Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு(topic) ஆகும். பிளாக்கை தொடங்குவது வேடிக்கையானது என்றாலும், பிளாக்கின் க...

How to Choose a blogging Niche for your New blog in Tamil?

சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு(topic) ஆகும்.

பிளாக்கை தொடங்குவது வேடிக்கையானது என்றாலும், பிளாக்கின் கடினமான பகுதி எந்த தலைப்பில் எழுதப்போகிறோம் என்பதை தேர்வு செய்வது தான். பிளாக்கிங்கில் புதியதாக இருக்கும் நம்மில் பலர் ஒரு தலைப்பைப் பற்றி எழுதி, மறுநாள் மற்றொரு தலைப்புக்குத் தாவுகிறோம்.

நீங்கள் இன்று ஸ்மார்ட்போன்களைப் பற்றி எழுதுகிறீர்கள். பின்னர் நாளை உடல்நலம் பற்றி எழுதுகிறீர்கள். பின்னர் அடுத்தவாரம் அரசியல் பற்றி பேச ஆரம்பிக்கிறீர்கள். இந்த மாதிரி செய்வது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கும். அதனால் நீங்கள் உங்களின் Targeted Audience ஐ ஈர்க்க தவறவிடுவீர்கள். 

உதாரணத்திற்கு, Tamilbold ஆனது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய வழிகளைப் பற்றியும் அது தொடர்பான விஷயங்களும் அடங்கிய பிளாக் ஆகும்.

இதன் Niche ஆனது blogging, Affiliate marketing, Wordpress, SEO மற்றும் பல. இது பல தலைப்புகள்(niche) போல் தெரிகிறது என்று எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் உற்று நோக்கினால், அனைத்தும் ஆன்லைன் மார்க்கெட்டிங்/பிளாக்கிங்/தொழில்முனைவோர் niche இன் ஒரு பகுதியாகும். 

இதேபோல், உங்களின் பிளாக்கிற்கு முதல் நாளில் இருந்தே niche இருக்க வேண்டும். குறிப்பு : நான் முதலில் பிளாக் ஆரம்பிக்கும்போது, எந்த ஒரு niche ஐயும் தேர்வு செய்யவில்லை. About me இல் கூறியபடிதான் ஆரம்பித்தேன். பின்னர் தான் இந்த niche ஐ தேர்வு செய்து எழுதுகிறேன். இதற்கு தொடர்பில்லாத நிறைய பதிவுகளையும்அழித்துள்ளேன்.

A few Tips to decide on the Niche of your blog 


Niche ஐ தீர்மானிக்கும்போது, நீங்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். 

நீங்கள் லாபத்திற்காக பிளாக்கிங் செய்கிறீர்கள் என்றால், டன் கணக்கான traffic ஐ பெறும் ஒரு topic ஐ தேர்வு செய்ய விரும்பாதீர்கள். ஏனெனில் அதில் பணம் கிடைக்காது.

இந்த மாதிரி Topics, 

  • Free SMS 
  • Free wallpaper
  • WhatsApp tips 
  • Free movie downloads 
  • Etc

இந்த Niches உங்களுக்கு அதிகமான traffic ஐ பெற்று தரும். ஆனால் அநேகமாக அதிக பணத்தை பெற்றுத் தராது.

அதேநேரத்தில், எழுதுவதற்கு மிக கடினமாக உள்ள niche ஐ நீங்கள் தேர்வு செய்யாதீர்கள். 

எனவே, ஒரு நல்ல Niche எது?

ஒரு நல்ல Niche என்பது நீங்கள் விரும்பும் விஷயங்களுடன் தொடர்புடையது. நல்ல traffic மற்றும் பணமதிப்பை கொண்டிருக்கும். அதற்கும் மேலாக உங்கள் niche -க்கு எதிர்காலம் இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு iPhone 13 வெளிவரும் போது iPhone 12 இல் ஏன் ஒரு தொழிலை மேற்கொள்வீர்கள்?

ஒரு Niche ஐ தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள் இங்கே :-

1. உங்களின் ஆர்வம் (Your interest )
2. தொழில் மதிப்பு (CPC) ( Business value )
3. மாத/வருட தேடல்கள் ( Monthly/Yearly Searches )
4. தலைப்பின் போக்கு மற்றும் எதிர்காலம் ( Trends & Future of the topic )

இப்போது உங்களுக்காக சரியான niche ஐ தேர்வு செய்ய உதவும் யோசனைகளைப் பற்றி பார்ப்போம். சரியாக இல்லாத ஒரு niche ஐ நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்தால் அல்லது பல விஷயங்களைப் பற்றி நீங்கள் பிளாக்கிங் செய்திருந்தால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் எப்போதும் உங்கள் niche ஐ மாற்றலாம்.

சரி, வாருங்கள். நமது வழிகாட்டியைப் பார்ப்போம்.

1. Brainstorm, Brainstorm, Brainstorm


உங்களுக்கு விருப்பமான தலைப்புகள் யாவை?  கிரிக்கெட்? கோலிவுட்? நாட்டுப்புற இசை? உங்களுக்கு சுவாரஸ்யமான அனைத்து தலைப்புகளின் பட்டியலையும் உருவாக்கவும்.

இந்த கட்டத்தில் பட்டியலின் நீளம் குறித்து கவலைப்பட வேண்டாம். இதில் 20 வெவ்வேறு விஷயங்கள் இருக்கலாம். இது ஒரு பொருட்டல்ல.

2. Passion or Profit or Both


"நான் மிகவும் பரபரப்பான தலைப்புகளைப் பற்றி பிளாக்கிங் செய்ய வேண்டாமா? எல்லோரும் கூகிள் செய்யும் விஷயங்கள்?"

ம்ம்ம்...நல்ல கருத்து.

எடுத்துக்காட்டாக, தொழில்நுட்பம் பற்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் பைத்தியம் போல் கூகிள் செய்கிறார்கள்.(இந்திய பிளாக்குகளில் 90% ஐடியில் இருந்து வந்தவர்களுக்கு சொந்தமான தொழில்நுட்ப பிளாக்குகள் என்பதில் ஆச்சர்யமில்லை)

ஆனால் நீங்கள் தொழில்நுட்பத்தில் சுத்தமாக ஆர்வம் இல்லாதவர் அல்லது அதில் நிபுணத்துவம் பெற்றவர். இது ஒரு பரபரப்பான விஷயம் என்பதால் நீங்கள் ஒரு தொழில்நுட்ப பிளாக்கை தொடங்க வேண்டுமா?

 நிச்சயமாக, நீங்கள் ஒரு மணி நேரத்தில் பிளாக்கிங் செய்ய தொழில்நுட்பத்தைப் பற்றிய போதுமான தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் பிளாக்கிங்கில் வெற்றியை அடைவது என்பது ஒரு நீண்ட செயல்முறை.

முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று பார்வையாளர்களை பெறுவீர்கள். உங்கள் பிளாக்கின் niche -க்காக web இல் தேடிப் படித்து அவற்றிலிருந்து அர்த்தமுள்ள கருத்துகளைத் தெரிவிக்க முயற்சி செய்கிறீர்கள்.

உங்களுக்கு ஆர்வமில்லாத தலைப்பில் தரமான உள்ளடக்கத்தை உருவாக்க இரவும் பகலும் பாராமல் உழைக்க முடியும் என உறுதியாக இருக்கிறீர்களா...அதாவது ஒரு வருடத்திற்கு, இரண்டு வருடத்திற்கு, ஐந்து வருடத்திற்கு.

The Golden Rule :- உங்களுக்கு விருப்பமில்லாத தலைப்புகளை (niche or topic) தேர்ந்தெடுக்க வேண்டாம்.

3. Competition : Cricket Vs German Shepherd Hair care 


உங்களுக்கு ஆர்வமுள்ள அல்லது விருப்பமுள்ள தலைப்புகளின் பட்டியலை உருவாக்கிவிட்டீர்கள். அதில் கிரிக்கெட் முதலில் உள்ளது.

நீங்கள் கிரிக்கெட்டிலே மூழ்கி உள்ளீர்கள். சாப்பிடும்போதும் கிரிக்கெட், தூங்கும் போதும் கிரிக்கெட், கனவு காணும் போதும் கிரிக்கெட் என இருக்கிறீர்கள்.

எனவே நீங்கள் கிரிக்கெட் வலைப்பதிவை தொடங்க வேண்டுமா? அதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது.

Cricinfo.com, Cricketnext.in மற்றும் Oneindiacricket போன்றவற்றிலிருந்து உங்களுக்கு கொஞ்சம் போட்டி இருக்கும்.

சரி, எனவே நீங்கள் அந்த niche இன் போட்டி நோக்கத்தைப் புரிந்துகொண்டு கிரிக்கெட்டை வேண்டாம் என நிறுத்துகிறீர்கள்.

இப்பொழுது என்ன? உங்களுக்கு பிடித்த மற்றொரு தலைப்புக்கு செல்லுங்கள். அதாவது இரண்டாவதாக உள்ள German shepherd hair care -ற்கு. 

நீங்கள் கூகுளில் தேடலை செய்கிறீர்கள். அதில் எவ்வித போட்டியும் இல்லை. Zero competition ஆக இருக்கிறது. எனவே நீங்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் விஷயத்தில் உங்கள் வலைப்பதிவை உருவாக்க முடியுமா?

மீண்டும் யோசியுங்கள்.

போட்டி பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால் அதற்கான demand என்ன?

ஒவ்வொரு மாதமும் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் அதை கூகிள் செய்வார்களா?

உங்கள் ஆர்வம்(interest), பிரபலமான போக்குகள்(popular trends), மற்றும் போட்டியின் நிலை(level of competition) ஆகியவற்றில் சமநிலையை ஏற்படுத்துவதே முக்கியம். அதாவது இந்த மூன்றும் பொருந்தும் வகையில் உள்ள niche ஐ தேர்ந்தெடுங்கள்.

4. Long-Term Potential


"Current events" பற்றி எழுதுவது தற்போது பிரபலமாக உள்ளது. இது உங்கள் ஆர்வங்களின் பட்டியலிலும் முதலாவதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் www.indiaelection2021.com போன்ற பிளாக்கை தொடங்க வேண்டாம். இதுபோன்ற ஒன்று நீண்ட காலத்திற்கு மதிப்பை கொண்டிருக்காது. இது இந்த 2021 தேர்தல் வரை மட்டுமே மதிப்பைக் கொண்டிருக்கும். அதன் பின்பு இத்தளத்திற்கு பார்வையாளர்கள் யாரும் வரமாட்டார்கள்.

காலத்தால் அழியாத ஒரு தலைப்பை தேர்வு செய்யுங்கள். இதைச் செய்வதற்கான ஒரு வழி, Evergreen topics இல் பிளாக்கிங் செய்வது. 

Google trends ஐ பயன்படுத்தி எந்தவொரு தலைப்பு காலத்திற்கும் மதிப்பைக் கொண்டிருக்கும் என தேடிப் பார்க்கலாம். உதாரணத்திற்கு,
5. Why would people listen to me?


மக்கள் ஏன் என் பேச்சை கேட்பார்கள்?

எனவே இப்போது மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில் உங்கள் பட்டியலை 3 அல்லது 4 தலைப்புகளாகக் குறைத்துள்ளீர்கள். தனித்துவமான content ஐ வழங்குவதற்கான திறனை இந்த தலைப்புகளில் எது உங்களுக்கு வழங்குகிறது என்பதை இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அது இதுவாகக் கூட இருக்கலாம்.
  • அனுபவம் (அனைத்து இடங்களுக்கும் பயணிப்பது உங்களுக்கு ஒரு travel blog ஐ எழுதுவதற்கு தேவையான ஒரு தகுதி).
  • பல்கலைக்கழகத்தில் ஒரு தலைப்பின் விரிவான ஆய்வுகள்
  • அடிப்படையாக எழுதுவது கூட (basic writing). இந்தியாவில் தனிப்பட்ட பிளாக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

என்னோட விஷயத்தில், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி இணையத்தில் தேடிய போது தமிழில் எந்த தகவலும் அவ்வளவாக கிடைக்கவில்லை. அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. அதன் காரணமாக பணம் சம்பாதிக்கும் பொருட்டு, பிளாக் ஆரம்பிக்கலாம் என தொடங்கி மருத்துவம், சமையல் குறிப்பு, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது, அழகு குறிப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் பிளாக்கை தொடங்கினேன். என்னை மாதிரி தமிழில் படிக்க விரும்பும் நபர்களுக்கு என்னுடைய பிளாக் உதவும் என நினைத்து தமிழில் தொடங்கினேன். பின்னாளில் இணையத்தில் படிக்க படிக்க, ஒரு வலைதளத்திற்கு niche என்பது மிக முக்கியம் என அறிந்து, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது மற்றும் அதற்கான வழிமுறைகளைப் பற்றி இணையத்தில் இருந்து படித்து, தமிழில் என்னுடைய இந்த பிளாக்கில் எழுதி வருகிறேன்.

நான் பிளாக் தொடங்கும்போது niche ஐ  பற்றி எனக்கு தெரியாது. அதனால் மிகவும் சிரமப்பட்டேன். எனது நேரமும் வீணாய் போனது.

எனவே சுருக்கமாக, உங்கள் பிளாக்கின் niche ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் எழுத விரும்பும் நீண்ட கால திட்டத்தைக் கண்டறியுங்கள். உங்களை கவர்ந்திழுக்கும் தலைப்பை(topic) கண்டறியுங்கள். எல்லாவற்றையும் விட நீங்கள் விரும்பும் ஒன்றைக் கண்டறியுங்கள்.

பிளாக்கிங் என்பது அறிவைப் பகிர்வது மட்டுமல்ல. இது உங்களைப் பயிற்றுவிப்பது மற்றும் உங்கள் சொந்த புரிதலை மேம்படுத்துவது பற்றியும் ஆகும்.

இந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்கான ஒரு நல்ல niche ஐ அடையாளம் காணுங்கள். நீங்கள் விரும்பினால் கீழே உள்ள கருத்துகளில் அந்த niche என்ன என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

0 comments: