Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சமையல் குறிப்பு தேவையானவை : வெண்டைக்காய் - கால் கிலோ  பெரிய வெங்காயம் - 4  தக்காளி - 2  பூண்டு - நான்கு அல்லது ஐந்து பல்  சீ...

வெண்டைக்காய் சப்ஜி

சமையல் குறிப்பு


தேவையானவை :

  • வெண்டைக்காய் - கால் கிலோ 
  • பெரிய வெங்காயம் - 4 
  • தக்காளி - 2 
  • பூண்டு - நான்கு அல்லது ஐந்து பல் 
  • சீரகம் - 2 தேக்கரண்டி 
  • காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி 
  • சமையல் எண்ணெய் -தேவைக்கேற்ப 
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

         வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை சிறியதாக இருந்தால் அதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவும், பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கி கொள்ளவும். அதனுடன் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழையை  தூவி இறக்கவும். சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி. இந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

#சமையல் குறிப்பு
# வெண்டைக்காய் சப்ஜி

0 கருத்துகள்: