Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

  “ வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். *வ...

whatsapp stories - "👫 *இரு வேறு பார்வைகள்* "



 வீட்டிலே காபி கொடுத்தாள்
மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.
அதைக் கண்ட கணவன் காபியை
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான்.
*விளைவு? சண்டை.* சந்தோசமான
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.
அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.
*உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.*
மனைவி சிரித்தாள்.
தன் தவற்றை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.
அவர்கள் *வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை*.

*குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே.*

*மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல*

0 கருத்துகள்: