Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவையான பொருட்கள்: உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,  பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது),  தயிர் - 2 டீஸ்பூன்,  திராட்சை (பச்சை, கறுப...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெசிபி!

தேவையான பொருட்கள்:

  • உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், 
  • பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது), 
  • தயிர் - 2 டீஸ்பூன், 
  • திராட்சை (பச்சை, கறுப்பு) - தலா 10, 
  • மாதுளை முத்துகள் - 2 டீஸ்பூன்,
  •  கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 
  • இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 
  • எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
செய்முறை!


  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி போட்டு தாளிக்கவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
  • இதனுடன் பால், தயிர், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்
  • அதனுடன் தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பிறகு பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், ஆகியவற்றை சேர்க்கவும். இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது. 
  • சூப்பரான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெடி.

0 கருத்துகள்: