- உலகிலேயே மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 1.27 மில்லியன் square miles.
- மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மிக விரைவில் முதலிடத்தில் உள்ள சீனாவை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவின் மக்கள் தொகையில் 35 சதவிகிதத்தினர் ஏழைகளாகவே உள்ளனர்.
- உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான்.செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியா தான்.
- செஸ் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையான சதுரங்கா என்பதில் இருந்தே தோன்றியது.
- பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். கணிதத்தில் பயன்படும் calculus, trigonometry, algebra, decimal systems போன்றவைகளும் இந்தியாவில் தோன்றியவையே.
- 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்துக்களின் பண்டிகையான கும்பமேளா தான் உலகிலேயே அதிக மக்களால் கலந்து கொள்ளப்பட்ட விழாவாகும். 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி 60 மில்லியன் மக்கள் அந்த விழாவில் பங்கேற்று உள்ளனர். இதனை செயற்கைக்கோள் மூலமாகவும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
- இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட கிரிக்கெட் தான் இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டு.
- இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 18. ஆனால் 1652 மொழிகள் இந்தியாவில் வாழ்கின்ற மக்களால் பேசப்படுகிறது.
- ரசியா சுல்தானா என்ற பெண்தான் இந்தியாவின் (1205 -1240) முதல் பெண் தலைவர். இவர் மிகச் சிறந்த தலைவராகவும் இருந்துள்ளார்.
- இந்தியாவின் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். 13 சதவீத மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர். இருந்தாலும் உலகிலேயே முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களில் அதிக மக்கள் தொகையை கொண்ட மூன்றாவது நாடு இந்தியாதான். இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- புதுடில்லி தான் உலகிலேயே அதிக காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் முதன்மையாக உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 1.27 மில்லியன் square miles. ...
Top 10 interesting facts about India (தமிழில்)
Share This
About author: RAJADHURAI R
என் பெயர் ராஜதுரை. நான் இயந்திர பொறியியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளேன். ஒரு நாள் இணையத்தில் சில விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக தமிழில் தேடினேன். ஆனால் அந்த தருணத்தில் போதுமான அளவிற்கு எந்த தகவலும் தமிழில் கிடைக்கவில்லை. அப்பொழுது உருவானதுதான் இந்த பிளாக். எனக்கு தெரிந்த மற்றும் படிக்கின்ற தகவல்களை தமிழில் தருவதே இந்த பிளாக்கின் நோக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: