டென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்: கொஞ்சம் நேரம் சிரிங்க


whatsapp funny jokes of the day tamil

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப் ஜோக்குகள் இதோ 



��‍♂ தக்காளி சோறு பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல்!


��‍♂ பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்! 

�� சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்! 
���� 

***** 

�� பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு 

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு... 

அவன் தான் நகை கடைக்காரன்�� 


மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! 
எவ்வளவு அதிகாரங்கள். 

������
******************** 

��நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், 

��மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்.. 

******************* 

��மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன். 

��கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது ��



சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....? 

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா.....? 

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்..... 

கல்யாணத்துக்கு முன்னாடி, 
எனக்கு முருகனைத்தான் 
ரொம்பப் பிடிக்கும் ..... 

அப்போ பின்னாடி.....? 

அட, 
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் 
நான் வேண்டாத தெய்வமே 
இல்லை.....!!! 

**** 



சத்தியவான் சாவித்திரி ..... 
தன் கணவனை..... 
எமதர்ம ராஜாவிடமிருந்து 
தன் தந்திர வரங்களால் 
கடுமையாகப் போராடி மீட்டாள்..... 

கதையின் கருத்து :-- 
ஒரு புருஷன... 
பொண்டாட்டிகிட்ட இருந்து ..... 
எமதர்மனால கூட 
காப்பாத்த முடியாது.....!!! 

***** 

மனைவி: 
ஏங்க! உங்களைக் 
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு 
என் புத்தியை 
செருப்பாலத்தான் 
அடிச்சுக்கோணும்.....! 

கணவன்: 
செருப்பு இந்தா இருக்கு.....! 
புத்திக்கு எங்கே போவ!!??

Post a Comment

Previous Post Next Post