Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சமையல் குறிப்பு  கேப்பை , கோதுமை மாவு புட்டு தேவையானவை : கேப்பை மாவு  - அரைக் கிண்ணம்  கோதுமை மாவு  - அரை கப்  பொடித்த வெல்ல...

கேப்பை , கோதுமை மாவு புட்டு

சமையல் குறிப்பு 

கேப்பை , கோதுமை மாவு புட்டு



தேவையானவை :

  • கேப்பை மாவு  - அரைக் கிண்ணம் 
  • கோதுமை மாவு  - அரை கப் 
  • பொடித்த வெல்லம் - ஒரு கிண்ணம் 
  • ஏலக்காய் தூள் கால் -  தேக்கரண்டி
  •  தேங்காய் துருவல் -  அரை கிண்ணம் 

செய்முறை :

        வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் ஒவ்வொரு வகை மாவையும் போட்டு பொன்னிறமாக நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒரு சிட்டிகை உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக புட்டு மாவு பதத்திற்கு பிசையவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து பரத்தி 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். பிறகு, எடுத்து ஒரு தட்டில் போட்டு பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

0 comments: