Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன்,  சின்ன வெங்காயம் - 15,  தனியா - 1 டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,  ...

சுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!

தேவையான பொருட்கள்:
  • சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன், 
  • சின்ன வெங்காயம் - 15,
  •  தனியா - 1 டீஸ்பூன், 
  • காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,
  •  வெந்தயம் - 3 டீஸ்பூன், 
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு, 
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், 
  • பெரிய தக்காளி - 1, 
  • நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்,
  •  மிளகு - 1/2 டீஸ்பூன்,
  •  உப்பு - தேவையான அளவு, 
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 
  • பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), 
  • வெல்லம் - சிறிது, 
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து.
சுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!
செய்முறை:
  • கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
  • இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.
  • அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.
  • உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்
  • சுவையான வெந்தயகுழம்பு தயார்.

0 கருத்துகள்: