உங்களது வலைதளத்திற்கு சரியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்களின் வெற்றிக்கு முக்கியமானது. நீங்கள் தவறான டொமைன் பெயரை தேர்வு செய்தால், உங்கள் brand மற்றும் Search ranking -களை பாதிக்காமல் பின்னர் மாறுவது ஒரு தொந்தரவாக இருக்கலாம்.
அதனால்தான் தொடக்கத்திலிருந்தே சிறந்த டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.
முதலில் தொடங்கும்போது, சரியான டொமைன் பெயருடன் கவர்ச்சியான வணிக பெயர் யோசனைகளைக் கொண்டுவருவது கடினம்.
இந்த கட்டுரையில், டொமைன் பெயர் யோசனைகளைப் பெற உங்களுக்கு தேவையான அனைத்து கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். சிறந்த டொமைன் பெயரைத் தேர்வு செய்து, உங்கள் புதிய டொமைனை ( இலவசமாக ) பதிவு செய்வோம்.
14 Tips for Choosing the Best Domain :-
புதியதாக பிளாக்கை தொடங்கும் போது, டொமைன் பெயரை தேர்வு செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நீங்கள் தொடக்கத்திலேயே தவறு செய்ய விரும்பமாட்டீர்கள்.
இந்த செயல்முறையை எளிதாக்க, உங்கள் வலைதளத்திற்கான சிறந்த டொமைனை தேர்வு செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய எளிய 14 படிகளை இங்கு பட்டியலிடுகிறேன்.
01. Stick with .Com
02. Use Keywords in your Domain Name Search
03. Keep your domain name short
04. Make it easy to pronounce and spell
05. Keep it unique and brandable
06. Avoid hyphens in domain name
07. Avoid doubled letters
08. Leave room to expand
09. Research your domain name
10. Use domain generators for clever ideas
11. Act quickly before someone else taken it
12. Best place to register a domain name
13. Get free domain with web hosting
14. Most popular domain registrars
மேலும் விபரங்களுடன் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
1. Stick with .com
இன்றைய காலகட்டத்தில் நிறைய New domain name extensions உள்ளன. Original extension -களான .com, .net மற்றும் .org முதல் niche extension -களான .pizza, .photography மற்றும் .blog வரையிலான domain name extensions உள்ளன.
நான் எப்போதும் .com டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பேன்.
புதிய extension -களை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக பிளாக் பெயர்களை கவர்ச்சியூட்டும் விதமாக கொண்டு வரலாம் என்றாலும், தற்போது வரை .com ஆனது அதிகம் நிறுவப்பட்ட மற்றும் நம்பகமான domain name extension ஆக உள்ளது.
புதிய domain extension -களான .ninja அல்லது .photography போன்ற domain name extensions நம்பகத்தன்மையற்றவையாக உள்ளன.
.com டொமைன்கள் மிகவும் மறக்க முடியாதவை. பல பயனாளர்கள், குறிப்பாக தொழில்நுட்ப ஆர்வலர்களாக இல்லாதவர்கள், ஒவ்வொரு டொமைனின் முடிவிலும் அதைப் பற்றி சிந்திக்காமல் தானாகவே ".com" என தட்டச்சு செய்வார்கள்.
உங்கள் வலைதளம் jane.photography என வைத்துக்கொள்வோம். உங்களின் பயனர்கள் தற்செயலாக jane.photography.com என தட்டச்சு செய்தால், அவை இணையதளத்தில் error பக்கத்தில் வந்து முடிவடையும்.
புத்திசாலித்தனமாக அந்த ஆபத்தை தவிர்க்க .com உடன் ஒட்டிக் கொள்வது சிறந்தது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் விசைப்பலகைகள் தானாகவே .com பொத்தானைக் கொண்டுள்ளன.
2. Use Keywords in Your Domain Name Search
ஒரு டொமைனில் keywords இன் பங்கு மிக முக்கியமானது. உங்கள் டொமைன் பெயரில் keywords ஐ பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வலைதளம் எதைப் பற்றியது என தேடுபொறிகளுக்குச் சொல்கிறீர்கள். தரமான உள்ளடக்கம் மற்றும் நல்ல பயனர் அனுபவத்துடன் சேர்ந்து, உங்கள் domain இல் உள்ள keywords கூகுளில் உங்களின் rank ஐ உயர்த்த உதவும்.
உங்களின் keywords உடன் கூடிய ஒரு நல்ல டொமைனை கண்டுபிடிப்பது கடினம். அது ஏற்கனவே வேறொருவரால் எடுக்கப்படாமலும் இருக்க வேண்டும்.
உங்கள் டொமைன் தனித்துவமாக இருக்க, நீங்கள் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் keywords ஐ வேறு வார்த்தைகளுடன் இணைக்க வேண்டும்.
3. Keep your Domain Name Short
Keywords முக்கியமானவை என்றாலும், டொமைன் பெயரானது நீளத்துடன் செல்ல வேண்டாம். குறுகிய மற்றும் மறக்கமுடியாத டொமைன் பெயரை வைத்திருப்பது நல்லது.
உங்கள் டொமைன் பெயரை 12 எழுத்துகளுக்கு கீழ் வைத்திருக்க நான் பரிந்துரைப்பேன். நீளமான டொமைன் பெயரை உங்கள் பயனர் நினைவில் வைத்துக் கொள்வது கடினம்.
பயனர்கள் நீண்ட டொமைன் பெயரை, எழுத்துப் பிழையுடன் உள்ளிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது Traffic ஐ இழப்பதற்கு வழிவகுக்கும்.
அதனால்தான் உங்கள் டொமைன் நீளத்தை குறுகியதாக வைத்திருப்பது நல்லது.
4. Make your Domain Name Easy to Pronounce and Spell
பேசும் போதும் எழுதும் போதும் உங்கள் டொமைன் பெயரை எளிதாக பகிரக்கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் டொமைன் பெயரை நேரில் பகிருமாறு கேட்கப்படும் போது உங்களுக்கு தெரியாமல் இருக்க கூடாது.
ஒரு தொழில்முறை வணிக மின்னஞ்சல் முகவரியை உருவாக்க உங்கள் டொமைன் பெயரைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், கண்டிப்பாக எந்தவொரு கேட்பவனுக்கும் புரிந்துகொள்ளும் படியாகவும் எளிதில் உச்சரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
5. Keep it Unique and Brandable
உங்கள் பிளாக்கின் டொமைன் பெயர் தனித்துவமாக இருக்க வேண்டும். அதனால் உங்கள் வாசகர்களின் மனதில் நீங்கள் தனித்து நிற்கலாம். உங்கள் பிளாக்கின் niche ஐ கொண்ட மற்ற பிளாக்குகளை கண்டுபிடித்து, அவர்கள் எந்த மாதிரியான டொமைன் பெயர்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்.
நீங்கள் தற்செயலாக கூட trademark பெயர்களை பயன்படுத்த விரும்பாதீர்கள். அதேமாதிரி மற்ற பிளாக்கர்களின் டொமைன் பெயரை காப்பி அடிக்காதீர்கள்.
மேலும் பிராண்டபிள் டொமைன் பெயர்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிராண்டபிள் டொமைன் பெயர்கள் தனித்துவமானவை, கவர்ச்சியானவை மற்றும் மறக்கமுடியாதவை. எடுத்துக்காட்டாக, "Amazon.com" என்பது "Buybooksonline.com" ஐ விட மிகவும் பிராண்டபிள் பெயர்.
புதிய டொமைனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் ஏற்கனவே இருக்கும் பிராண்டின் பதிப்புரிமை கொள்கைகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, wordpress ஆனது உங்கள் டொமைன் பெயரை "wordpress" உடன் வைத்திருக்க அனுமதிக்காது. அதாவது wordpressguide.in, mywordpress.com இது மாதிரியான டொமைன் பெயரை நீங்கள் வாங்குவதை அனுமதிக்காது. "wordpress" என்பதற்கு பதிலாக "WP" உள்ளிட்ட பெயரைப் பயன்படுத்த அவை உங்களை அனுமதிக்கும்.
6. Avoid hyphens in Domain name
Hyphens உடன் ஒரு டொமைன் பெயரை ஒருபோதும் உருவாக்க விரும்பாதீர்கள். ஹைபன்கள் நீங்கள் தொடர்புகொள்ள விரும்பாத Spam டொமைன்களின் அடையாளமாக இருக்கலாம்.
ஹைபன்கள் உள்ள டொமைன்களும் எழுத்துப் பிழைகளுக்கு ஆளாகின்றன. நீங்கள் விரும்பும் டொமைன் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதால், ஹைபன்களுடன் ஒரு டொமைன் பெயரை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் பயனர்கள் ஹைபனை தட்டச்சு செய்ய மறந்துவிட்டால், உங்கள் போட்டியாளரின் தளத்திற்கு சென்றுவிடுவார்கள்.
7. Avoid Double Letters
இரட்டிப்பான எழுத்துக்களை கொண்ட டொமைனைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் எழுத்துப்பிழையினால் உங்களுக்கு
வரவேண்டிய traffic ஐ இழக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, presssetup.com போன்ற ஒரு டொமைன் எழுத்துப் பிழைகளுக்கு ஆளாக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு traffic வராமல் போய்விடும்.
இரட்டிப்பான எழுத்துகளைத் தவிர்ப்பது உங்கள் டொமைன் பெயரை தட்டச்சு செய்ய எளிதானதாகவும், மேலும் பிராண்டபிளாகவும் இருக்க வைக்கும்.
8. Leave Room to Expand
உங்கள் industry அல்லது niche -க்கு தொடர்புடைய ஒரு டொமைன் பெயரை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். ஏனெனில் இது உங்கள் வலைதளத்தைப் பற்றி பயனர்களுக்கு சில யோசனைகளைத் தருகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு பூக்காரன் orchidblog.com போன்ற ஒரு டொமைன் பெயரைத் தேர்வு செய்கிறார். ஆனால் பின்னர், அவர் மல்லிகைகளுக்கு(orchids) அருகில் உள்ள மற்ற பூக்களைப் பற்றியும் வலைப்பதிவைத் தொடங்க விரும்புகிறார். அவ்வாறான நிலையில், பிற பூக்களில் ஆர்வமுள்ள வாசகர்களை ஈர்ப்பதில் இருந்து டொமைன் பெயர் உங்களைத் தடுக்கக்கூடும்.
உங்களின் தளத்தை புதிய டொமைனுக்கு சரியாக நகர்த்துவது வெறுப்பூட்டும் செயலாகும். மேலும் அதை சரியாக செய்யாவிட்டால், உங்களின் Search ranking ஐ இழக்க நேரிடும். அதனால்தான் தொடக்கத்திலிருந்தே ஒரு சரியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.
9. Research Your Domain Name
நீங்கள் ஒரு டொமைன் பெயரை பதிவு செய்வதற்கு முன், அதே பெயரைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வணிகம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். ஏற்கனவே trademark செய்யப்பட்ட பெயரை ஒத்த அல்லது அதே பெயர் இருக்கிறதா என்று நீங்கள் trademark search செய்யலாம்.
நீங்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் பெயர் இருப்பதை சரிபார்க்கலாம்.
இதேபோன்ற அல்லது பொருந்தக்கூடிய பெயர் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இது கடுமையான சட்டரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் உங்களிடம் இருந்து நிறைய பணம் செலவழிக்ககூடும்.
10. Use Domain Name Generators for clever ideas
தற்போது 360 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர்கள் உள்ளன. இதனால் பலர், நல்ல டொமைன் பெயர்களை ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் எனக் கூறுகின்றனர்.
தனிப்பட்ட டொமைன் பெயரை manual ஆக தேடுவது அதிக நேரம் எடுக்கும்.
டொமைன் பெயர் ஜெனரேட்டர்கள் வருவது இங்கு தான். இந்த இலவச கருவிகள் நீங்கள் கொடுக்கும் keywords ஐ வைத்து நூற்றுக்கணக்கான டொமைன் பெயர் யோசனைகளை உங்களுக்கு வழங்கும். அதிலிருந்து ஒரு பெயரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
11. Act quickly before someone else takes it
ஒவ்வொரு நாளும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் விரும்பும் ஒரு டொமைன் பெயரை நீங்கள் கண்டறிந்துவிட்டால், அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்.
டொமைன் பெயர்கள் ரியல் எஸ்டேட் போன்றவை. ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல பிராண்டபிள் டொமைன் பெயரை பதிவு செய்து, எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்றால், யாராவது உங்கள் டொமைன் பெயரின் யோசனையை பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
டொமைன் பெயர்கள் ஒப்பீட்டளவில் மலிவானவை என்பதால், வேகமாக செயல்பட எங்கள் வாசகர்களை எப்போதும் பரிந்துரைக்கிறோம். நீங்கள் பின்னர் உங்கள் எண்ணத்தை மாற்றினால், அது காலாவதியாகி விடலாம்.
Best places to Buy a Domain Name
இதுவரை நூற்றுக்கணக்கான டொமைன் பதிவாளர்கள் (domain registrars) இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றை கவனமாக தேர்வு செய்வது முக்கியம். ஏனெனில் உங்கள் டொமைனை பின்னர் நகர்த்துவது கடினம்.
Web hosting போலவே, டொமைன் பெயர் பதிவுகளுக்கான விலை 600 ரூபாயிலிருந்து 1800 ரூபாய் வரை எங்கும் மாறுபடும்.நீங்கள் அதை இலவசமாக கூட பெறலாம்*.
ஒரு டொமைன் பெயரை நீங்கள் எவ்வாறு எளிதாக வாங்கலாம் என்பதைப் பார்ப்போம்.
Free Domain Registration with web hosting
பெரும்பாலான web hosting நிறுவனங்களும் டொமைன் பதிவை ஒரு சேவையாக வழங்குகின்றன. அந்த நிறுவனங்களில் சில, புதிய ஹோஸ்டிங் கணக்குகளுடன் இலவச டொமைன் பதிவை வழங்குகின்றன.
நீங்கள் ஒரு புதிய வலைதளத்தை தொடங்கினால், இந்த சலுகையைப் பயன்படுத்தி உங்கள் டொமைன் பெயரை இலவசமாகப் பெறுவது ஒரு சிறந்த யோசனை.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரு வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் நிறுவனங்கள் நம்முடைய பயனாளர்களுக்கு 60% தள்ளுபடியுடன் Web hosting, Free SSL certificate மற்றும் Free domain name ஆகியவற்றை வழங்குகின்றன.
Bluehost ஆனது மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பிராண்ட் பெயர்களில் ஒன்றாகும். அவர்கள் "wordpress" ஆல் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹோஸ்டிங் வழங்குநர் ஆவர்.
HostGator மற்றொரு பிரபலமான Web hosting வழங்குநர் ஆகும். இது மிகவும் மலிவான வலைதள ஹோஸ்டிங் விருப்பங்களுடன் இலவச டொமைன் பெயரை வழங்குகிறது.
பெரும்பாலான ஹோஸ்ட்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே இலவச டொமைன் பதிவுகளை வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். முதல் வருடத்திற்குப் பிறகு, உங்கள் டொமைன் பதிவு வழக்கமாக வருடத்திற்கு ரூபாய் 1000 -க்குள் புதுபிக்கப்படும்.
நிறைய பயனர்கள் முதல் ஆண்டிற்க்கான இலவச டொமைனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில் முதல் வருடத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல், ஏன் இலவசமாக டொமைனை வாங்கக் கூடாது என நினைப்பதால் அவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
Most popular Domain Registrars :-
நீங்கள் wordpress இல் பிளாக்கை தொடங்க விரும்பினால் Bluehost அல்லது HostGator இல் தொடங்கலாம். பெரும்பாலும் நான் Bluehost இல் தொடங்கலாம் என்று கூறுவேன்.
நீங்கள் Blogspot இல் பிளாக்கை தொடங்க விரும்பினால், Custom domain name பெறுவதற்கு GoDaddy சிறந்த தேர்வாக இருக்கும்.
அவ்வளவுதான். இந்த பதிவு உங்களுக்கு ஒரு டொமைன் பெயரை தேர்வு செய்வதற்க்கான ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.