ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை யாருக்காவது Email அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதனை தனித்தனியாக அனுப்புவது என்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும் .இதனை Zip File -ஆக மாற்றினால் எளிதாக அனுப்ப முடியும் ,மேலும் பாதுகாப்பானதாகவும் கோப்பின் அளவு குறைவானதாகவும் இருக்கும் .
- முதலில் Zip file ஐ உருவாக்குவதற்கு ஒரு Empty folder ஐ உருவாக்க வேண்டும் .
- இதில் Zip file ஆக மாற்ற வேண்டிய அனைத்து கோப்புகளையும் copy செய்து paste செய்ய வேண்டும் .
- பிறகு நாம் உருவாக்கிய folder மீது Right click செய்து send to என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
- பின்பு அதில் compressed (zipped )folder என்பதை கிளிக் செய்தால் Zip file உருவாகிவிடும் .
- மேலும் 7-zip , winzip , winrar போன்ற software களை பயன்படுத்தியும் Zip file ஐ உருவாக்க முடியும் .
Tags:
HOW TO