Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவையானப்பொருட்கள் : கோதுமை ரவா - 1 கப் துவரம்பருப்பு - 1/2 கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் பயத்...

சத்து நிறைந்த கோதுமை ரவா அடை

தேவையானப்பொருட்கள் :
  • கோதுமை ரவா - 1 கப்
  • துவரம்பருப்பு - 1/2 கப்
  • கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 4
  • பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை - சிறிது
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு    


செய்முறை :
  • வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

  • கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

  • பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  • அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 

  • தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

  • விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.source : malaimalar 

0 comments: