Custom domain name என்றால் என்ன? | What is Custom domain name in Tamil?

நீங்கள் "Custom domain name" என்ற வார்த்தையை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படி கேட்டிருந்தால் அது என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா? 

அதிகமான பிளாக்கர்கள் தங்களுடைய பிளாக்கிங் பயணத்தை Blogspot.com அல்லது Wordpress.com உடன் தொடங்குகின்றனர். காரணம் அதில் முதலீடு செய்ய தேவையில்லை என்பதே. அதில் பிளாக்கிங் தொடங்குவது எப்போதும் பாதுகாப்பான வழியாகும். ஆனால் பிளாக்கிங்கை தொழிலாக தொடங்கும் ஒருவர், தனது பிளாக்கை Blogspot.com அல்லது Wordpress.com இல் தொடங்கினால், அவர் செய்யும் மிகப்பெரிய தவறு இது. 

பிளாக்கிங் மூலமாக பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு எப்போதும் Self hosted wordpress blog (wordpress.org) தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

இருந்தாலும், தற்பொழுது custom domain name பற்றிப்  பார்ப்போம்.

Custom domain name என்பது ஒரு வலைதளத்தை அடையாளம் காணும் தனித்துவமான பிராண்ட் பெயர். 

Tamilbold.com, Tamilbold.in, Tamilbold.org இதுமாதிரி வருவதெல்லாம் custom domain name. 

Tamilbold.blogspot.com, Tamilbold.wordpress.com இதுமாதிரி வருவதெல்லாம்  Sub-domain.



நீங்கள் Blogspot அல்லது wordpress.com இல் Sign up செய்யும்போது, உங்களின் domain பின்வருமாறு இருக்கும்.

Yourblog.blogspot.com
Yourblog.wordpress.com

ஆனால் தொழில்முறை பிளாக்குகளுக்கு, இந்த வகையான domains மோசமானவை.

இலவச பிளாக்கிங் தளத்தைப் பயன்படுத்தி பிளாக்கிங் செய்யும் பல பிளாக்கர்கள் வழக்கமாக Custom domain name வாங்குவதை விரும்புவதில்லை. அவர்கள் ஒரே Sub-domain இல் பல ஆண்டுகளாக பிளாக்கிங் செய்வார்கள். அவர்கள், தங்களின் பிளாக்கிற்கு அதிக traffic கிடைக்கும் பொழுது Custom domain name வாங்கிக் கொள்ளலாம் என நினைப்பார்கள். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை.

குறிப்பு :  ஒரு டொமைனைத் தேர்ந்தெடுப்பது பற்றி நான் பேசும்போது, நான் Tamilbold.com, Tamilbold.in, Tamilbold.org போன்ற Top level root domain பற்றிப் பேசுகிறேன். நீங்கள் Blogspot அல்லது Wordpress.com இல் Sign up செய்யும்பொழுது, உங்களுக்கு Tamilbold.blogspot.com, Tamilbold.wordpress.com போன்ற Sub-domain தான் கிடைக்கும்.

Custom domain name இல்லாமல் நீங்கள் என்னவெல்லாம் இழப்பீர்கள் :-


  • நீங்கள் ஒரு வருடம் பிளாக்கிங் செய்கிறீர்கள் மற்றும் ஏராளமான traffic ஐ பெற்றிருக்கிறீர்கள் எனில், உங்கள் வலைப்பதிவு(blog) சில Domain Authority ஐ உருவாக்கியிருக்கும். ஆனால் நீங்கள் Custom domain -க்கு  மாறும்போது, அந்த Domain Authority ஐ நீங்கள் இழப்பீர்கள். மேலும் நீங்கள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும். Search engine result page (SERP) இல் உங்கள் Rank ஐ  நீங்கள் பராமரிக்க முடியும் என்றாலும், உங்கள் Domain Authority (DA) ஆனது பூஜ்ஜியத்திற்கு சென்றுவிடும்.

  • தேடுபொறிகளில் உங்கள் வலைப்பதிவை(blog) தேடும்போது, உங்கள் புதிய முகவரி சிறிது நேரம் தெரியாது. பழைய Sub domain இல் இருந்து புதிய Custom domain -க்கு link juice -ஐ ( 301 redirection -க்கு பிறகு ) கூகுள் அனுப்ப நேரம் எடுக்கும்.

  • புதிய டொமைன் பெயரை பெற்றிருப்பதால், Google Analytics மற்றும் webmaster tools ஆகியவற்றின் கணக்குகளை Update செய்ய வேண்டியிருக்கும். புதிய டொமைனில் நீங்கள் எப்போதும் பழைய Analytics code -களை பயன்படுத்தலாம் என்றாலும், பழைய டொமைன் பெயரில் புதிய டொமைன் பெயருக்கான உங்கள் அளவீடுகளை(metrics) அளவிடுவது உங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கும்.

  • நீங்கள் மீண்டும் உங்கள் பிளாக்கின் Sitemap ஐ அனைத்து Search engine -களிலும் கொடுக்க வேண்டும்.

  • உங்கள் பிளாக்கின் முகவரியை அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் புதுப்பிக்க வேண்டும்.

  • நீங்கள் Sub domain இல் இருந்து Custom domain -க்கு மாறும் போது, இந்த புதிய டொமைன் பெயரை re-brand மற்றும் re-market செய்ய வேண்டும்.

ஆகையால் நீங்கள் பிளாக்கரில் பிளாக்கை தொடங்கும்போதே, Custom domain name ஐ  வாங்கி, அதனுடன் இணைத்துக் கொள்வது நல்லது.

Custom domain name வைத்திருப்பதன் நன்மைகள் :-


  • தேடுபொறிகளில் (குறிப்பாக கூகுளில்) .Blogspot.com அல்லது .wordpress.com ஐ விட root domain -களுக்கு சிறந்த வெளிப்பாடு (exposure) உள்ளது.

  • உங்களின் Google AdSense account ஆனது  Approval ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

                    தெரிந்து கொள்க :-  Google Adsense Account Approval Process

  • ஜிமெயில் அல்லது yahoo மின்னஞ்சலைக்  காட்டிலும் contact@tamilbold.com போன்ற contact email ஐ நீங்கள் வைத்திருக்கலாம்.

                   தெரிந்து கொள்க :-  How to Create a Professional email using Zoho for free

  • உங்கள் டொமைன் பெயரை நீண்ட பெயராக சொல்வதை காட்டிலும் எளிமையாக சொல்லி விளம்பரப்படுத்தலாம்.

  • Root level domain-கள்  பயனாளர்களின் பார்வையில் மிகவும் நம்பகமானவை. நீங்கள் பிளாக்கிங் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறீர்கள் எனில், இலவச Sub domain இல் இருப்பதைவிட  Custom domain -க்கு செல்வதால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

  • குறிப்பாக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முதல் நாளிலிருந்து உங்களுக்கு ஒரு பிராண்ட் பெயர் இருக்கும்.

How to choose a Custom Domain :-


நம்ம Tamilbold இல் ஏற்கனவே இதைப் பற்றி விளக்கமாக எழுதியிருப்பதால் முக்கியமான சில குறிப்புகள் இங்கே..

  • நீண்ட பெயரை தேர்வு செய்வதை விட்டுவிட்டு குறுகிய பெயரை தேர்வு செய்யுங்கள். 

  • பெயரானது உச்சரிப்பதற்கு எளிதானதாக இருக்கவேண்டும்.

  • நீங்கள் Sub-domain இல் இருந்து மாறுகிறீர்கள் எனில், உங்களின் பிராண்டை அப்படியே வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். (எ.கா):- tamilbold.blogspot.com  என்பதை tamilbold.com என மாற்றுங்கள். அது முடியாவிட்டால், இதேபோன்ற ஒன்றை முயற்சி செய்யுங்கள்.

                  தெரிந்து கொள்க :- 

                              1.  How to Pick a Great domain name for your blog

                              2.  Why you need to use A Custom domain name for your BlogSpot blog

நீங்கள் உங்களுக்கான domain name  ஐ   Godaddy இல் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் BlogSpot blog வைத்திருந்தால் பின்வரும் இணைப்பின் மூலம் உங்களின் custom domain name ஐ  பிளாக்கருடன் இணைத்துக் கொள்வதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

                 தெரிந்து கொள்க :-  How to add Custom domain name to your blog


ஆனால் மீண்டும், நீங்கள் wordpress.com அல்லது Blogspot.com இல் பிளாக்கை தொடங்குவதற்கு பதிலாக self hosted wordpress (wordpress.org) இல் பிளாக் தொடங்கலாம் என எப்போதும் நான் பரிந்துரைப்பேன். இந்த Wordpress guide மூலம் நீங்கள் wordpress இல் தொடங்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? Custom domain name உடன் நாங்கள் ஏன் பிளாக்கை தொடங்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கக்கூடிய வேறு சில காரணங்கள் யாவை? கீழே உள்ள comment box இல் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Post a Comment

Previous Post Next Post