Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

நேரடியாக மலர்களில் இருப்பது தேன் அல்ல. தேன் செய்யத் தேவையான் மூலப்பொருளே அது. மலர்களில் உள்ள மதுரம் (Nectar) நீர் போன்றிருக்கும் ஒரு...

ஏன் நுண்ணுயிரிகள் தேனில் வளர்வதில்லை?



நேரடியாக மலர்களில் இருப்பது தேன் அல்ல. தேன் செய்யத் தேவையான் மூலப்பொருளே அது. மலர்களில் உள்ள மதுரம் (Nectar) நீர் போன்றிருக்கும் ஒரு இனிப்பான திரவம். இந்தத் திரவத்தினை நாம் சேகரித்து வைத்தால் அது தேனாகாது. கெட்டும் போய் விடும். காரணம் அதில் இருக்கும் நீர்.
மலர்களில் இருந்து மதுரத்தை உரிஞ்சின தேனீக்கள் தங்களது இரைமப்பைகளில் பயன்படுத்தி,கரும்புச் சர்க்கரையை ப்ரக்டோஸாகவும் குளுக்கோஸாகவும் மாற்றி தங்கள் வீடு சென்றதும் அறைகளில் உண்ட மதுரத்தினைத் துப்புகின்றன. பிறகு அதிலிருக்கும் நீர் வெப்பத்தில் ஆவியாகிறது. அதற்கு தேனீக்கள் தங்களை இறக்கைகளை ஆட்டி ஆட்டியும் நீர் ஆவியாக உதவுகின்றன. அவ்வாறு அவை செய்யும் போது மதுரம் தேனாக உருமாறுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட நீர் இல்லாத தேனில் நுண்ணுயிர்கள் உருவாகும் சாத்தியமே மிக மிக குறைவு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தேன் இன்றும் உண்ணும் படி கெடாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: