Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவை :   இட்லி  மாவு                         -  4 கப்  சேமியா                                   -  100 கிராம்  பெரிய வெங்காயம்      -...

சேமியா தோசை செய்வது எப்படி ?

தேவை :

 இட்லி  மாவு                         -  4 கப் 
சேமியா                                   -  100 கிராம் 
பெரிய வெங்காயம்      -  4
தக்காளி                                   -  4
மிளகாய் தூள்                     -  2 டீஸ்பூன்  
சீரகத்தூள்                              -  2 டீஸ்பூன் 
கடுகு                                           -  1 2 டீஸ்பூன் 
புதினா ,மல்லி                     -  தலா அரை கட்டு 
உப்பு ,எண்ணெய்            -  தேவையான அளவு 


செய்முறை : 

                 சேமியாவை  1 டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து கொதி நீரில் போட்டு வேக வைத்து  வடித்து வையுங்கள் .(வறுத்த சேமியாவாக இருந்தால் மீண்டும் வறுக்க வேண்டியது இல்லை ).வெங்காயம் ,தக்காளி ,புதினா ,மல்லியை பொடியாக நறுக்குங்கள் .2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் கடுகை தாளித்து வெங்காயம் ,தக்காளியை வதக்குங்கள் .உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சுருள கிளறி பிறகு சேமியா ,சீரகத்தூள் சேர்த்து கிளறி இறக்குங்கள் .மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி அதன்மேல் சேமியா கலவையை பரவலாக வையுங்கள் .அதன்மேல் புதினா மல்லியை தூவி சற்று அழுத்திவிடுங்கள் .சுற்றிலும் எண்ணெய் விட்டு ,இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள் .சுவையான சேமியா தோசை ரெடி .

0 comments: