Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

why doesn't honey expire? தேனீ மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனை வாயில் வைத்துக் கொள்வதில்லை. கூட்டுக்குச் செல்லும் போது ...

தேன் ஏன் கெட்டுப் போவதில்லை? - why doesn't honey expire?

why doesn't honey expire?


தேனீ மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனை வாயில் வைத்துக் கொள்வதில்லை. கூட்டுக்குச் செல்லும் போது அதற்கென்று வயிற்றுக்குள் ஒரு பை வைத்திருக்கிறது. அதில்தான் கொண்டு போகிறது.
இந்த பையில் இருக்கையில் பூவின் தேன் சில இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. அதிலிருக்கும் சர்க்கரை வகைகள் மாறுகின்றன.
தேன் இந்த மாறுதலுக்குப் பின் தேன் கூட்டில் சேகரித்து வைக்கப்படுகிறது.இன்வர்டோஸ் எனும் நொதியை அதில் சேர்க்கிறது .
கூட்டின் சூடும் காற்றோட்டமும் சேர்ந்துக் கொண்டு தேன் இறுகுகிறது. அதில் இருக்கும் ஈரம், தண்ணீர் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகிறது மேலும் தேனீ தன் இறக்கையாலும் விசிறியடித்தும் தேனை இறுக வைக்கிறது.
நீர் நீக்கப்படுவதாலும் ரசாயன வகையில் தேனீயின் வயிற்றில் மாற்றம் ஏற்படுவதாலும் தேன் நீண்ட காலம் கெடாமல் இருக்கிறது.

0 comments: