இன்றைய சூழலில் பணம் சம்பாதிக்க ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் Internet மூலமாக பணம் சம்பாதிப்பது என்பது ஒரு எளிமையான வழி .மாணவர்கள், பெண்கள், பகுதி நேரம் வேலைதேடுபவர்கள், முழு நேரமும் இணையத்தை பயன்படுத்துபவர்கள், நேரத்தை வீணடிக்கக்கூடாது என நினைப்பவர்களுக்கு internet மூலமாக பணம் சம்பாதிப்பது என்பது ஒரு வரப்பிரசாதம் .
Online இல் internet மூலமாக பணம் சம்பாதிக்கும் சிறப்பான வழிகள் :
1. Do Blogging
எளிமையாக பணம் சம்பாதிக்க கூடிய வழிகளில் முதலில் இருப்பது Blogging மட்டுமே. விளம்பரங்களை உங்களது blog இல் இடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு உங்களது blog இல் போதுமான அளவிற்கு உள்ளடக்கம் (content ) இருக்க வேண்டும். தினமும் 100 பேராவது உங்களது blog ஐ பார்க்க கூடிய அளவிற்கு content இருக்க வேண்டும். Google AdSense மூலமாக விளம்பரங்களை பெற்றுக் கொண்டு blog இல் விளம்பரப்படுத்தலாம்.
Yahoo, Media.net, wordpress.com ஆகியவை மூலமாகவும் விளம்பரங்களை பெற முடியும். மேலும் Affiliate Marketing மூலமாகவும் இதில் பணம் சம்பாதிக்க முடியும்.
2. Become an online teacher
நீங்களும் online மூலமாக ஆசிரியர் ஆகலாம். உங்களுக்கு கற்பிக்கும் ஆசையும் திறமையும் இருந்தால் நீங்களும் ஆசிரியர் தான். Skill Share
என்றசேவை online இல் கற்பிக்க கூடிய அமைப்பை கொண்டுள்ளது. இதில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி, விருப்பமான பாடத்தை தேர்வு செய்து கற்பிக்கலாம். நீங்கள் நடத்தும் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தரும் கட்டணம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். மேலும் Udemy என்ற சேவை மூலமாகவும் online இல் பாடம் நடத்தலாம்.
3.Write e -books
உங்களுக்கு கதை எழுதும் பழக்கம் இருந்து , அக்கதையை புத்தகமாக வெளியிட ஆசை இருந்தால் அதனை ஒரு E-book ஆக எழுதி பணம் சம்பாதிக்கலாம். MS Word ஐ பயன்படுத்தி உங்களது புத்தகத்தை எழுதலாம். எழுதிய புத்தகத்தை Amazon's kindle, Google play store, Apple's store ( ibooks ) இல் வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம். இந்தியாவில் வெளியிட Flipkart, infibeam ஆகியவை சிறந்தவை.
4.Earn money online through Youtube channel
உங்களிடம் ஒரு camera இருந்தால் போதும். அதன்மூலம் video எடுத்து சிறிது edit செய்து Youtube இல் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி பதிவேற்றப்பட்ட வீடியோக்களை Monetize செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் முடியும்.
5.Sell photos online
புகைப்படம் எடுப்பது உங்களுக்கு பிடித்தமான ஒன்றா, அதில் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவரா, அப்படியென்றால் நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை Creative market, Shutterstock போன்றவற்றில் பதிவிட்டு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும்.
மிக பயனுள்ளதாக பதிவு
ReplyDeleteஎன்னை போன்றவர்களுக்கு மிக முக்கியமான செய்தி
மேலும் பயனுள்ளதாக பதிவுகளை வெளியிட்ட வாழ்த்துக்கள்.
நல்ல விளக்கம்! நானும் பிளாகர் தொடங்கியுள்ளேன்! http://www.tamilnadu360.in.net
ReplyDeleteமிக தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி
ReplyDeleteஎஸ்
ReplyDelete