தலை கனத்தோடும்
வாழாதே .....
தன்மானத்தை விட்டுக் கொடுத்தும் வாழாதே ...
**************
நீ புரிந்து கொள்ளாத எதுவும்
உன்னிடம் நி்லைக்காது..
நீ புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு நீங்காது!!!
***********
கோபத்தோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்....மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அறுபது வினாடிகளை இழக்கிறோம்!
*************
அம்மாவின் அன்பு வேறோர் இடத்தில் கிடைத்தால், அது தான் உண்மையான நட்பு.
*************
எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த
காலத்தை மறக்க வைக்க
முடிகிறதோ, அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம்
ஆகிறாள்...!!!!!
**************
எதிர்கருத்து கொண்டவனை எதிரியாகவும்,
ஜால்ரா அடிப்பவனை நண்பனாகவும் பார்க்கிறது உலகம்..
***************
5 வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும்.
**************
தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல்,
மேலும் அதை நியாயப்படுத்திக் கொண்டு இருந்து தவறு செய்கிறோம்.
0 comments: