Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

1.அண்ணா பல்கலைக்கழகம்  தமிழக  அரசின் கீழ் இயங்குகிறது. 2.1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,  சென்னையின்  பழம்பெரும் தொழில்நுட்ப க...

Top 10 facts about Anna university



1.அண்ணா பல்கலைக்கழகம்  தமிழக  அரசின் கீழ் இயங்குகிறது.

2.1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரிஅழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரிமெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

3.பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

4.அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 426 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

5.குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்




  • கிரேசி மோகன், பிரபல தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியர், நடிகர்.




  • ராஜ் ரெட்டி, 1994ம் ஆண்டிற்கான டியூரிங் பரிசு வென்றவர், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வர்.




6.அண்மையில் தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7.2006  ஆம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு மூலமாகவே சேர்க்கை நடைபெற்றது.அதன்பிறகு 12th மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

0 comments: