Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

                                          Can planes fly in Thunderstorms? விமானங்கள் இடி மின்னலின் போது பெரும்பாலும் பாதிப்படைவதில்லை. ...

இடி, மின்னலின் போது விமானங்கள் வானில் பறந்தால் என்ன நிகழும்? - Can Planes Fly in Thunderstorms?

                                         Can planes fly in Thunderstorms?

விமானங்கள் இடி மின்னலின் போது பெரும்பாலும் பாதிப்படைவதில்லை. ஏனெனில் விமானங்கள் மேகங்களுக்கு மேலே பறந்து செல்கின்றன.அப்படியே மின்னல் தாக்கினாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது.
பூமியின் வளிமண்டலமானது ஐந்து அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பின்வரும் படத்தில் அவற்றை காணலாம்.

முதல் அடுக்கான ட்ரப்போஸ்பியரில் தான் பெரும்பாலான வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இடி, மின்னல் மற்றும் மழைக்கு காரணமான மேகங்கள் இந்த அடுக்கில் தான் காணப்படுகின்றன.ஆனால் விமானங்கள் இதற்கு அடுத்த அடுக்கான ஸ்ட்ரட்டோஸ்பியரில் பறக்கின்றன. அதனால் தான் வானிலை மாற்றங்களால் விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

சரி விமானங்கள் தரையிறங்கும் போது உள் அடுக்கிற்கு வந்து தானே ஆக வேண்டும். அப்போது இடி மின்னலால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது.
“மின்னலின் போது வெட்டவெளியில் நிற்பதை விட காரில் இருப்பது பாதுகாப்பானது” என்று நாம் பள்ளியில் படித்து இருக்கிறோம் அல்லவா?
ஏனெனில் மூடிய உலோக சுற்றின்‌ வழியே பாயும் மின்னோட்டமானது அதன் உட்புறம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனை ஃபாரடே விளைவு என்பர்.
விமானத்திலும் நாம் மூடிய உலோக/அலோக சுற்றின் வழியே பயணிப்பதால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விமானத்தை சுற்றி பாய்ந்த மின்னோட்டமானது அடுத்து தரையிறங்க முடியாத காரணத்தினால் காற்றில் சென்றுவிடும். இதனால் விமானத்திற்கும் எந்தவித பெரிய பிரச்சனையும் ஏற்படாது. மின்னோட்டம் பாய்ந்து வெளியேறும் இடம் மட்டும் சற்று பாதிப்படைந்தாலும் கணக்கில் எடுத்து கொள்ளும் அளவிற்கு இருக்காது.


0 கருத்துகள்: