Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவையான பொருட்கள்  : கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது. வெங்காயம் - 2 பீட்ரூட் - 2 இஞ்சி - சிறிய துண்டு பூண்...

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பீட்ரூட் - கேரட் சூப்

தேவையான பொருட்கள்  :
  • கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
  • வெங்காயம் - 2
  • பீட்ரூட் - 2
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு -  5 பல்
  • காய்கறி சத்து நீர் - 7 கப்
  • உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு 


செய்முறை :

  • கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

  •  பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். 

  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும். 

  • இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும். 

  • இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

  • சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.source :malaimalar 

0 கருத்துகள்: