Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சமையல் குறிப்பு தேவையானவை  : திணை அரிசி மாவு - ஒரு கிண்ணம்  பொரி கடலை மாவு - ஒரு கிண்ணம்  பம்பாய் ரவை - ஒரு கிண்ணம்  பொடித்...

திணை அரிசி ரவா லட்டு

சமையல் குறிப்பு




தேவையானவை  :

  • திணை அரிசி மாவு - ஒரு கிண்ணம் 
  • பொரி கடலை மாவு - ஒரு கிண்ணம்
  •  பம்பாய் ரவை - ஒரு கிண்ணம் 
  • பொடித்த வெல்லம் - இரண்டரை கிண்ணம் 
  • பால் பவுடர் - அரை கிண்ணம் 
  • குளுக்கோஸ் பவுடர் - அரை கிண்ணம்
  •  டைமண்ட் கல்கண்டு - கால் கிண்ணம் 
  • முந்திரிப் பருப்பு  - 15
  •  உலர்ந்த திராட்சை - 15 
  • ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
  •  நெய் - தேவைக்கேற்ப 

செய்முறை  :

         வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி நெய் விட்டு, ஒவ்வொரு மாவு வகை,  ரவையை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு அதனுடன் பொடித்த வெல்லம், பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். டைமண்ட் கல்கண்டு, நெய்யில் வறுத்த உலர்ந்த  திராட்சை, முந்திரி பருப்பு சேர்த்து கலக்கவும். பின்னர், நெய்யைக்  காய்ச்சி  ஊற்றி, கலந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான லட்டு ரெடி.

#சமையல்குறிப்பு
# திணை அரிசி ரவா லட்டு

0 கருத்துகள்: