Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

சமையல் குறிப்பு தேவையானவை : கோதுமை மாவு -  ஒரு கிண்ணம்  வேகவைத்த பட்டாணி - அரை கிண்ணம்  புதினா மற்றும் மல்லித் தழை - 2 கட்டு  ப...

புதினா சப்பாத்தி

சமையல் குறிப்பு


தேவையானவை :

  • கோதுமை மாவு -  ஒரு கிண்ணம் 
  • வேகவைத்த பட்டாணி - அரை கிண்ணம் 
  • புதினா மற்றும் மல்லித் தழை - 2 கட்டு 
  • பச்சை மிளகாய் - 2 
  • நெய் - ஒரு தேக்கரண்டி 
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி 

செய்முறை :

       புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் மூன்றையும் மிருதுவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் கோதுமை மாவு, சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு சுட்டு பரிமாறவும்.  இதற்கு பதிலாக கேரட் சேர்த்து சப்பாத்தி செய்தால் ஆரஞ்சு வண்ண சப்பாத்தி தயார். பச்சை, ஆரஞ்சு, வண்ண சப்பாத்திகளை பார்த்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்க மாட்டார்கள். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

#சமையல் குறிப்பு
# புதினா சப்பாத்தி

0 comments: