ட்பிரஸ்க்கு மாற்ற திட்டமிட்டால், custom domain name ஆனது அந்த விலைமதிப்பற்ற link juice ஐ நீங்கள் இழக்கமாட்டீர்கள் என்பதை உறுதிசெய்யும்.
உங்கள் இடம் பெயர்வு ஆனது மேலும் Search engine friendly ஆக இருக்கும்.
How to get a Custom BlogSpot domain
நீங்கள் உங்களின் பிளாக்கிற்கு custom domain name ஐ வாங்க திட்டமிட்டால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பது பற்றி இங்கே:
1. Find domain name
உங்களின் பிளாக்கிற்கு சரியான டொமைன் பெயரை தேடுங்கள். உங்கள் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக பிராண்டபிள் மற்றும் மறக்கமுடியாத ஒன்றைப் பயன்படுத்தவும். பின்வரும் இணைப்பின் மூலம் சரியான டொமைன் பெயரை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை அறியலாம்.
2. Follow this detailed guide
பின்வரும் இணைப்பின் மூலம் நீங்கள் உங்களின் பிளாக்கிற்கு Custom domain name ஐ எவ்வாறு இணைக்கலாம் என்பதை அறியலாம்.
- How to add custom domain name to your blog
Note : Wordpress ஆனது Blogspot பிளாக்கிங் தளத்தை விட சிறந்தது ஆகும். ஜனவரி 2016 அறிக்கையின்படி, உலகில் 25% வலைதளங்கள் வேர்ட்பிரஸ் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள,
நான் பரிந்துரைப்பது என்னவென்றால், ஒரு சில மாதங்களுக்கு blogspot ஐப் பயன்படுத்திவிட்டு பின்பு Self hosted wordpress blog -ற்கு மாறிக்கொள்ளலாம். இருந்தாலும் உங்களிடம் பணமிருந்தால் நீங்கள் நேராக wordpress இல் பிளாக்கை தொடங்குவது நல்லது.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Tags:
Blogger tips